மதுரை காமராஜர் பல்கலை.யில் 10% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதில் மகிழ்ச்சி: ராமதாஸ்

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 10% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் தளத்தில் அடுத்தடுத்த பதிவுகளில், ”மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு அறிவிக்கப்பட்டிருந்த உயர் வகுப்பு ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. காமராஜர் பல்கலைக்கழகத்தின் சமூக அநீதியை பாட்டாளி மக்கள் கட்சிதான் அம்பலப்படுத்தியது. எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு மத்திய … Read more

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷம் – பெரும் பரபரப்பு

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வரும் 23-ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், அலுவலகத்திற்கு … Read more

தருமபுரியில் தேர் விபத்து; இரண்டு பேர் உயிரிழப்பு

Tamil Nadu: 2 killed, several injured as temple chariot collapses on devotees in Dharmapuri: தருமபுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 13) மாலை கோயில் தேர் சரிந்து விழுந்ததில் பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ஏப்ரல் மாதம் தஞ்சாவூரில் இதேபோன்ற ஒரு விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். தேர் விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், திங்கள்கிழமை மாலை, பாப்பாரப்பட்டியில் உள்ள மாதேஹள்ளியில் உள்ள கோயில் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. … Read more

திருப்பூர்.! மேம்பால தடுப்பில் கார் மோதிய விபத்தில் 3 மாத குழந்தை உட்பட 3 பேர் பலி.!

திருப்பூர் மாவட்டத்தில் மேம்பால தடுப்பில் கார் மோதிய விபத்தில் 3 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல்லில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் மணிகண்டன்(வயது35). இவர் திருச்சியை அடுத்த பெரம்பலூரை சேர்ந்தவர். இவர் கோவையில் உள்ள உறவினரின் திருமணத்திற்காக மனைவி மற்றும் மூன்று மாத கைக்குழந்தையுடன் காரில் சென்றுள்ளார். இதையடுத்து திருமணம் முடிந்தபின் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தாராபுரத்தை அடுத்த சாலக்கடை மேம்பாலத்தில் இருந்த தடுப்பில் கார் பலமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. … Read more

தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி, வைரம், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து அரை கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தெற்கு பெரியார் நகரில் வசித்து வரும் ஜெயச்சந்திரன் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் குருவாயூர் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பினார்.  வீட்டின் பீரோவில் இருந்த அரை கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் இரண்டு … Read more

கஞ்சாவை ஒழிக்க கங்கணம் கட்டிய காவல்துறை: விற்பனை, கடத்தல் குறைவதாக தென்மண்டல ஐஜி தகவல்

மதுரை: சமீபகாலமாக தென் மாவட்டங்களில் இளைஞர்கள், மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். பழைய குற்றவாளிகள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விநியோகித்து தங்களின் கூட்டாளிகளாக மாற்றும் சூழல் உருவானது. போதைப் பொருள் புழக்கத்தால் பல இடங்களில் குற்றங்கள் அதிகரித்தன. இந்நிலையில் அரசின் உத்தரவால் தென்மண்டலத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் எவ்வித சமரசமும் கூடாது என அதிகாரிகளுக்கு தென் மண்டல … Read more

எங்கெல்லாம் மஞ்சப்பை திட்டம் வருகிறது? சுப்ரியா சாஹு பேட்டி

தமிழகத்தின் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்களில் மஞ்சப்பை திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது, கோயம்பேட்டில் தொடங்கி வைத்தது போன்றே பாரிமுனை மற்றும் தமிழகத்தின் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள் தனியார் மால்களில் மஞ்சப்பை திட்டம் வரும் நாட்களில் விரைவில் தொடங்கி வைக்கப்படும். இந்த மெஷின்களில் பயன்படுத்தப்படும் மஞ்சள் பை, மகளிர் சுய … Read more

தயிர் மிஞ்சிவிட்டதா?.. அப்போ இப்படி செஞ்சு பாருங்க!

making paneer with leftover curd; வெயில் காலங்களில் நம் வீட்டில் இன்றியமையாத பொருளாக தயிர் பார்க்கப்படுகிறது. சில தயிர் பிரியர்கள் இருப்பார்கள். தான் சாப்பிடும் எல்லா உணவிலும் தயிர் சேர்த்துகொள்வார்கள். சில நாட்களில் நமது வீடுகளில் தயிர் மிச்சமாகும். இதை என்ன செய்வத் என்று தெரியாமால் நாம் யோசிக்கும் வேளையில் . இனி தயிரை வீணாக்காமல் அதை வைத்து பன்னீர் செய்து பாருங்கள். கடைகளில் பன்னீர் கிடைத்தாலும் வீட்டிலே செய்வது போல் வராது. ஆழமான அடிப்பகுதி … Read more

அரசு பள்ளிகளில் உடனடியாக 50,000 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப்பள்ளிகள், 6587   நடுநிலைப் பள்ளிகள் … Read more

சப்பரம் கவிழ்ந்து உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் உதவி.. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் வழங்கினார்..!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சப்பரம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் சென்று வழங்கினார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மனோகரன் மற்றும் சரவணன் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அமைச்சர், பின்னர் சிகிச்சை பெற்றுவரும் 4 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறி தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார்.  Source link