பொருளாதார நெருக்கடியை நோக்கி பாகிஸ்தான்; பொருளாதார மீட்சிக்கு இலங்கை ஒப்புதல்

Pakistan FM alerts economic crisis world news today in Tamil: உலகம் முழுவதும் இன்று நடந்த முக்கிய, சுவாரஸ்யமான நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். ரஷ்ய விமர்சகர் சிறையிலிருந்து மாற்றம் சிறையில் அடைக்கப்பட்ட கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி தனது சிறைக் காலனியிலிருந்து மாற்றப்பட்டு அறியப்படாத இடத்திற்கு மாற்றப்பட்டதாக உயர்மட்ட உதவியாளர் ஒருவர் செவ்வாயன்று தெரிவித்தார். இலங்கை அமைச்சரவை ஒப்புதல் பொருளாதார மீட்சியை எளிதாக்குவதற்கும் எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடியைத் தணிப்பதற்கும் நிறுவனங்களின் வருமானத்தின் அடிப்படையில் … Read more

மனித உயிர்களைக் குருதிக்கொடையின் மூலம் காப்போம் – சீமான்.!

குருதிக்கொடை அளித்து, மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்க உலக குருதிக்கொடையாளர் தினத்தில் ஒவ்வொருவரும் உறுதியேற்போம் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கொடை எனும் மகத்தானக் கோட்பாட்டை உலகுக்குப் போதித்தவர் தமிழ் மறையோன் வள்ளுவப்பெருந்தகையாவார். தமிழின முன்னோர்களும், மூதாதையர்களும் கொடையாளர்களாக விளங்கியிருக்கின்றனர் என்பதை வரலாறுநெடுகிலும் காணக்கிடைக்கின்ற சான்றுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.  பொன்னையும், பொருளையும், நிலத்தையும், உணவையும் கொடையாகக் கொடுப்பதைக் காட்டிலும், குருதியைக் … Read more

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து உணவு ஒப்பந்தத்தை பாலாஜி சர்ஜிகல் நிறுவனம் பெற்றது ; அனிதா டெக்ஸ்காட்டிற்கு டெண்டர் ஒதுக்கீடு இல்லை – அமைச்சர் மா.சுப்ரமணியன்

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து உணவு ஒப்பந்தத்தை பாலாஜி சர்ஜிகல் என்ற நிறுவனம் பெற்றதாகவும், பாஜக தலைவர் அண்ணாமலை புகார் கூறிய அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் பேட்டியளித்த அவர், ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், பணி நேரத்தில் மருத்துவமனைக்கு வராத மருத்துவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.     Source link

ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் | “பாஜக குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது” – அண்ணாமலை

சென்னை: ஊட்டச்சத்து பெட்டக டெண்டரில் “எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும், தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இது குறித்து இன்று காலை பேட்டியளித்த மருத்துவ … Read more

‘6 மாதங்களாக வெற்றி பெற்றிருந்தாலும் சிறப்பாக விளையாடவில்லை’ -கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா

கடந்த 6 மாதங்களில் பல தொடர்களை வென்று இருந்தாலும் நான் சிறப்பாக விளையாடவில்லை, போட்டிகளில் மாற்றங்கள் மேற்கொள்வது குறித்த பயிற்சிகளை தற்போது பயிற்சியாளருடன் இணைந்து மாற்றங்களை மேற்கொண்டு வருகிறேன் என இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய தலைமுறைக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் பி டீம் அணிக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரக்ஞானந்தா புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில்: “ஒலிம்பியாட் தொடரில் … Read more

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… வீடு இடிக்கும் வேலையா இருக்குமோ?

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குட எதிரிவினையாற்றுபவர்கள் நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். நகைச்சுவை உணர்வு, நகைச்சுவைப் படம் பார்க்கும் பழக்கம், அரசியல் அறிவு, நாகரிகமான கிண்டலான வார்த்தைகள் இவை இருந்தால் போதும் நீங்களும் நல்ல அரசியல் மீம்ஸ் கிரியேட்டர்தான். நாகரிகமான அரசியல் மீம்ஸ்கள், கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். அப்படி, சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற நல்ல அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம். நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “ஜனாதிபதி தேர்தலில் பொது … Read more

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ரவீந்திரநாத் எம்.பி அந்த ரகசியம் என்ன.?! சந்திப்பில் பேசப்பட்டது என்ன? 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி. முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த போது, திமுக ஆட்சியை பாராட்டியதாக அமைச்சர் துரைமுருகன் அம்பலப்படுத்தி விட்டார் என்று ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து தி.மு.க. கூட்டம் ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசுவதுபோல உள்ள அந்த பதிவில், “நானும் முதல்வரும் அறையில் உட்கார்ந்து இருந்தோம். அப்போது அங்கு ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி. மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்தார்.  அவர் எம்.பி. என்பதால் வரச்சொல்லுங்கள் என்று முதல்வர் தெரிவித்தார். அவர் … Read more

பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த குழந்தையின் வீடியோ வைரல்

தமிழகத்தில் நேற்று முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கிய நிலையில், பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த குழந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியில் பள்ளி தொடங்கிய முதல் நாளில் ஏராளமான மாணவச் செல்வங்கள் ஆர்வத்தோடு பள்ளிக்கு சென்ற நிலையில், அரசு உதவி பெறும் குருகுலம் பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த குழந்தையின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சக பெற்றோரும் சிறுவனை ஆறுதல் படுத்த முயன்றனர். தொடர்ந்து, மழலை மொழியில் … Read more

புதுச்சேரி முதல்வரை தள்ளிவிட்ட விவகாரம்:  சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தள்ளிவிட்ட விவகாரத்தில் தொடர்புடைய சப் – இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தேரோட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. விழாவில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எதிர்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே தேரோட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மாநில உள்துறை அமைச்சர் … Read more

’எனக்கு வாழப் பிடிக்கவில்லை.. லவ் யூ அம்மா’ – ரயில் முன் பாய்ந்த மாணவனின் உருக்கமான கடிதம்

ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை செய்த நிலையில் மாணவன் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் 2-வது ரெயில்வே கேட் அருகே 17வயது சிறுவன் ரெயிலில் அடிப்பட்டு சடலமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து ரெயிலில் அடிப்பட்டு இறந்த சிறுவன் யார் … Read more