தமிழக செய்திகள்
நயன்தாரா திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் : ஒரு மாதத்திற்கு பின் வெளியான போட்டோஸ்
7 வருடங்களுக்கு மேலாக காதலில் இருந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். சென்னைக்கு அருகே மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்றனர். தொடர்ந்து மறுவீடு அழைப்புக்காக கேரளா மாநிலம் சென்ற விக்கி –நயன் ஜோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன்பிறகு கேரளா பாரம்பரிய உடையில் சாமி தரிசனம் செய்த இவர்கள் … Read more
34-ஆவது ஆண்டில் பா.ம.க: வெற்றியை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவோம்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மடல்.!
பாட்டாளி மக்கள் கட்சி 34-ஆவது ஆண்டில் அடியெடுத்து வாய்க்கும் நிலையில், வெற்றியை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவோம் என்று, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு. “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே…! தமிழ்நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், மக்களுக்கான உரிமைகளை வென்றெடுத்துக் கொடுப்பதை முழு நேரப் பணியாக கொண்டிருக்கும் கட்சியாகவும் திகழும் பா.ம.க., வரும் 16ஆம் தேதி 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34&ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று … Read more
எரிவாயு கசிவு காரணமாக பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. சிலிண்டர் வெடிக்காமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே மேலத்தானியத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் எரிவாயு கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேக்கரி உரிமையாளர் செந்தில் மற்றும் ஊழியர் ஒருவரும் பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடைக்குள் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. எனினும் சிலிண்டர் வெடிக்காமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. தகவல் அறிந்து சென்ற பொன்னமராவதி தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்த நிலையில் விபத்து குறித்து … Read more
தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை: மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை: தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, முனிசிபல் காலனியில் நடைபெற்று வரும் மாபெரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ” தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 3471 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. … Read more
சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்… மருந்துகளின் விலை குறைய வாய்ப்பு
Anonna Dutt Explained: Impact of diabetes medicine sitagliptin going out of patent: சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தான சிட்டாக்ளிப்டின் காப்புரிமையை இழந்துவிட்டதால், பல மருந்து நிறுவனங்கள் மருந்தின் பொதுவான பதிப்புகளை சந்தைப்படுத்தும் வாய்ப்பில் குதித்துள்ளன. இது மருந்தின் விலையை குறைந்தது மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் என்று தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சிட்டாக்ளிப்டின் இரத்தச் சர்க்கரை குறைவு நிலையை (சர்க்கரை அளவு மிகக் குறைதல்) ஏற்படுத்தும் வாய்ப்புகள் இல்லை மற்றும் வலுவான தரவுகளால் … Read more
அதிமுகவின் பொதுச்செயலாளர் போட்டியில் விவேக்? யாருப்பா இந்த விவேக்… குழப்பத்தில் அதிமுகவினர்.!
திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பத்மகிரி பாபா ஆசிரமத்தின் தலைமை பொறுப்பாளர் சரவணகுமார், தனது கனவில் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் பல விஷயங்களை பேசியதாக சொல்லி இருக்கிறார். இதுகுறித்த அவரின் பேட்டியில், “அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு சில விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளார். நான் இன்று இந்த தகவலை உங்களுக்கு தெரிவிக்கிறேன். எம்ஜிஆர் என்னிடம் சொன்னது என்னவென்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைத் தொண்டனுடைய ரத்த … Read more
“தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. சென்னையை … Read more
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு | தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனம் நிதி மற்றும் தங்கம் சார்ந்த வணிகத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம் பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியானது. அதில், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.32 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரப் பணம் மீதான ஆசையைத் தூண்டி,மோசடி செய்யும் … Read more