திண்டுக்கல்.! தனியார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் காகித ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் தனியார் காகித ஆலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு காகித உற்பத்திக்காக ஆலை வளாகத்தில் டன் கணக்கில் பழைய பேப்பர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று திடீரென பழைய பேப்பர் வைத்திருந்த பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கிருந்து தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்ற நிலையில் தீயானது மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து பேப்பர் … Read more

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

  12-ம் வகுப்பு தேர்வை 8.3 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வழிகாட்ட அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரியர் உள்ளார் – அமைச்சர் வெற்றி, தோல்வி என்ற மனப்பான்மையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளக் கூடாது – அமைச்சர் வேண்டுகோள் இப்போது தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் மறுதேர்வு நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மாணவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்  12-ம் வகுப்பு … Read more

மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் ஜூன் 22-ல் ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக மாநிலம் அணை கட்டத் திட்டமிட்டிருப்பதைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வரும் 22-ம் தேதி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றுவிவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பெ.சண்முகம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் (பாலன் இல்லம்) என்.பெரியசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் வி.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: … Read more

காரைக்கால்: குற்றவழக்கில் கைது செய்யபட்ட மகன் – அதிர்ச்சியில் தந்தை எடுத்த விபரீத முடிவு

காரைக்காலில் பெற்ற மகனை குற்ற வழக்கில் கைது செய்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த விழிதியூர் சங்கரன் தோட்டத்தைச் சேர்ந்த முருகையன் (48) – வசந்தி (45) தம்பதியரின் மகன் கார்த்திகேசன் (27). டிரைவர் வேலை செய்து வரும் இவரை, குற்ற வழக்கில் கைது செய்திருப்பதாகவும் மறுநாள் காவல் நிலையத்திற்கு வருமாறும் நேற்று இரவு முருகையன் செல்போனுக்கு மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் நிலையத்திலிருந்து போன் வந்துள்ளது. … Read more

‘மைதான ஊழியரை மதிக்க தெரியாத ருத்து…’ வலைதளத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Cricket viral video Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இந்நிலையில், தொடரை கைப்பற்ற போகும் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டி-20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு … Read more

#Breaking : 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு.. இந்தாண்டு மாணவர்களை முந்திய மாணவிகள்.!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று, பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டது.  இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.  12ம் வகுப்பில் – 93.76% மாணவர்கள் … Read more

அதிமுக இரண்டாக உடைய பாஜகதான் காரணம்: காங். மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியின் 51-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதில்,தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் கேக் வெட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: பாஜக மக்களைத் துன்புறுத்திவருகிறது. அடுத்த தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென மோடியும், அமித்ஷாவும் கனவு கண்டுவருகின்றனர். ஒருவேளை அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய துணைக் கண்டமே இல்லாமல் போய்விடும். எனவே,ஜனநாயகத்தையும் மக்களையும் காப்பாற்ற நாம் களம் இறங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறி, … Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்பனை செய்ய வேதாந்தா குழுமம் சார்பில் நாளேடுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்க வேதாந்தா குழுமம் முடிவு செய்துள்ளது. ஆலையை வாங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாளேடுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. தாமிர உருக்கு வளாகம், சல்பரிக் அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள 10 பிரிவுகளும் … Read more

ஸ்டெர்லைட் ஆலை விற்பனை – வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான விளம்பரங்களை வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதாகவும். தூத்துக்குடி சுற்றி உள்ள கிராம மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. மக்களின் நீண்ட நாள் எதிர்ப்பு கடந்த 2018ம் ஆண்டு கடும் போராட்டமாக மாறியது. மேலும் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுகொல்லபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more

இப்படியே சென்றால் தமிழகம் என்ன ஆகும்? வெளியான புள்ளி விவரங்களால் பெரும் அதிர்ச்சியில் மருத்துவர் இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில் அதிகரித்திருப்பதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்த குரல்கள் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதும், குற்றங்கள் பெருகுவதும் கவலையளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள குற்றப் புள்ளிவிவரங்களின்படி கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் … Read more