பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன? வெளியான தகவல்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் என்ன பேசினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார் இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன்., முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் உடன் … Read more

சர்க்கரை நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடலாமா?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நீரிழிவு – ஒரு நாள்பட்ட, வளர்சிதை மாற்ற நோய் – இந்தியாவில் 20 மற்றும் 70 வயதுக்குட்பட்டவர்களில் 8.7 சதவீத நீரிழிவு நோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டில் வளர்ந்து வரும் ஒரு சவாலாக உள்ளது இந்த நிலை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்துவதற்கு வழிவகுக்கிறது, இது சிகிச்சையளிக்கா விட்டால், கண்கள், இதயம், சிறுநீரகம் மற்றும் பல உடல் பாகங்களை பாதிக்கலாம். எனவே, நீரிழிவு அல்லது நீரிழிவு நோய்க்கு முந்தை நிலையில் … Read more

புதிய அஸ்திரத்தை கையிலெடுக்கும் ஓபிஎஸ்.. முக்கிய புள்ளி வெளியிட்ட பரபரப்பு தகவல்.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்து முடிந்துள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றபடி அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு ஒன்றை அளித்த மனுவை ஏற்றுக்கொண்டு, அடுத்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு … Read more

மரம் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரம்.. விபத்துக்கும் மழைநீர் வடிகால் பணிகளுக்கும் தொடர்பில்லை – மேயர் பிரியா!

சென்னை கே.கே.நகரில் மரம் விழுந்து ஏற்பட்ட விபத்து இயற்கையானது என்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கும் விபத்திற்கும் தொடர்பில்லை என்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். நேற்று மாலை கே.கே.நகரில் மரம் சாய்ந்து காரின் மீது விழுந்ததில், காரில் பயணித்த பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார். மழைநீர் வடிகால் பணிகளால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்பட்ட நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்த பின் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த மேயர் … Read more

சசிகலா நாளை முதல் சுற்றுப்பயணம்: தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்

சென்னை: அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க சசிகலா முடிவு செய்துள்ளார். முதல்கட்ட சுற்றுப்பயணத்தை சென்னையில் இருந்து நாளை தொடங்க உள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்ஜிஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன்படி, ஜூன் 26-ம்தேதி (நாளை) பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு … Read more

நாமக்கல்: புதிய உச்சத்தை தொட்ட முட்டை விலை – காரணம் என்ன?

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 5 ரூபாய் 20 காசுகளில் இருந்து 5 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 22-ம் தேதி 10 காசுகள் விலை உயர்த்தி 5 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் ஒரே நாளில் 15 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 35 காசுகளாக … Read more

கடுகு எண்ணெய், உப்பு.. வறட்டு இருமலை உடனே ஆற்ற சிம்பிள் ஆயுர்வேத வைத்தியம்!

சளி அல்லாத வறட்டு இருமல் மிகவும் தொந்தரவாக இருக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒவ்வாமை அல்லது எரிச்சல் காரணமாக வறட்டு இருமல் ஏற்படலாம். எனவே, நிவாரணத்திற்காக, பலர் நீராவி பிடிப்பது, கஷாயம் குடிப்பது போன்ற வைத்தியங்களை முயற்சிக்கின்றனர். இங்கு ஆயுர்வேத நிபுணர் மிஹிர் காத்ரி, வறட்டு இருமலை உடனடி குணமாக்கும் எளிய ஆயுர்வேத வைத்தியம் ஒன்றை பரிந்துரைக்கிறார். வறட்டு இருமல் மிகவும் எரிச்சலூட்டும், நீங்கள் தூங்கக்கூட முடியாது. நீங்கள் தூங்க முயற்சிக்கும் … Read more

இன்றைய (25.06.2022) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4745 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37960-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

’தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த வேண்டியது நமது கடமை’ – ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன, அவற்றை செய்து முடிக்க வேண்டியது நமது கடமை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “சாமானியர்களுக்கான சமூகநீதியைக் காக்க ஆட்சி மகுடத்தை உதறித் தள்ளிய முன்னாள் பிரதமர் விபி சிங் அவர்களின் 92வது பிறந்தநாள் இன்று. இந்தியாவில் சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு … Read more

மதுரை: மீனாட்சியம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார். தமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தனது 80வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு சென்னை மற்றும் கோவையில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதுரையில் நாளை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இசையென்றால் இளையராஜா எனும் நிகழ்ச்சி நாளை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்துள்ள இளையராஜா இன்று அதிகாலை … Read more