ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் மூழ்கி உயிரிழப்பு.!

தஞ்சை கும்பகோணம் அருகே திருமலை ராஜன் ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கும்பகோணத்தில் உள்ள எருத்துக்கார தெருவை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஹரிராஜன், ஐயங்கார் தெருவை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் பிரசன்னா ஆகியோர் விடுமுறை தினத்தையொட்டி தனது நண்பர்களுடன் திருமலை ராஜன் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அரைகுறையாக மட்டுமே நீச்சல் தெரிந்திருந்த அவர்கள் இருவரும் ஷட்டர் அருகே ஆழம் அதிகமுள்ள பகுதிக்கு சென்றபோது மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. … Read more

தமிழகத்தில் புதிய உச்சத்தில் காற்றாலை மின் உற்பத்தி

சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி நேற்று (ஜூலை 9) அதிகபட்சமாக 120 மெகா யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று பலமாக வீசும். இந்த காலகட்டத்தில் காற்றாலைகள் மூலம் அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகும். ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே காற்று காலம் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் … Read more

நாளைய அதிமுக பொதுக்குழு, செயற்குழுவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.. இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்காக சென்னை வானகரத்தில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுகவின் பொதுக்குழு நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, நாளை காலை 9 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனிடையே, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் நிறைடைந்துள்ளன. மண்டபத்தின் திடலில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவிற்காக தனித்தனி மேடைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ … Read more

அ.தி.மு.க பொதுக்குழு பேனர்களில் யார், யார் படங்கள்?

அதிமுகவின் இரண்டாவது பொதுக்குழு நாளை சென்னை,  வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுக்குழுவுக்கான பேனர்கள் தயாராகி வருகிறது. பொதுக்குழு நடைபெறும் பகுதியில்  பேனர்கள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓ. பன்னிர் செல்வத்தின் புகைப்படங்கள் பேனர்களில் இடம் பெறவில்லை. அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் பெரிதாக உருவெடுத்தது. அதிமுகவை சரியான வகையில் நிர்வாகம் செய்ய ஒற்றை தலைமை தேவை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிலையில் ஜூன் 23ம் தேதி அதிமுக … Read more

சேலம்.! பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது.!

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது(57). இவரும், இவருடைய நண்பருமான விஜயகுமார்(34) ஆகிய இருவரும் மூட்டை தூக்கும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இதில் விஜயகுமாரிடம், மாது அடிக்கடி செலவுக்கு பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மறுபடியும் மாது தன் வீட்டு செலவிற்காக விஜயகுமாரிடம் 300 ரூபாய் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய … Read more

பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு.. முன்னேற்பாடுகள் தீவிரம்..!

சென்னை வானகரத்தில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஸ்ரீவாரு திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் மெட்ரோ ரயில் நிலையங்கள் போல், கியூ.ஆர். கோட் சோதனை செய்யும் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. உறுப்பினர்களுக்கு நவீன நுட்பத்தில் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில், அதனை ஸ்கேன் செய்ய அந்த எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல், மண்டப வளாகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, … Read more

'நிதி தராமல் பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்கிறார்கள்' – பாஜகவை சாடும் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சி நடைபெறவில்லை. காட்சி நடக்கிறது என்றும் கூட்டணிக்கு குழி பறிக்கும் வேலையை பாஜக அமைச்சர்கள் செய்கின்றனர் என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”புதுச்சேரிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வளர்ச்சியில் மோடி அரசு அக்கறையோடு இருக்கிறது. … Read more

இந்த எக்ஸ்பிரஸ் அழகு எங்க போகுது? ரசிகர்களிடம் சிக்கிய சிவாங்கி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருபவர் சிவாங்கி. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.    விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சிவாங்கிக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர் இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் தற்போது … Read more

கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழப்பு.!

கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் நிஷாத் அஹ்மத், சண்முகி, அலீனா, சஜான், ரித்தின் மற்றும் சுப்ரீத் ஆகியோர் நேற்றிரவு சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இன்று அதிகாலை 4 மணி அளவில் மின்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சண்முகி உடல் நசுங்கி சம்பவ … Read more

“தமிழகத்தில் ஒரே சமயத்தில் 10,000 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்”-டி.ஜி.பி சைலேந்திர பாபு

தமிழகத்தில் தற்போது பயிற்சி பெற்று வரும் 10,000 காவலர்களும் ஒரே சமயத்தில் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும், அப்போது காவல்துறை இளமையுடன் காட்சியளிக்கும் எனவும் டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து திருவள்ளூர் சென்ற அவர், ஆண், பெண் காவலர் பயிற்சி மையங்களில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, தற்போது பயிற்சி பெற்று வரும் 10,000 காவலர்களில் 30 சதவீதம் பேர் பொறியியல் பட்டதாரிகள் என்றார். … Read more