ராமேசுவரம் பயணம்: அப்துல் கலாம் இல்லத்தை பார்வையிட்ட தமிழக ஆளுநர் குடும்பத்தினர்

ராமநாதபுரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அதனையடுத்து தனுஷ்கோடி அரிச்சல்முனை, அப்துல் கலாம் இல்லம், அப்துல் கலாம் நினைவிடம் ஆகியவற்றை பார்வையிட்டார். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் நேற்று மாலை மதுரையிலிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் வழியில் ராமநாதபுரம் அரசு விருந்தினர் இல்லத்தில் சற்று ஓய்வு எடுத்துவிட்டு சென்றார். பின்னர் … Read more

வங்கி மேலாளர் பலி எதிரொலி.. எடை அதிகமான மரத்தின் கிளைகளை வெட்டும் பணிகள் தீவிரம்

சென்னையில் நேற்று மரம் முறிந்து விழுந்த விபத்தில் வங்கி மேலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சென்னை கே.கே. நகர் பகுதியில் அதிக எடை கொண்ட மரத்தின் கிளைகளை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விவசாயிகளுக்கு இலவசமாக 3 வகை உரம்: குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கிய அமைச்சர் நேரு

KN Nehru initiates providing fertilizer packs to farmers for crop production in Trichy: தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி, திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடித் தொகுப்பு வழங்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தமது சொந்த மண்ணான லால்குடி பகுதியில் இன்று தொடங்கி வைத்தார். லால்குடி எல்.அபிஷேகபுரத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் இன்று (25.06.2022) நடைபெற்ற விழாவில் குறுவை சாகுபடித் தொகுப்பு வழங்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு … Read more

உடல்நிலை நலம்பெற வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி- தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!

தனது உடல்நிலை நலம்பெற வாழ்த்தியவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- “தொலைபேசி வாயிலாகவும், டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல் நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தொலைபேசி வாயிலாக விசாரித்த மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சி … Read more

விசாரணை முடியும் வரை யாரிடமும் டெபாசிட்களை பெறக் கூடாது-ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறை விசாரணை முடியும் வரை டெபாசிட்களை பெறக்கூடாது என ஆரூத்ரா நிறுவனத்திற்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என அதன் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு ஆணை பிறப்பித்துள்ளது. ஆயிரத்து 678 கோடி ரூபாய் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். அதன் விசாரணையில், நிர்வாக இயக்குனர் உட்பட 5 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை … Read more

அக்னி பாதை போராட்டம் | “மோடி அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்” – காங்கிரஸாருக்கு கே.எஸ்.அழகிரி அறிவுரை

சென்னை: “அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி ஜூன் 27-ல் நடத்தும் மாநிலம் தழுவிய போராட்டம், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்” என்று தமிழக காங்கிரஸாருக்கு அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ராணுவ பணிகளுக்கு ஆள் சேர்ப்பதில் நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளை புறக்கணித்து விட்டு புதிய நடைமுறை மூலம் 46 … Read more

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த 9ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு.. ஆரணி அருகே சோகம்!

ஆரணி அருகே நேற்று முன்தினம் காணமல் போன 9 ம் வகுப்பு மாணவன் இன்று கிணற்றில் சடலமாக மீட்பு. ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாலிக் பாட்சா என்பவரின் மகன்கள் முகமது அலி, முகமது ஆசிப். இளைய மகன் முகம்மது ஆசிப் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த முகமது ஆசிப், வீட்டிலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றிருக்கிறான். ஆனால் … Read more

‘ஓவரா ஆடாதீங்க; ஓட்ட நறுக்கி விடுவோம்’: திருச்சியில் போலீசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பா.ஜ.க

க.சண்முகவடிவேல்  Karuppu Muruganantham BJP Tamil News: சூர்யா சிவாவை திருப்தி படுத்தும் நோக்கோடு தமிழக காவல்துறையை கண்டித்து தமிழக பாஜகவினர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட முயன்று கைதாகினர். இதுகுறித்த விபரம் வருமாறு; திருச்சி பறவைகள் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜக மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளருமான சூர்யா சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கார் மீது உரசி பெரும் சேதத்தை … Read more

விளையாட்டாக இருந்த மாணவனை கண்டித்த பெற்றோர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு.!

பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காஞ்சிகோவில் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மிதுமித்தின்(வயது 17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாத மிதுமித்தினை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது … Read more

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்

கரூரில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சக்திவேல் என்பவரின் வீட்டின் முன் நின்ற 2 இருசக்கர வாகனங்கள், நேற்று தீக்கிரையான நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்த போலீசார், மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் தீ வைத்து விட்டு சென்றவதை கண்டறிந்தனர். சில நாட்களுக்கு முன் இதே பகுதியில் மற்றொரு இரு சக்கர வாகனம் தீக்கிரையான நிலையில், தொடர் தீவைப்பு தொடர்பாக வீடியோவில் உள்ள … Read more