பெரியபாளையம் பஜார் பகுதியில் பழுதாகி கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு; இருளில் பொதுமக்கள் தவிப்பு

பெரியபாளையம்: பெரியபாளையம் பஜார் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெரியபாளையம் – ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் மும்முனை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்விளக்கு 3 மாத காலமாக சரியாக எரியாமல் உள்ளது. மேலும் இந்த சந்திப்பு சாலையை கடந்து தான் பக்தர்கள் புகழ்பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு சென்று வருகின்றனர். தற்போது ஆடி திருவிழா நடைபெறும் நிலையில் மேலும் இப்பகுதி கடைகள், ஓட்டல், டீக்கடை, குடியிருப்பு … Read more

மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் – ஐஸ்வர்யா : வைரலாகும் புகைப்படம்

கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்த நடிகர் தனுஷ் தற்போது தனது மகனின் பள்ளி விழாவில் ஐஸ்வர்யாவுடன் இணைந்து பங்கேற்றுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகி வரும் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் … Read more

“இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம்” – முதல்வர் ஸ்டாலினின் சென்னை தின வாழ்த்து

சென்னை: “திராவிட மாடல் ஆட்சிக் காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்” என்று சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்றைக்கு 383-வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக் காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல். இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் … Read more

பெருவாயல் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் ஜி.தமிழரசன் நேற்று துவக்கி வைத்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜோதி பிரகாசம், பேருர் செயலாளர் அறிவழகன், துணைத் தலைவர் கேசவன், மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், கவுன்சிலர் காளிதாஸ், கறீம், முனுசாமி, கிளைச் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆர்.டி.ஓ. காயத்ரி சுப்பிரமணி, பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் எம்.மோகனா,  டிஎஸ்பி … Read more

5 ஆடுகளின் சாவுக்கு நீதி கிடைக்குமா? கலெக்டர் ஆபிஸில் ஒலிபெருக்கியுடன் விவசாயி தர்ணா.!

கோவை வேடபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். கடந்த 2019ஆம் ஆண்டு இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மூன்று பேர் (செந்தில், பாண்டியன், பழனிச்சாமி) இவர் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வடவள்ளி காவல் நிலையம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியுடன் இன்று தர்ணாவில் … Read more

ஸ்ரீ மதி மரணத்தின் மர்மங்களை விலக்க, அனைவரும் எதிர்பார்த்த அந்த விஷயம் நிறைவேறியது.!

கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து CBCID விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் … Read more

எளாவூர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை; கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ரயில்வே மேம்பாலம் ஒட்டி அரசு மதுபானக்கடை உள்ளது.இந்த கடைக்கு எளாவூர், துரப்பள்ளம், காட்டுக்கொள்ளை மேடு, தலையாரிபாளையம், நரசிங்கபுரம், பெரிய ஒபுளாபுரம், மகாலிங்கம் நகர், எளாவூர் சாலை, மெதிபாளையம், நாசம் பாளையம், மேலக்கழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொத்தனார், கட்டிட உதவியாளர், தனியார் தொழிற்சாலை ஊழியர், விவசாயி, அரசு ஊழியர், மற்றும் இளைஞர்கள் தினந்தோறும் மேற்கண்ட மதுபான கடையில் தங்களுடைய பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் பொழுது மதுபானம் அருந்திவிட்டு செல்வது … Read more

விழிஞ்சம் மீனவர்கள் போராட்டம்: ஆதரவளிக்கும் கத்தோலிக்க திருச்சபை!

கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுக திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில், அங்கு நடக்கும் மீனவ மக்களின் போராட்டங்களுக்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவு உள்ளது.இதற்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காண கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் அங்கு சென்றார். அப்போது மக்கள் அவரிடம் கோபமான கேள்விகளை முன்னிறுத்தினர். அரசியல்வாதிகள் மீது அவர்கள் கோபத்தில் இருப்பது இதன் மூலம் அறிய முடிந்தது. கேரளாவில் இந்தத் திட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி … Read more

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து – வாலிபர் பலி

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஏழுசாட்டுபத்து பகுதியை சேர்ந்த பால்துரை என்பவரது மகன் வருண் (27). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான சித்தார்த் என்பவருடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமாரி செல்லும் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் … Read more