தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்.!

தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று பரவல அதிகரித்து வருகிறது. எனவே, தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் மூலம் அது பரவும் ஆபத்து உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், மத்திய அரசும் … Read more

ரேஷன் ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்வு குறித்து பரிசீலனை – ஒரு வாரத்தில் நல்ல முடிவு என அமைச்சர் பெரியசாமி தகவல்

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டி.ஏ) உயர்வு வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 33,174 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1.99 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். இந்த ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் என 24 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்ததுபோல, இந்த ஆண்டு ஜனவரி முதல் 14 … Read more

திருச்சி, உத்தமபாளையம்… தமிழகத்தில் சனிக்கிழமை இந்த ஊர்களில் மின்தடை!

திருச்சி மாவட்டத்தில் பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடைபெற இருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பு காரணமாக ஒரு சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி மாவட்டம் அருள்மிகு பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருச்சி மாவட்டம் உறையூரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 7 மணி … Read more

குடியரசு தலைவர் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாமகவின் வாக்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா?  

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பே, தேர்தலை நடத்தி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம், 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதியும் நடைபெறும். புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார், இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் … Read more

Polimer News – Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விபத்தை சரி செய்ய வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் மீது வேன் மோதியதில் 2பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராசிபுரம் அடுத்த தனியார் கல்லூரி அரு… Source link

ஆன்லைன் சூதாட்டம் | அவசர சட்டம் இயற்ற பழனிசாமி வலியுறுத்தல் – ஆய்வுக் குழு அமைத்ததற்கு விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், ஆன்லைன் சூதாட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்திருப்பதை தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தின் தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ஆன்லைன் சூதாட்டத்தால் … Read more

ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கான பணிகள் குறித்து அரசாணை

ஆன்லைன் ரம்மி சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை தமிழகத்தின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார். உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டிருக்கும் அந்த அரசாணையில், இந்த ஆன்லைன் விளையாட்டுகள் உண்மையிலேயே திறன்களை வளர்கிறதா என்பது குறித்து இந்த குழு ஆராயும் என தெரிவித்துள்ளார். மேலும், `ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது எவ்வாறு என்பது குறித்தும் இந்தக் குழு ஆராய வேண்டும். ஆன்லைன் விளையாட்டுக்களால் … Read more

பீட்ரூட், பூண்டு… பி.பி அதிகம் இருக்கிறவங்க இந்த 4 உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

நம்மில் பலர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்போம். மேலும் உயர் ரத்த அழுத்தத்தை மாத்திரைகளால் மட்டும் கட்டுப்படுத்திவிடலாம் என்று யோசிப்போம். ஆனால் நம் வாழ்க்கை முறையில் செய்துகொள்ளும் மாற்றங்கள் மற்றும் உணவு முறையில் செய்யப்படும் மாற்றம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக இந்த 4 உணவுகளை தவறாமல் சாப்பிடுவது அவசியம். கீரை வைகள்: கேல் கீரை, லெட்யூஸ் போன்ற கீரை வகைகளில் பொட்டாஷியம், மான்கனிஸ், கால்ஷியம் , ஆன்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதில் இருக்கும் … Read more

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்.. பொதுமக்கள் கடலில் இறங்க தடை.!

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்களுக்கு கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.  இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் … Read more