கள்ளக்குறிச்சி மாணவி மரணம் | தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

கடலூர்: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான குழுவினர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமான மரணம் தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் இன்று விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் மாணவி ஒருவார் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். இதற்காக ஜூலை 26-ம் தேதி முதல் 28-ம் தேதி … Read more

கள்ளக்குறிச்சி கலவரம் – கைது செய்யும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் கலவரத்தின் போது, காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்த இளைஞர் அடையாளம் காணப்பட்டு அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. பள்ளி பேருந்துகள் சேதப்படுத்தி எரிக்கப்பட்ட நிலையில், வெளியே வந்த கலவரக்காரர்கள் காவல்துறையின் வாகனத்திற்கும் தீ வைத்தனர். வன்முறை சம்பவத்தில் போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் பகுதியை … Read more

அதிமுக அலுவலகத்தில் ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி டிஜிபியிடம் சி.வி.சண்முகம் மனு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்கள், பொருட்கள் திருடப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உள்துறை செயலர், டிஜிபியிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார். தமிழக உள்துறைச் செயலர்,டிஜிபி, சென்னை காவல் ஆணையர், மற்றும் ராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கலவரத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல, மோதலின்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய … Read more

கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை – 23 வங்கிக் கணக்குகள் முடக்கம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில கஞ்சா விற்பனையை தடுக்க 23 கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நடத்தப்படும் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்; கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் உள்ள நிஷா, கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து 2021 – … Read more

2 சிறுமிகளை சீரழித்த 8 குழந்தைகளின் தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை ..! போக்சோ வழக்கில் அதிரடி

இரு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 8 குழந்தைகளின் தந்தையை வாழ்நாள் முழுவதும் சிறைக்குள் அடைக்கும் வகையில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பட்டு என்கிற வெங்கடேசன். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு 3 மனைவிகள், 8 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 2 வது மனைவி வீட்டில் தனது 12 வயது மகள் மற்றும் அதே வயதுடைய மனைவியின் தங்கையான … Read more

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் மருத்துவரை கண்டறியும் செயலி: இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்

பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களைக் கண்டறிய ‘Search for doctor App’ என்ற செயலியை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகப்படுத்தி உள்ளது. அஞ்சல் குறியீட்டு எண், பகுதியை வைத்து தேடினால்அப்பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியல் கிடைக்கும். இதன்மூலம் பொதுமக்கள் அவசர காலங்களில் மருத்துவர்களை எளிதில் கண்டறிய முடியும். நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் இதுபோன்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் 1.60 லட்சம் பேர் உள்ளனர். இந்த செயலியில் … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 1 கிலோ தங்கம் 8 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

அரியலூரில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் 1 கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.8 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூரைச் சேர்ந்த தன்ராஜ் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார் இந்நிலையில் நேற்ற காலை அரியலூரில் உள்ள அவரது வீடு, கல்யாண மண்டபம், ஒடக்கார தெருவில் உள்ள இல்லம், பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரில் உள்ள வீடுகள் … Read more

தமிழில் அறிமுகமாகும் பிரபல கன்னட நடிகை : அர்ச்சனா சீரியலின் முக்கிய அப்டேட்

சின்னத்தரையில் முன்னணி சேனல்களுக்கு இணையான சீரியல் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் தற்போது புதிதாக இணந்துள்ள சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த வீடு அர்ச்சனா இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார். அவருடன் பிரனிகா தக்ஷூ, காயத்ரி யுவராஜ் ஆகியோர் நடித்து வரும் இநத சீரியலில் தற்போது மோக்ஷிதா பாய் இணைந்துள்ளார். கன்னடத்தில் வெளியான பாரு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான மோக்ஷிதா பாய் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் மூலம் … Read more

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.!

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.  200 யூனிட்டுகளுக்கு மேல் இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்திபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 25.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றுக்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல இரண்டு மாதங்களுக்கு மொத்தமாக 400 யூனிட் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 … Read more

செஸ் ஒலிம்பியாட் களைகட்டியது சென்னை

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வீரர்-வீராங்கனைகள் வந்த வண்ணம் உள்ளனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நாளை கோலாகமாகத் தொடங்குகிறது. ஆகஸ்ட் 10ந் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டிக்காக மாமல்லபுரம் அருகே தனியார் ஓட்டலில் முழு அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், … Read more