ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை நிர்வாகம் கைவிட வேண்டும் – துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை நிர்வாகம் கைவிட வேண்டும் என, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் 12 பேர் மற்றும் பல்வேறு மீனவர் நலச்சங்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தங்கம் கூறியதாவது: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், விவரம் தெரியாமல் கலந்து கொண்டேன். தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். ஸ்டெர்லைட் … Read more

தூத்துக்குடியில் மருத்துவ மாணவர்கள் 30 பேருக்கு கரோனா – தமிழகத்தில் புதிதாக 1,382 பேருக்கு பாதிப்பு

தூத்துக்குடி/சென்னை/புதுடெல்லி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 30 பேர் உள்ளிட்ட 60 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 1,382 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை தினமும் 10-க்கும் குறைவானவர்களுக்கே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 19 பேருக்கு தொற்று உறுதி … Read more

உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை – இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியது

சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற இணையவழி விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலை.களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, … Read more

செங்கல்பட்டு.! மழலையர் பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழப்பு.!

செங்கல்பட்டு மாவட்டம் மழலையர் பள்ளி கூடத்தில் தண்ணீரில் தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தர்கா சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுடைய 9 மாத பெண் குழந்தையான கவிஸ்ரீ இத்திகாவை வீட்டின் அருகே உள்ள மழலையர் பள்ளிக்கூடத்திற்கு நேற்று காலை ஜெயஸ்ரீ அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மதியம் பள்ளிக்கூடத்தின் இரண்டாவது அறையில் உள்ள கழிவறைக்கு சென்ற குழந்தை அங்கிருந்த தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்துள்ளது. இதில் நீரில் மூழ்கி … Read more

இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க பள்ளி – கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்: விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார் காவல் ஆணையர்

சென்னை: இளைய சமுதாயம் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும், இளைய சமுதாயம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக, போலீஸ் அதிகாரிகள் தலைமையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப் … Read more

திருச்சிக்கு குட் நியூஸ்: ரூ350 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு; ஓராண்டில் பஞ்சப்பூர் பஸ் நிலையம்!

தமிழகத்தின் மையப்பகுதியாக இருக்கும் திருச்சி மாவட்டத்தை தமிழகத்தின் 2-வது தலைநகராக அறிவிக்க அவ்வப்போது கோரிக்கை எழுந்து வருகிறது. சென்னைக்கு நிகராக உள்ள திருச்சிக்கு நாள்தோறும் லட்சக்கணக்காக மக்கள் வந்து செல்கின்றனர்.  மேலும் திருச்சியை மையமாக வைத்து போர் தளவாடத் தொழிற்சாலை, மத்திய அரசின் பங்களிப்பில் பெல் தொழில் நிறுவனம், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே தொழிற்சாலை என பிரபலமான தொழிற்சாலைகளும், இதனை நம்பி சிறு குறு தொழில் நிறுவனங்களும் இயங்கி வருகின்றது.  அதைப்போல் மத்திய … Read more

தேனி || முன்னாள் ராணுவ வீரர்களால் அல்லோலப்பட்ட கும்பகரை அருவி.. மதுபோதையில் ரகளை..!

பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், தேனியை பாலமுருகன், அருப்புக்கோட்டையை சேர்ந்தவ கந்தசாமி உள்ளிட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அவர்களது நண்பர்களுடன் அருவிக்கு குளிக்க சென்றனர்.அப்போது அங்கு வந்த பெண்களிடன் அவர்கள் தகாத முறையில் நடந்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண்கள் வனத்துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை மடக்கி பிடித்தபோது போதை ஆசாமி ஒருவர் கத்தியை கொண்டு வனத்துறையினரை தாக்க முயன்றார். … Read more

அரசுக் கல்லூரியில் பதக்கங்கள் பெற்று படிப்பை நிறைவு செய்த 28 மருத்துவ மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: நீட் தேர்வு அறிமுகமாவதற்கு முன்பு, மாநில பாடத் திட்டப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்களுடன் மருத்துவப் படிப்பை சிறப்பாக நிறைவு செய்துள்ள 28 மாணவ, மாணவிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் அளித்து அவர்களை ஊக்குவிக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் திறமையை தேசிய அளவில் வெளிப்படுத்தி வருகின்றனர். மாநில பாடத்திட்டத்தில் … Read more