கூட்டுக் கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் பாஜக பிரமுகர் சூர்யா

பேருந்து உரிமையாளரிடம் பணம் கேட்டு பேருந்தை கடத்தியதாக பாஜக பிரமுகர் சூர்யா கூட்டுக் கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 11ஆம் தேதி உளுந்தூர்பேட்டை கெடிலம் அருகே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்தும், டெம்போ டிராவலர் வாகனமும், காரும் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் சூர்யாவுக்கு சொந்தமான காரின் இடது புறத்தில் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து விக்கிரவாண்டியில் இருந்த பேருந்தின் உரிமையாளர் அண்ணாமலையிடம், சூரியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காரில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்வதற்கு … Read more

எலும்பை வலுவாக்கும் உளுந்தங்களி ரெசிபி.. எப்படி செய்றதுனு பாருங்க!

உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது. ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உளுந்தங்களி எப்படி செய்வது … Read more

எம்.புதூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு.!!

கடலூர் மாவட்டம் எம் புதூர் பகுதியில் வானவேடிக்கை தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது.  இந்த விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் நேற்று மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  இதையடுத்து,  எம் புதூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் … Read more

காலியாக உள்ள 13,300 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியீடு.!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 300 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் தொகுப்பூதியமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், முதுகலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய … Read more

தென்மாவட்ட ரயில்களில் தீபாவளி முன்பதிவு – தொடங்கிய சில நிமிடத்தில் முடிந்தது

சென்னை: தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கிய நிலையில், பாண்டியன், பொதிகை உட்பட முக்கிய ரயில்களின் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளின் இடங்கள் 2 நிமிடங்களில் நிரம்பி, காத்திருப்போர் பட்டியல் காட்டியது. சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள், ஆண்டுதோறும் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக ரயில்கள், பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்வார்கள். நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். அதனால், … Read more

பொதுக் குழுவில் ஓ.பி.எஸ் பெயரை தவிர்த்த சீனியர்கள்: அடுத்த முதல்வர் எடப்பாடி என வேலுமணி பேச்சு

அனைத்து தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிமுகவின் ஒற்றை தலைமைகக்கான தலைவர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும், அவர் மீண்டும் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் கடந்த ஒரு வார காரணமாக ஒற்றை தலைமை யார் என்பது தொடர்பான விவாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த பரபரப்புக்கு இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் முடிவு கிடைத்துள்ளது. கட்சியில் ஒற்றை தலைமை கொண்டுவந்தால் யாருடைய தலைமையில் கட்சி இயங்கும் என்பது குறித்து ஒபிஎஸ் இடையே கடுமையான … Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

கோவில் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிமின் அடக்க தலம் உள்ளது. இங்கு முஸ்லிம் மதத்தினர் மட்டுமல்லாது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். … Read more

கஞ்சா குடிக்கியான 16 வயது பள்ளி சிறுமி.. தங்கைக்காக திருட்டு என உருட்டு..!

சென்னையில் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானதால் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசில் சிக்கியதும் தங்கையை டாக்டர் ஆக்குவதற்காக திருடியதாக கூறி அனுதாபம் தேட முயன்ற சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை ராயப்பேட்டை கோபாலபுரம் தனியார் பள்ளி அருகே கடந்த 15 ந்தேதி சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்தவர்கள் செல்போனை பறித்துச்சென்றனர். அதே இடத்தில் 18 … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 24-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 25-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 26, 27-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி … Read more