சேலத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது.!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது முழுமையடையாத நிலையில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிப்புக்கான மூலப் பொருளை வைத்திருந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த அன்பழகன் மகன் கபிலன் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரை … Read more

சிட்டுக் குருவி இனம் அழிவை தடுக்கும் முயற்சி: தோழியின் திருமணத்தில் வித்தியாசமான பரிசளித்த சக மாணவர்கள்

மதுரையில் தங்களுடன் படிக்கும் கல்லூரி தோழியின் திருமணவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சக மாணவர்கள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக சிட்டுக்குருவிகூட்டினை பரிசாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை விலங்கியல் படிக்கும் மாணவி குரு தீபிகா. இவருக்கும் வேணுகோபால் என்பவருக்குமான திருமண விழா நேற்று மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மணமகளான கல்லூரி மாணவி குரு தீபிகாவின் கல்லூரி நண்பர்கள், சக மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருமணவிழாவில் … Read more

கோவில்பட்டி கடலை மிட்டாய் வாங்க ஆசையா? – அஞ்சல் துறை மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாயை அஞ்சல்துறை மூலம் பணம் செலுத்தி வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரிசல் மண் பூமியான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு தனி மவுசு உண்டு. இயற்கையில் இனிப்பு சுவை கொண்ட இந்த நிலக்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உண்டு. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. புவிசார் குறியீடு பெற்ற … Read more

லவ் லெட்டர் கொடுத்த அமீர்… பாவனி என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

Bigg boss Amer And Bhavani Viral Video : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிழ்ச்சிக்கு போட்டியாளர்களாக வருபவர்கள் காதல் சர்ச்சையில் சிக்குவதும், பின்னர் அவர்களே அதற்கு விளக்கம் கொடுப்பதும் 5 சீசன்களில் வழக்கமான நடப்பது ஒன்று. இதில் ஒரு சிலர் நிகழ்ச்சியை விட்டு வெளியே … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாகும் 9 பேர்.! நாளை பதவியேற்பு.!  

நாளை சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் பதவியேற்க இருக்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருக்கும் வீராசாமி சிவஞானம். கோவிந்தராஜ்லு சந்திரசேகரன், ஆனந்தி சுப்பிரமணியன், கணேசன் இளங்கோவன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், முரளிராஜ் குப்புராஜ், சதிகுமார் சுகுமார குரூப், மஞ்சுளா ராம்ராஜு மற்றும் தமிழ்செல்வி உள்ளிட்டோரை நிரந்தரமான நீதிபதிகளாக நியமிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி ரமணா தலைமையிலான கொலிஜியம் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.  இத்தகைய சூழலில் நாளை இந்த ஒன்பது பேரும் … Read more

ஆறு மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களைப் பள்ளிக் கல்வித் துறை இடமாற்றம்.!

ஆறு மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களைப் பள்ளிக் கல்வித் துறை இடமாற்றம் செய்துள்ளது. தொடக்கக் கல்வி இயக்ககத் துணை இயக்குநர் வெற்றிச்செல்வி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல், உளுந்தூர்ப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர்கள் முறையே திருவள்ளூர், மதுரை, நீலகிரி மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  Source link

சென்னையில் 50 நாட்களில் ரூ.6,50,22,770 அபராதம் வசூல்: போக்குவரத்து காவல்துறை 

சென்னை: சென்னையில் கடந்த 50 நாட்களில் 2,73,284 வழக்குகளில் ரூ.6,50,22,770 அபராத தொகையாக வசூலித்துள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: கடந்த 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது. ஆரம்ப காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்த போதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாததால் அது காலப்போக்கில் மோசமடைந்தது. இந்தச் தேக்க நிலையை நேர் செய்ய சென்னை பெருநகர … Read more

அண்ணாமலை மிரட்டலுக்கு நாங்கள் பயப்படபோவதில்லை – ஐ.பெரியசாமி

பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட போவதில்லை. ஊழல் நடந்திருக்கிறதா என நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்யும் என திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டியளித்துள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி புதிதாக தோட்டனூத்து பகுதியில் கட்டப்பட்டு வரும் அகதிகள் முகாம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை … Read more

இந்த படத்தில் இருக்கிற கருந்துளை விரிவடையுதா பாருங்க… என்ன ஒரு மாயாஜாலம்

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்நீ காணும் தோற்றம், உண்மை இல்லாததுஅறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற பாடல் வரிகளுக்கு பொருத்தமானது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம். ஆப்டிகல் இல்யூஷன் படம், விரிவடையும் கருந்துளை மாயாஜாலம் என்று கூறுகின்றனர். வெள்ளை நிற பின்னணியில், கருப்பு புள்ளிகளைக் கொண்ட படத்தின் மையத்தில், நீள்வட்டத்தில் அவுட்லைன் இல்லாத ஒரு கருப்பு புள்ளி உள்ளது. இந்த மங்கலான கருப்புத் திட்டு, ஒரு கருந்துளை போல் தெரிகிறது. நீங்கள் … Read more

சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை.. தொழிலாளி மீது பாய்ந்தது போக்சோ..!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிகள் காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம், திருநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் அவரது வீட்டிற்கு அருகே வசித்து வரும் சிறுமி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் ஜெயபிரகாஷிடம் இது பற்றி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஜெயபிரகாஷ் உறவினர்களும் சிறுமியின் தாயார் அவதூராக திட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து காவல் … Read more