‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ – மாணவர்களுக்கு தெரிவிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு 

சென்னை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட … Read more

ஓ.பன்னீர்செல்வம் போட்ட ஸ்கெட்ச் – எடப்பாடி பழனிசாமி செம ஷாக்!

தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், கட்சியில், புதிய நிர்வாகிகளை நியமிக்க, முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஇஅதிமுகவில், கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இரட்டைத் தலைமை விவகாரம், கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக, எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த … Read more

மின்சார சட்டத் திருத்த மசோதா: கடுமையாக எதிர்க்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சார சட்டத்திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். நாடாளுமன்றத்தில் இன்று மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பிருந்தே மின்சாரம் தனியார்மயமாக்கப்படும் என்ற அச்சத்தில் பலதரப்பட்ட எதிர்ப்புகள் எழுந்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் மின்சார சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது, திமுக தலைவர், முதல்வர் இந்த மசோதாவை எதிர்த்து … Read more

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு: கள நிலவரம் என்ன?

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் பொங்கி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்துள்ள நிலையில், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று பகல் … Read more

மின்சார திருத்த மசோதாவால் என்னென்ன பாதிப்புகள்? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை கடுமையாக எதிர்ப்பதாக, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்டத்திருத்த மசோதா குறித்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மின்சார மசோதாவிற்கு முதலமைச்சர் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார். இந்த சட்டத்திருத்த மசோதா … Read more

சோளக்காட்டில் கிடந்த நகைப் பெட்டிகள்.. கள்ளக்குறிச்சி நகைக்கடையில் 200 சவரன் திருட்டு!

கள்ளக்குறிச்சி அருகே நகைக் கடையின் பூட்டை உடைத்து 200 பவுன் நகை கொள்ளை போனதாக நகைக்கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி என்ற இடத்தில் லோகநாதன் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை விடுமுறை விடப்பட்டிருந்தது அதனைத் தொடர்ந்து இன்று காலை லோகநாதன் கடை அருகே வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து கடையை திறந்து பார்த்தபோது சுமார் 200 பவுன் தங்க நகையும் 10 கிலோ … Read more

“காவிரி – குண்டாறு திட்டப் பணி நடப்பதெல்லாம் கே.பாலகிருஷ்ணனுக்கு தெரியாது” – துரைமுருகன் பதில்

வேலூர்: காவிரி – குண்டாறு திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி – குண்டாறு திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவருக்கு திட்டம் என்னவென்றே தெரியாது. … Read more

அமைச்சர் நாசர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி?

பால்வளத் துறை அமைச்சர் நாசர் மீது, முதலமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்தே, தன் மீதும், தனது தலைமையிலான அரசு மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் வந்து விடக் கூடாது என்பதில், மிகுந்த கவனமாக உள்ளார். எனினும், அவ்வப்போது திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு வந்துக் கொண்டே இருக்கிறது. இது போதாது என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, வாரந்தோறும் ஏதாவது ஓர் … Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனத்திற்காக காத்திருக்க வைக்கப்பட்டதா ஆம்புலன்ஸ்.. நடந்தது என்ன?

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகையை ஒட்டி, ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ஆம்புலன்ஸ் ஒன்று பாலத்தின் ஒரு முனையில் காத்திருக்க, பாலத்தின் வழியாக வாகனங்கள் சில நொடிகள் செல்கின்றன. அந்த வாகனங்கள் முழுவதுமாக சென்ற பின்னர் ஆம்புலன்ஸ் பாலத்தினுள் செல்கிறது. அன்று நடந்தது என்ன? தமிழகத்தில் காவிரி பாயும் பகுதியில் கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழ்நாடு அரசு சார்பில் … Read more

13 ஆடு, 2 நாய்… கிராமங்களில் புகுந்து வேட்டையாடும் சிறுத்தை: பொள்ளாச்சி பீதி

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தைகள் அட்டகாசம் தொடர்ந்து வரும் நிலையில். தோட்டத்தில் இருந்த நாயை அடித்துக் கொன்றுள்ளது. மேலும் ஆடுகளையும் வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் புளியங்கண்டி மலை அடிவாரப் பகுதியில் ஒரக்காளியூர் தனியார் தோட்டத்தில் கடந்த சில மாதங்கள் முன்பு 13 ஆடுகளை சிறுத்தை அடித்துகொன்றது. தொடர்ந்து சில தினங்களில் புளியங்கண்டி ராசு கவுண்டர் என்பவரின் தோட்டத்திலிருந்து வளர்ப்பு … Read more