சென்னை, மதுரை, நாமக்கல், தூத்துக்குடி… உஷார் மக்களே; இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை!

சென்னை, மதுரை, நாமக்கல், தூத்துக்குடி என பல இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அதுகுறித்த முழுத் தகவல்கள் இங்கே! மதுரையில் எங்கெங்கு மின்தடை? மதுரை பசுமலை துணை மின்நிலையம் மீனாட்சி மில் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் … Read more

#BREAKING : தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பின் முதல் கொரோனா பலி.!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு தஞ்சாவூரில் 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகாத நிலையில், நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் … Read more

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் கடலுக்குள் சென்ற மீனவர்கள்… எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் இராமேஸ்வரம் , பாம்பன் தெற்குவாடி துறைமுகப்பகுதியிலிருந்து  90க்கும் அதிகமான மீன் பிடி விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல்பகுதிக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்நிலையில் கரை திரும்பிய மீனவர்களின் வலையில் எதிர்ப்பார்த்த அளவு மீன்கள் கிடைத்துள்ளதால் அப்பகுதியில் மீன் வர்த்தகம் களை கட்டியுள்ளது. Source link

மேகதாது | அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கான திட்டங்களை தமிழக அரசு வகுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மேகதாது அணைக்கு காவிரி ஆணையக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டால், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தெளிவான திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழக அரசு பல்வேறு வழிகளில் தெரிவித்த எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், நடைபெற உள்ள கூட்டத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதிக்கும் முடிவில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் … Read more

அமைதியை வலியுறுத்திய ஓபிஎஸ்… மதுரை தொண்டர்கள் செய்த சம்பவம்

அதிமுகவிற்கு ஒற்றை தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்க வேண்டும் என மதுரை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு எற்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு … Read more

பவுலருக்கு அதிர்ச்சி கொடுத்த வார்னர்… தாவிப்பிடித்த கேட்ச் வைரல்!

SL vs AUS 2022: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முன்னதாக நடைபெற்ற 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்கிற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இத்தொடருக்கான முதலாவது ஒருநாள் ஆட்டம் கண்டியில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் … Read more

மேகதாது அணைக்கு அனுமதி தரப்பட்டால் தமிழக அரசின் மாற்றுத் திட்டம் என்ன? – பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகளில் தெரிவித்த எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், நாளை நடைபெற  உள்ள கூட்டத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதிக்கும் முடிவில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதியாக இருப்பது கவலையளிக்கிறது.  மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான சூழ்ச்சியாகவே இந்த நடவடிக்கை தோன்றுகிறது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மேகதாது அணை விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை … Read more

காவேரி வாரிய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்: ஓபிஎஸ்

சென்னை: காவேரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மேகதாது அணை கட்டப்படாத போதே உரிய நீருக்குப் பதிலாக உபரி நீர் வந்துக் கொண்டிருக்கையில், மேகதாது குறித்து பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கூறுவதும், கர்நாடகத்திற்குரிய பங்கை பயன்படுத்துவது குறித்த திட்டம் மேகதாது … Read more

வாகன சோதனையில் சிக்கிய சிறார்கள்: உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதாக 525 வழக்குகள் பதிவு

(கோப்பு புகைப்படம்) வாகன சோதனையில் சிறார்கள் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. வயது குறைவான நபர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கும், மூன்று நபர்கள் வாகனத்தில் செல்வதை தடுப்பதற்கும், 14.06.2022 அன்று வாகனங்களை ஓட்டும் சிறார்களுக்கு எதிராக சிறப்பு வாகன தணிக்கையை சென்னை போக்குவரத்து காவல்துறை நடத்தியது. இதில், மொத்தம் 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சில வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அவர்களின் … Read more

3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் முதல் மரணம்

தஞ்சாவூரைச் சேர்ந்த 18 வயது பெண் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடும் இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முயற்சித்துள்ளனர். இந்நிலையில் அவர் மதியம் 2.30 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த 90 நாட்களில் கொரோனா … Read more