தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 24-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 25-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 26, 27-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி … Read more

தஞ்சையில் கடத்தப்பட்ட இளைஞர் பிணமாக மீட்பு: கொலை நடந்தது எப்படி?

தஞ்சாவூரில் ஜுன் 21-ம் தேதி இரவு மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் இன்று காலை உடலில் பல இடங்களில் குத்துக் காயங்களுடன் ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.அவரது கழுத்தை அறுத்து,  அவரது உடலில் பல முறை குத்தி கொடூரமான முறையில்  கொலை செய்து அவரது உடலை ஆற்றில் வீசி சென்றுள்ளது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் மனோகரன் (30). கூலித் தொழிலாளியான இவர், கடந்த இரு … Read more

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்கள் – திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்களே தவிர திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது’ என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் பேத்தி தீப்தி – வஷ்வக்சேனா ஆகியோர் திருமணம், சென்னை திருவான்மியூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் பேசியதாவது: இந்த பெரிய மண்டபத்தில் நம் வீட்டு திருமணம்போல் எண்ணி நாம் பங்கேற்றுள்ளோம். இன்னொரு பக்கம் திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு … Read more

அரசுப் பள்ளிகளில் இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: அன்பில் மகேஷ் பேட்டி

Anbil Mahesh says till now 2 lakh pupils join Government school: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், திருவெறும்பூர், மருங்காபுரி, மணப்பாறை, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்களிடம் நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற … Read more

திருவள்ளூர்.! இருசக்கர வாகனம்-கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு.!

திருவள்ளூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த மடவிளாகம் தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் உமா சங்கர்(21). இவர் நசரத்பேட்டையில் உள்ள தனது நண்பரான விஜயுடன் நேற்று கல்லூரிக்கு சென்று மாற்று சான்றிதழ் விண்ணப்பித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. … Read more

வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா நகல் பெற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது.!

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா நகல் பெற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைதுசெய்தனர். ஆசூரை சேர்ந்த கலைமணி என்பவருக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டாவை கிராம கணக்கு மற்றும் வட்ட கணக்கில் திருத்தம் செய்ய அவரது மகன் யுவராஜ் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அங்கு எழுத்தராக உள்ள சிவஞான வேலு பதிவேடுகளை எடுத்து கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு … Read more

சட்டத்திற்குப் புறம்பான தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்: அதிமுக பொதுக்குழு மேடையில் வைத்திங்கம் ஆவேசம்

சென்னை: “சட்டத்திற்கு புறம்பான தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்று அதிமுக பொதுக்குழு மேடையில் ஆவேசமாக அறிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார் வைத்திலிங்கம். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்படுவதாக கே.பி.முனுசாமி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை … Read more

வீட்டுல பீட்ரூட் இருக்கா? ஹோம்மேட் வைட்டமின் சி ஃபேஸ் பேக் இப்படி பண்ணுங்க!

பீட்ரூட்டில் இரும்பு மற்றும் வைட்டமின் சி போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக அதன் வைட்டமின் சி உள்ளடக்கம், சருமத்திற்கு மிகவும் நல்லது. எனவே, பீட்ரூட் வயதாவதை தடுக்கிறது, முகப்பரு வராமல் தடுக்கிறது மற்றும் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்று ஹெல்த்லைன் குறிப்பிடுகிறது. எனவே பளபள முகத்துக்கு இந்த ஹோம்மேட் வைட்டமின் சி ஃபேஸ் பேக்கை நீங்கள் முயற்சி செய்யலாம். வைட்டமின் சி … Read more

கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்.!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் இன்று வழக்கம்போல ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உருகுலைந்த நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும்,  இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more