விமானத்தில் கோளாறு.. 7 மணிநேரமாக காத்திருந்த பயணிகள்..!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரையிலிருந்து துபாய் செல்லவிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம், 7 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 161 பயணிகளுடன் துபாய் செல்ல இருந்த அந்த விமானம், பகல் 12 மணியளவில் புறப்பட தயாராக இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் நிறுத்தப்பட்டது. கோளாறை சரிசெய்யும் பணி பல மணி நேரம் நடைபெற்ற நிலையில், இரவு 7 மணி அளவில் அந்த விமானம் துபாய் புறப்பட்டு சென்றது. Source … Read more