மத்திய அரசின் வரி விதிப்பு பெண்களை பாதிக்காமல் இருக்கவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

மதுரை: பெண்கள் பாதிக்கப்படாத வகையில் வரிகளை விதிக்கவேண்டும் என, மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் காங்கிரஸ் பிரமுகர் இல்ல விழாவில் திருச்சி மக்களவை காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் இன்று பங்கேற்றார். இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ”எந்த பொருளாக இருந்தாலும், மத்திய அரசு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிறது. தற்போது, பால், தயிர் போன்ற சமையல் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பொருளாதார ரீதியில் சிரம்மப்படுகின்றனர். ஏழை, … Read more

வாலிபரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கிய சிறுவர்கள்.. மெரினாவில் பரபரப்பு சம்பவம்!

சென்னை மெரினா பகுதியில் வாலிபரிடம் வீண் தகராறு செய்து கத்தியால் தாக்கிய வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை வியாசர்பாடியில் வசித்து வரும் இளமாறன் என்பவர் புகைப்பட கலைஞராக பணி செய்து வருகிறார். இவர் தனது நண்பரின் திருமண போட்டோஷுட் எடுப்பதற்காக, 6 நண்பர்களுடன் சேர்ந்து இன்று காலை சுமார் 6.30 மணியளவில் மெரினா, நம்ம சென்னை பின்புறம் மணற்பரப்பில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த ஐஸ்ஹவுஸ் … Read more

எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய ராகுல் காந்தி? காங்கிரஸ் விளக்கம்!

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு பேசியதாக செய்தி வெளியான நிலையில், காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் … Read more

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேர் கைது.!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

தூங்கிக்கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது எதிர்பாராதவிதமாக ஏறிய டிராக்டர்… நிகழ்விடத்திலேயே பலியான சோகம்!

கோவை நெகமம் அடுத்த ஆண்டிபாளையத்தில் இயங்கிவரும் தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் தூங்கிக்கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது டிராக்டர் ஏறியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த உமேஷ் ரபத் என்ற தொழிலாளி, நேற்று மாலை தனது குழந்தை ஆராதனாவை தென்னை நார் உலரவைக்கும் களத்தின் ஒரு பகுதியில் சாக்கு விரித்து அதன் மீது தூங்க வைத்துள்ளார். காற்றடித்து சாக்குப்பை குழந்தையை மூடியிருந்ததை அறியாமல் மேற்குவங்கத்தை சேர்ந்த உத்தம் பத்ரா என்பவர் டிராக்டரை இயக்கியதில் அது … Read more

புதுச்சேரி | காலரா பரவல் தடுப்புப் பணிகள் தீவிரம்: காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள் 3 நாட்கள் விடுமுறை 

காரைக்கால்: காரைக்காலில் காலரா பரவல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் காலரா பரவல் சூழல் உருவாகியுள்ள நிலையில், புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜூலை 3) மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.சிவா, மாவட்ட … Read more

மெரினா கடலில் குளித்த 12 ஆம் வகுப்பு மாணவன், கல்லூரி மாணவர் பலி.!

மெரினாவில் குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர், கல்லூரி மாணவர் என இருவர் அடுத்தடுத்து பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சாகுல் என்பவரது மகன் அஷ்ரப் (17). இவர் மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது வகுப்பு தோழன் டேனியலுடன் சேர்ந்து நேற்று பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு இருவரும் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர். நொச்சி நகர் டி பிளாக் எதிரே … Read more

ஜாலியா சிரித்து பேசிய கோஹ்லி – பேர்ஸ்டோ; மைதானத்தில் திடீரென வாக்குவாதம்: வைரல் வீடியோ

இங்கிலாந்தில் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், விராட் கோலி, ஜானி பேர்ஸ்டோ இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பரபரப்பான வீடியோ வைரலாகி வருகிறது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயனம் செய்து விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் இந்தியா-இங்கிலாந்து இடையே 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் … Read more

வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த 2 பேர் கைது.!

வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் காவல்துறையினர், சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது லோகநாதன் என்பவர் மது பாட்டில்கள் மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் … Read more

அழிக்கால் கிராமத்தில் ஆக்ரோஷமாக சீறி வரும் அலைகளால் ஊருக்குள் புகுந்த கடல்நீர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழிக்கால் கிராமத்தில் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆக்ரோஷமாக சீறி வரும் அலைகளால் கடல்நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. அவ்வப்போது மணலை சுருட்டிக்கொண்டு அலை சென்ற நிலையில் சில வீடுகள் சிறிதளவு மண்ணுக்குள் புதைந்திருக்கின்றன. தண்ணீர் புகுந்துள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடல் நீர் புகாதவாறு சிலர் வீடுகள் முன்பாக  மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.  Source link