வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீர் தீ!!

சமீபகாலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. தமிழ்நாட்டில் கூட வேலூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் என இருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி அடிக்கடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்து வருவது தொடர் கதையாக மாறியுள்ளது. தற்போது நெல்லை மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீபிடித்து எரிந்துள்ளது. கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் ஆசீர், … Read more

இரண்டரை மாதங்களுக்குப் பின் தினசரி கரோனா பாதிப்பு 100-ஐ கடந்தது – தமிழகத்தில் புதிதாக 139 பேருக்கு தொற்று

சென்னை: தமிழகத்தில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 100-ஐக் கடந்துள்ளது. நேற்று புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஆண்கள் 96, பெண்கள் 43 என மொத்தம் 139 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 59, செங்கல்பட்டில் 58 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 55,613 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை … Read more

'பிரதமர் முன் பொய் தரவுகளை பேசி தமிழகத்திற்கு அவமதிப்பு பெற்றுதந்தவர் முதல்வர்'- அண்ணாமலை

”பிரதமர் முன்பு பொய்யான தரவுகளை பேசி தமிழகத்திற்கு அவமதிப்பை பெற்றுதந்தவர் தமிழக முதல்வர்” எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம், பழனி அருகே வயலூரில் நடைபெற்றது‌. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”திமுக கூட்டத்திற்கு பிரியாணி கொடுத்து அழைக்கும் அமைச்சர் சக்கரபாணி,  பாஜக சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதற்காக … Read more

வெறும் ரூ 5000 முதலீடு; லட்சக்கணக்கில் லாபம்… தபால் துறையில் இந்த வாய்ப்பை கவனித்தீர்களா?

குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், தபால் துறை உங்களுக்கு அரிய வாய்ப்பை அளிக்கிறது. நாடு முழுவதும் 1.56 லட்சம் தபால் நிலையங்கள் செயல்பட்டாலும், புதிய தபால் நிலையங்களின் தேவை இருக்கிறது. கிராம மற்றும் நகர்புறங்களில் தபால் நிலையத்தின் கிளைகளை  நீங்கள் தொடங்க முடியும்.  அஞ்சதுறை வழங்கும் இந்த ஃபிரான்ச்சைஸ் ஸ்கீம் இரு வகை உரிமைகளை வழங்குகிறது. ஒன்று தபால் சேவைகளை வழங்குவதற்கான நிலையம் அமைக்கும் உரிமை.  இரண்டாவது அஞ்சல் முகவர் உரிமை.  வீடு … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை.!!

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார். அண்ணாமலைக்கு புரிதல் கிடையாது. புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது. பத்திரிக்கையாளர் பக்கத்தையும், தொலைக்காட்சி நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார்.  இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, செந்தில்பாலாஜி 5 கட்சிக்கு மாறியவர்.  காற்றிலிருந்து, நிலக்கரியிலிருந்து விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் … Read more

அடடே… ஒட்டகத்தை வைத்து ஆற்று மணல் திருட்டு!!

சிவகங்கையில், ஒட்டகத்தை வைத்து ஆற்று மணல் கடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். இரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒட்டகத்தைக் கட்டிக் கொண்டு மாட்டு வண்டி ஒன்று வந்தது. இதைப்பார்த்த போலீஸார் மாட்டு வண்டியை நிறுத்தி, அதிலிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்லாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. அவர் சவூதி அரேபியாவில் நீண்ட காலம் வேலைபார்த்து வந்துள்ளார். பிறகு சில மாதங்களுக்குச் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து … Read more

தேர்வு எழுதி முடித்த நிலையில், வகுப்பறைக்கு வர்ணம் பூசி பிரியாவிடை பெற்ற மாணவர்கள்.!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி முடித்த நிலையில், சிறுசேமிப்பு தொகை சேர்த்து வகுப்பறைக்கு வர்ணம் பூசி பிரியாவிடை பெற்றனர். கடிநெயல்வயல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டு தேர்வு எழுதி முடித்த சுமார் 60 மாணவர்கள் ஒன்றிணைந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் சேர்த்து அதன் மூலம் பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வர்ணம் பூசி வகுப்பறையை புதுப்பொலிவுறச் செய்துள்ளனர். … Read more

12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு பகுதியில் காற்றின் திசை மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, 2-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. … Read more

வேலூர்: மகளிர் சுய உதவிக்குழு பெயரில் மோசடி செய்த கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் சஸ்பெண்ட்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி செய்து கைதான கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி (38). அவர் பணியாற்றிய காலகட்டத்தில் குடியாத்தம் நகரை சுற்றியுள்ள கிராமத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் … Read more