ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் செங்கோட்டையன் சமாதான பேச்சுவார்த்தை?

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை வெடித்துள்ள நிலையில், இரு தலைவர்களிடமும் சமாதான பேச்சுவார்த்தையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவருடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு சென்றார். அப்போது இருவரும் சுமார் இருபது நிமிடங்கள் பேசியதாக … Read more

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்; கவுன்சில் என்பது என்ன?

Rishika Singh Explained: What is the Inter-State Council?: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூன் 16) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “கூட்டுறவு கூட்டாட்சி உணர்வை வலுப்படுத்த” மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று முறை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு கவுன்சிலில் வைக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இதற்குக் காரணம், மாநிலங்களுக்கும் … Read more

முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட பிறந்த குழந்தை.. குழந்தையின் பெற்றொர் குறித்து தீவிர விசாரணை..!

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை முட்புதரில்  வீசி சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம், வேலிப்பட்டி என்ற கிராமத்தில் முட்புதரில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை  தொப்புள் கொடி அறுப்படாத நிலையில், கிடந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த அந்த பகுதி மக்கள்  காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு … Read more

அதிமுகவில் வலுத்துவரும் ஒற்றை தலைமை கோரிக்கை ; ஓ.பன்னீர் செல்வத்திற்கு 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு

கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக அதிமுகவில் பெரும் பிரச்சனையை கிளப்பி வரும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு 11 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேனி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். சையது கான், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன், தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் , கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், திருவள்ளுவர் தெற்கு … Read more

“பாஜக அரசை மக்கள் மத்தியில் அக்னி பாதை திட்டம் அம்பலப்படுத்தும்” – சீமான் அடுக்கும் காரணங்கள்

சென்னை: ” ‘நாடு’, ‘நாடு’ என்று கூறி, நாளும் அரசியல் செய்திடும் பாஜக அரசு, நாட்டைக் காக்கிற லட்சணத்தை அக்னி பாதை திட்டமொன்றே மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் என்பது உறுதி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பணியெனும் அடிப்படையில், இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு ஆள்சேர்க்கக் கொண்டுவரப்பட்டுள்ள ‘அக்னிபாதை’ எனும் புதிய நடைமுறையானது நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிற நிலையில், அதன் விளைவுகளை … Read more

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் – ரத்தக் காயத்துடன் வெளியே வந்த தொண்டர்

அதிமுகவில் கடந்த செவ்வாய்கிழமை பற்றிய பரபரப்பு, தொடர்ந்து நீடித்து வருகிறது. அதன் உச்சமாக அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து தொண்டர் ஒருவர் ரத்த காயத்துடன் வெளியே வந்ததால், அங்கு பதற்றமும் தொற்றிக்கொண்டது.      அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை முழக்கத்திற்கு இடையே அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 3-வது கட்டமாக தீர்மானக் குழு கூட்டம் … Read more

‘அக்னி பாத்’ எதிர்ப்பு: தமிழகத்தில் முதல் போராட்டம் திருச்சியில்!

DYFI protest against Agnipath scheme in Trichy: இந்திய பாதுகாப்பு துறையில் ஆண்டுக்கு 45 ஆயிரம் வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க ‘Tour Of Duty’ என்ற புதிய வேலைவாய்ப்பு முறையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு “அக்னி பாத்” என பெயரிடப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் முப்படையில் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாத ஊதியம் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். ஓய்வூதியம் போன்ற சட்டரீதியான சலுகைகள் வழங்கப்படாது. அக்னி வீர் … Read more

#சென்னை || பலே வேலை செய்த லட்சுமி, கனகவள்ளி, மாரியம்மாள்.! பிளைட் ஏறும் முன்பே தட்டி தூக்கிய அதிகாரிகள்.! 

இன்று சென்னை விமான நிலையத்தில் 34.76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்கு இன்று கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் தீவிர சோதனையில் இறங்கினர். இதில், சென்னையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு செல்ல இருந்த, திருச்சியைச் சேர்ந்த லட்சுமி கந்தசாமி, கனகவள்ளி சுப்பிரமணி, திண்டுக்கல்லைச் சேர்ந்த மாரியம்மாள் சுடலைமுத்து ஆகிய மூன்று பெண் பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினர் வழிமறித்து சோதனை … Read more

புதுச்சேரிக்கு மதுபான பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து.. மதுபானங்களை அள்ளி சென்ற பொதுமக்கள்.!

திருப்பத்தூரில் புதுச்சேரிக்கு மதுபான பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றி கொண்டு திருப்பத்தூர் வழியாக புதுச்சேரிக்கு அந்த லாரி சென்று கொண்டிருந்தது. கலைஞர் நகர் பகுதியில் இருந்த சாக்கடை கால்வாய், மழை நீரால் சூழப்பட்டிருந்த நிலையில், அதனை கவனிக்காத ஓட்டுநர் அதன் வழியாக லாரியை இயக்கியதால், நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், லாரியில் இருந்து கீழே விழுந்த பாட்டில்கள் சிலவற்றை எடுத்துச் … Read more

முறையான ஏற்பாடுகள் இல்லாததால் அவதி: கோவை – ஷீரடி தனியார் ரயில் பயணிகள் குற்றச்சாட்டு

கோவை: சரியான வழிகாட்டுதல்கள், முறையான ஏற்பாடுகள் இல்லாததால் அவதிக்குள்ளானதாக கோவை – ஷீரடி தனியார் ரயிலில் பயணித்த பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர். ‘பாரத் கவுரவ்’ திட்டத்தின்கீழ் நாட்டின் முதல் தனியார் ரயில் கோவையிலிருந்து ஷீரடிக்கு கடந்த 14-ம் தேதி புறப்பட்டுச் சென்றது. அப்போது, பக்தர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு இசை வாத்தியங்கள் முழங்க தனியார் நிறுவனம் சார்பில் பணிப்பெண்கள் வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், ஷீரடி சென்று தனது பயணத்தை முடித்த அந்த ரயில் இன்று (சனிக்கிழமை) கோவை வந்ததடைந்தது. … Read more