ஈரோட்டில் தன் சொந்த மகளையே கருமுட்டை விற்பனை செய்ய வற்புறுத்திய தாய் உட்பட மூவர் கைது.!

ஈரோட்டில் தன் சொந்த மகளையே கருமுட்டை விற்பனை செய்ய வற்புறுத்திய தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் தொடர்புடைய ஜான் என்பவர் சூரம்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்  Big shot app மூலமாக சிறுமியின் வயதை 16ல் இருந்து 22 ஆக ஆதார் கார்டில் மாற்றி கொடுத்துள்ளார். விசாரணையில் இதனைக் கண்டுபிடித்த போலீசார் ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர். Source link

ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் டெட் தேர்வு … Read more

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் ஆணை

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் சுந்தர் மோகன் மற்றும் கே. குமரேஷ் பாபு ஆகியோரை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த  என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி பரிந்துரைத்தது. அவர்களில் முதல்கட்டமாக என்.மாலா, எஸ். சவுந்தர் … Read more

பொன்னையன் பாஜகவைப் பற்றி கூறியது சொந்த கருத்து – ஓ.பி.எஸ் – இ. பி.எஸ் பேட்டி

அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல என்றும் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்று கடுமையாக விமர்சித்து பேசியது அவருடைய சொந்த கருத்து என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அண்மையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கும், அதிமுகவுக்கும், திராவிட … Read more

கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா.. 200 பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் வி.ஜி ராஜேந்திரன்.!

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 200 பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் வழங்கினார். கைவாண்டூர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். Source link

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் இன்று பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். குடியரசுத் தலைவர் உத்தரவு கடந்த 2020-ம் ஆண்டு டிச.3-ம் தேதி, மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றிய ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்திக்குமார் சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் 9 … Read more

கர்நாடகாவில் கோர பேருந்து விபத்து.! உடல்கருகி உயிரிழந்த 7 பயணிகள்.! அதிர்ச்சி புகைப்படங்கள்.!

கர்நாடக மாநிலம், கலபுர்கி மாவட்டத்தில் ஹைதராபாத் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததால்  7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சுமார் 12 பயணிகள் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்த பயணிகள் கலபுர்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து, கலபுர்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இஷா பந்த் தெரிவிக்கையில்,  பிதார்-ஸ்ரீரங்கப்பட்டணா நெடுஞ்சாலையில் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள கமலாபூர் தாலுகாவின் புறநகரில் … Read more

99-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் விழா – கருணாநிதி படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள், அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கும் மெரினாவில் உள்ள நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி திமுகவினர் கொண்டாடினர். தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த … Read more

தமிழகத்தில் இரு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.! மத்தியில் இருந்து வந்த எச்சரிக்கை கடிதம்.!

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்திய நிலையில், இது குறித்து, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி  கொரோனா ஒருநாள் பாதிப்பு 94 ஆக அதிகரித்தது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 474 ஆக அதிகரித்தது.  இதில் … Read more