தமிழகத்தில் போட்டி பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் தான்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்து அறிவித்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. தொடர்ந்து, மாநில அரசுகளும் உள்ளூர் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால், மத்திய அரசு இதுவரை பலமுறை … Read more

தினம் தகராறு.. மூன்றாவது மனைவி, மாமனார் , மாமியாரை கொலை செய்த கணவன்.. பஞ்சாப்பில் நடந்த கொடூரம்..!

குடும்ப தகராற்றில் மனைவி மற்றும் மாமனார் மாமியாரை கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரில் ஷிவ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுனில். இவர் முதல் 2 மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில் ஷில்பி என்பவரை    திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் மகன் ஒருவன் உள்ளான். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. சம்பவதன்று, இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை … Read more

தமிழக அரசு பணிகளில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. ஒரே நாளில் 2,000 பேர் ஓய்வு..

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்ட பின்பு இன்று முதன் முறையாக, இரண்டாயிரம் பேர் ஓய்வு பெறுவதால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களுக்கான ஒய்வு பெறும் வயது இரண்டு ஆண்டுகளுக்கு முன் 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது ஓய்வு பெறுபவர்களால் … Read more

தூர்வாரும் பணிகளால் குறுவையில் 5.20 லட்சம் ஏக்கர், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கர் சாகுபடி உயரும்: தமிழக அரசு எதிர்பார்ப்பு

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்டுள்ள தூர்வாரும் பணிகளின் மூலம் கடந்த ஆண்டைவிட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். இரண்டாவது நாளான இன்று (மே 31) நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்வர் … Read more

தமிழ் வழி கல்வியில் பள்ளிப் படிப்பு – 24 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் அசத்திய தஞ்சை மாணவி

மைக்கேல்பட்டியை சேர்ந்த ரெனிட்டா என்ற இளம்பெண், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மைக்கேல்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ரவி – விக்டோரியா தம்பதியினரின் மகள் ஏஞ்சலின் ரெனிட்டா. இவர், மைக்கேல்பட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படித்துள்ளார். 10-ம் வகுப்பில் 500-க்கு 490 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1200-க்கு 1158 மதிப்பெண்களும் பெற்று உள்ளார். தமிழ்வழி கல்வியில் பள்ளி படிப்பை முடித்த … Read more

விஜய் டி.வி ராமர் ஒரு அரசு அதிகாரி… அதுவும் மதுரையில்!

தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் என்றாலே நினைவுக்கு வருவது விஜய் டி.வி பிரபலங்கள். அதிகமான ரியாலிட்டி ஷோக்களை நடத்தி ரசிகர்கள் மத்தியில் காமெடி கலைஞர்களை பிரபலப்படுத்திய பெருமை விஜய் டிவிக்கு உண்டு. இதில் என்னம்மா இப்படி பண்றீங்ளேமா என்ற ஒற்றை வரியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ராமர். என்னம்மா ராமர் என்றால் அனைவருக்கும் அத்துபடி என்று சொல்லும் காலம் போய் தற்போது ராமர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஒரு நபராக மாறிவிட்டார் ராமர். ஆத்தாடி என்ன … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விழுந்து விபத்து..!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மைசூர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது செம்மண் திட்டு என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து … Read more

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகை 9602 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு..

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகை 9602 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய 86912 கோடி ரூபாயையும் விடுவித்துள்ளதாக அறிவிப்பு தமிழ்நாடு, மகாராஷ்ட்ரம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை விடுவிப்பு இன்று வரையிலான நிலுவைத்தொகை முழுவதையும் விடுவித்து உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு… Source link

“எங்கள் ஆதரவாளர்களை கைது செய்து பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது திமுக அரசு” – வானதி சீனிவாசன்

கோவை: “திரும்பத் திரும்ப எங்கள் கட்சி ஆதரவாளர்களை கைது செய்வதன் வாயிலாக பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவி செய்கிறது” என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து கோவையில் வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்தெந்த வாக்குறுதிகளை அளித்து … Read more

வயது உயர்த்தப்பட்டதற்கு பின் நடக்கும் முதல் பணி ஓய்வு: ஒரேநாளில் 5,300 பேருக்கு ஓய்வு

ஓய்வு பெறக்கூடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயது 60 ஆக உயர்த்தப்பட்ட பின்பு இன்று முதன் முறையாக அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். இதில் இன்று ஒரே நாளில் சுமார் 5,300 பேர் ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் ஒய்வு பெறும் வயது, கடந்த 2020-ம் ஆண்டு 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வு பெறாமல் … Read more