தூத்துக்குடியில் To இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தல்.. நடுக்கடலில் கடத்தல் படகை துரத்திச்சென்ற போலீசார்.!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட பீடி மூட்டைகளை மாவட்ட கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினார்கள். போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்களின் படகு நடுகடலுக்குள் வேகமாக சென்றது. இருப்பினும் போலீசார் விரட்டிச் சென்றதால் பீடி மூட்டைகளை கடலுக்குள் வீசி விட்டு அவர்கள் தப்பிச்சென்றனர். மொத்தம் 38 மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் அவற்றில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் இருந்ததாக தெரிவித்தனர். Source link

தனியார் மருத்துவமனைகளில் ‘சிஎஸ்ஆர்’ மூலம் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிக்கு ஏற்பாடு: மா.சுப்பிரமணியன் சிறப்புப் பேட்டி

சென்னை: “இரண்டாவது தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் கரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவாதாகவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமாவதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து… “கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் உலக அளவிலும், இந்திய அளவிலும் சமீப நாட்களாக பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் … Read more

இது என்ன திருமண சேவை மையமா? : ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி குவியும் காதல் ஜோடிகள்!

ஓமலூர் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தினமும் ஒரு காதல் ஜோடி தஞ்சமடைந்து வருகிறது. இன்று மதியம் வந்த காதல் ஜோடியின் பெற்றோரை சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் என இரண்டு காவல் நிலையங்களும் ஒரே வளாகத்தில் செயல்பட்டி வருகிறது. அங்கு, கடந்த ஒரு வாரமாக பத்துக்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள், வீட்டைவிட்டு ஓடிவந்து காதல் திருமணம் … Read more

பொதுக்குழு முடிவை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் ஏற்பார்கள்: கே.பி முனுசாமி

KP Munusamy says ADMK General Committee meeting will held as per schedule: அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டார். இருப்பினும் ஒற்றைத் தலைமை விவகாரம் … Read more

அரசு பேருந்தில் புகுந்த மழைநீர் பயணிகள் அவதி…!

பேருந்தில் மழை நீர் ஒழுகுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்றிரவு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கனமழை பெய்தது. பேருந்து நிலையத்திலிருந்து புல்லரம்பாக்கம், பூண்டி, நம்பாக்கம் வழியாக பென்னலூர்பேட்டை பேருந்தில் 50 கற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். அப்போது கனமழை பெய்ததால் அந்த அரசு பேருந்தின்மேற்கூறையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே ஒழுகியதால் பயணிகள் அவதியுற்றனர். இது … Read more

ஒரு காதலனை ஏவி மறு காதலன் கொலை.. ’ராங் அடி’ ராகினியை தேடும் போலீஸ்..! முகநூலில் காதலில் விழுந்தவர்களின் பரிதாபம்

நெல்லை அருகே முகநூல் மூலம் அறிமுகமான தனியார் நிறுவன மேலாளரை காதல் வலையில் வீழ்த்திய இளம் பெண் ஒருவர், அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு, போலீஸ் காதலனை ஏவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர் மாரிமுத்து. கடந்த மே மாதம் 25ஆம் தேதி சொந்த ஊரான மதுரைக்கு … Read more

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மாணவ, மாணவிகள் ஆர்வம்

மதுரை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மண்டலத்திலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் அடங்கிய கல்லூரி கல்விக்கான தென்மண்டலத்தில் 26 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 40 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றும் மற்றும் 50க்கும் மேற்பட்ட தனியார் … Read more

“சொத்துகளை அபகரித்துவிட்டு மகன் கொடுமைப்படுத்துகிறார்”.. முதிய தம்பதி கண்ணீர் மல்க பேட்டி!

தங்களது சொத்துகளை ஏமாற்றி வாங்கிய மகன் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் வயதான பெற்றோர் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்க்கிறது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அடுத்த வல்கடம்பு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிர்வாதம் இந்திரர் மற்றும் அன்னபூரணம் தம்பதியர். 84 வயதாகும் இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் மூவருக்கும் திருமணம் நடத்தி முடித்துவிட்ட நிலையில், இவர்களுடன் மகன் ஆறம் சின்னப்ப இந்திரர் வசித்து வருகிறார். இப்படி இருக்கையில், பெற்றோரை கடைசிவரை கவனித்துக் கொள்வதாக கூறிவிட்டு … Read more

உயர்ந்து வரும் தங்கம் விலை: காரணம் தான் என்ன?

Gold rates today in tamil: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படைப்பு உலகம் முழுதும் பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. மேலும், பங்குச்சந்தைகள் சரிந்து வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. அவ்வகையில், … Read more

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாருதல் மற்றும் தூய்மைப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு.!

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா உத்ததவிட்டுள்ளார். சென்னை மாநராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களுக்குட்பட்ட மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா பார்வையிட்டு … Read more