போதையில் லாரி ஓட்டிய டிரைவருக்கு ஓனர் கொடுத்த பரிசு..! சட்டையை கிழித்து தர்ம அடி

கோவையில் இருந்து பல்லடம் நூற்பாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கை உரிய இடத்தில் கொண்டு சேர்க்காமல்,  மதுபோதையில் லாரியை நடுவழியில் நிறுத்தி சாலையோரம் படுத்து உறங்கிய ஓட்டுனரின் சட்டையை கிழித்து, லாரி சர்வீஸ் உரிமையாளர் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிக்கு முன்பாக ஒரு போதை ஆசாமியை ஒயிட் அண்ட் ஒயிட் ஆசாமி ஒருவர் சட்டையை பிடித்து கம்பால் அடித்துக் கொண்டிருந்தார். விசாரித்த போது அடித்தவர் … Read more

பதிவாளர் மீதான பாலியல் புகார் எதிரொலி: பெரியார் பல்கலை.யில் கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பதிவாளர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர் நடவடிக்கையாக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக புதிய இடங்கள் கண்டறிந்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கூறும்போது, ”பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் (பொறுப்பு) கோபியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு … Read more

’48 ஆண்டு வாழ்க்கை’ இறப்பிலும் இணைபிரியாத தம்பதி..கணவர் இறந்த சோகத்தில் உயிரிழந்த மனைவி

குத்தாலத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழ காலனியைச் சேர்ந்தவர் குணசீலன் (வயது 74). இவருடைய மனைவி தமிழரசி (வயது 68). இவர்களுக்கு திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்துவைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது பூர்வீக வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குணசீலன் இன்று அதிகாலை 3 … Read more

பண்ணை வீட்டில் விபச்சாரம்… மேகாலயா பாஜக தலைவர் உ.பி.யில் கைது

மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மராக்கின் பண்ணை வீட்டில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் பிப்ரவரி மாதம் புகார் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி போலீசார் சோதனை நடத்தினர். துராவில் உள்ள தனது பண்ணை வீட்டில் விபச்சார விடுதி நடத்தி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மாராக்கை உத்தரப் பிரதேச போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். முன்னதாக, மேகாலயா காவல்துறை பெர்னார்ட் … Read more

“கரூரில் விமான நிலையம்” – மத்திய அரசிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் கோரிக்கை

புதுடெல்லி: கரூரில் விமான நிலையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள இடம் குறித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் மத்திய அமைச்சரைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் உள்ள விமான … Read more

நெல்லையில் கோயிலுக்குச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

நெல்லையில் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்த இடத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பாபநாசம் மேற்குத்தொடரச்சி மலையில் உள்ள பிரசித்திப்பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10-நாட்களுக்கு முன்பாகவே குடும்பத்தினருடன் வருகை தந்து குடில்கள் அமைத்து தங்கி சாமி தரிசனம் செய்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் … Read more

நிறைமாத கர்ப்பிணி… செஸ் ஒலிம்பியாட்டில் துணிச்சலாக பங்கேற்கும் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா!

உலக செஸ் போட்டிகளில் 22 ஆண்டுகளாக விளையாடி வரும் ஹரிகா, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 8 மாத கர்ப்பிணியாக துணிச்சலாகப் பங்கேற்கிறார் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா. யார் இந்த ஹரிகா? 12 வயதில் ஆசியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான ஹரிகா, உலக செஸ் போட்டிகளிலும் இந்திய செஸ் போட்டிகளிலும் கடந்த 22 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஹரிகா தற்போது உலகின் பத்தாம் நிலை வீராங்கனையாக இருக்கிறார். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஹரிகா, … Read more

மன உளைச்சலால் தலைமை காவலர் எடுத்த விபரீத முடிவு..!

மன உளைச்சலால் தலைமைகாவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியை சேர்ந்தவர் திருநாவுகரசு. இவர் தலைமைகாவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாகியுள்ளது. சம்பவதன்று, வழக்கம் போல கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மன உளைச்சலில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான பெரியார் பல்கலை. பதிவாளர் பணியிடை நீக்கம்

சேலம்: ‘சேலத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் கோபி (45). இவர் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். சேலம், சித்தர் கோயில் பகுதியை சேர்ந்த பிஎச்டி பயிலும் மாணவிக்கு பதிவாளர் கோபி நெறியாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி … Read more

பைக்கில் சென்றுகொண்டிருந்த இளைஞர் படுகொலை – அச்சத்தில் பொதுமக்கள்

பூந்தமல்லி அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த படுகொலையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.  பூந்தமல்லி அடுத்த புளியம்படு பகுதியில் மோட்டார் சைக்கிளில் கேபிள் வயரை வைத்துக்கொண்டு ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கினார்கள். இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்த நபரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் அந்த நபர் … Read more