மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக 1 லட்சத்து 33 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால் கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 4 மணியளவில் விநாடிக்கு 1 லட்சத்து 29 ஆயிரத்து 403 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, நேற்று 2-வது நாளாக … Read more

பள்ளி மாணவியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை: காவல்துறை கட்டுப்பாட்டில் மருத்துவமனை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடல் இன்னும் சற்று நேரத்தில் மறு உடற்கூராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி கடந்த 13 ஆம் தேதி பள்ளி வளாகத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம், இருப்பதாக குற்றம்சாட்டி சடலத்தை வாங்க மறுத்த பெற்றோர் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாணவியின் சடலத்தை … Read more

Tamil news today live : மாணவியின் உடல் இன்று மறுபிரேத பரிசோதனை 

Go to Live Updates பெட்ரோ- டீசல் விலை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் -ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் – ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.    கொரோனா இதுவரை உலகளவில் இதுவரை 56.81 கோடி பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 53.95 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 63.88 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்? … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (19.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 19/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 15 நாட்டு தக்காளி 12/10 உருளை 33/28/26 சின்ன வெங்காயம் 30/26/20 ஊட்டி கேரட் 45/35/30 பீன்ஸ் 70/65/60 பீட்ரூட். ஊட்டி /60.50 கர்நாடக பீட்ரூட் 30/25 சவ் சவ் 20/18 முள்ளங்கி 15/12 முட்டை கோஸ் 18/15 வெண்டைக்காய் 25/18 உஜாலா கத்திரிக்காய் 40/30 வரி கத்திரி 25/22 காராமணி … Read more

கனியாமூர் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் 5 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி (17) சந்தேகமாக உயிரிழந்தது தொடர்பாக சின்ன சேலம் காவல் நிலையத்தில் அவரது தாயார் ஸ்ரீமதி அளித்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்(48), பள்ளியின் செயலாளரும், தாளாளரின் மனைவியுமான சாந்தி (44), பள்ளி முதல்வர் சிவசங்கரன்(57), வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா(40), கணித ஆசிரியை கீர்த்திகா(28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கலவரத்தைத் தொடர்ந்து சின்னசேலம் … Read more

அகில இந்திய மாங்கனி கண்காட்சி: முதல் பரிசை தட்டித் தூக்கிய சேலம் விவசாயி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா. நடப்பு ஆண்டின் சிறந்த மாங்கனியாக அல்போன்சா வகை தேர்ந்தெடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில், அரசு மற்றும் தனியார் துறை சார்பில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, மாங்கனி போட்டிகள் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் உள்ளிட்ட மா உற்பத்தி விவசாயிகள் பங்கேற்று தங்களின் உற்பத்தி … Read more

‘திமுக இல்லைனா… உத்தரப் பிரதேசம் போல சென்னை பிரதேசம் ஆகியிருக்கும்’ – ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூலை 18) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழ்நாடு திருநாள் என்ற நிகழ்ச்சிக்கு இணையானது எதுவும் இல்லை. தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போது உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஓர் ஆற்றல் பிறக்கிறது. நேரடியாக இந்த விழாவில் வந்து கலந்துகொள்ள முடியவில்லையே என்பதுதான் என்னுடைய ஒரே வருத்தம். கொரோனா தொற்றால் … Read more

கடந்த 50 ஆண்டு காலத்தில் ‘தெற்கு சிறக்கிறது’ – ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. கடந்த 50 ஆண்டு காலத்தில் ‘தெற்கு சிறக்கிறது’ என்று அனைவரும் வியந்து பார்க்கும் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் ‘தமிழ்நாடு திருநாள்’ விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விழாவுக்குத் தலைமை தாங்கினார். … Read more