தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை … Read more

உங்க நகத்தை இப்படி அழகுபடுத்தி பாருங்க… 5 அல்ட்ரா டிசைன்ஸ்!

உங்கள் நகத்தை அழகுபடுத்த உங்களுக்கு விருப்பம் உண்டா? ஒவ்வொரு முறையும் உங்கள் நகத்தை எந்த வகையில் டிசைன் செய்வது என்று யோசிப்பதில் சலிப்பாகவும் சோர்வாகவும் உணருகிறீர்களா? அப்படியென்றால் அதையெல்லாம் விட்டுவிட்டு, இந்த 10 நெயில் ஆர்ட் டிசைன்களை வீட்டிலேயே செய்து பாருங்கள். இந்த டிசைன்களின் சிறிய குறிப்பு என்னவென்றால், இவை தொழில்முறை உதவியின்றி யார்வேண்டுமென்றாலும் உருவாக்க முடியும், முயற்சி செய்து பார்த்தல் முடிவுகள் உங்களை முற்றிலும் பிரமிக்க வைக்கும். 1. பிரஞ்சு நெயில் கலை வடிவமைப்பு: பெண்கள் … Read more

குடியாத்தம் அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு.!

குடியாத்தம் அருகே ரயில் மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தென்னங்குப்பம் விளையாடபுரம் பகுதியில் சேர்ந்தவர் சொக்கலிங்கம்(வயது 70). இவர் குடியாத்தம்-காவனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர், சொக்கலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

பேரிகார்டு மீது மோதி இருசக்கர வாகனம் விபத்து.. ஹெல்மெட் அணியாததால் வாகன ஓட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு..!

கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனம் சாலையில் வைக்கப்பட்ட பேரிகார்டு மீது மோதிய விபத்தில், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இளங்கோ என்பவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காக்கா தோப்பூர் பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க பேரிகார்டு வைக்கப்பட்டிருப்பதை கவனிக்காமல் வேகமாக வந்த இளங்கோ, பேரிகார்டு மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். … Read more

வைகை கரையில் வடிகாலின்றி கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவர்: மழைக் காலத்தில் மிதக்கும் மதுரை சாலைகள்

மதுரை: மதுரை நகர் பகுதியில் ஓடும் வைகை ஆற்றங்கரையில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளது. வடிகாலின்றி கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரால் மழைநீர் வழிந்தோட முடியாமல் நகர் பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் சாலைகள் தண்ணீரில் மிதக்கும் அவலம் ஏற்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான வருஷ நாடு பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு, 240 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கலந்து, பின் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. வைகை … Read more

இரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா? : எம்பி. சு.வெங்கடேசன்

கோவை – சீரடி ரயில் சேவை தொடர்பாக இரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா? என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூன் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம்என்சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது. ரயில் வண்டி ரயில்வேக்கு சொந்தம், ரயில் தண்டவாளம் சிக்னல் நடைமேடை … Read more

சுகர் இருந்தாலும் வாழைப் பழம் சாப்பிடலாம்; ஆனால்..? நிபுணர் கூறும் சீக்ரெட்

நீரிழிவு நோய் உள்ள மக்கள் அல்லது நீரிழிவு நோய்க்கு தொடக்க நிலையில் உள்ளவர்கள் கூட வாழைப்பழத்தை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று அடிக்கடி கூறப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். “ஆனால், ஒரு உணவியல் நிபுணராக, நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழங்களை சாப்பிடலாம் என்று என்னால் பாதுகாப்பாக சொல்ல முடியும். இருப்பினும், சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் உள்ளன, ”என்று சான்றளிக்கப்பட்ட மருத்துவ உணவியல் நிபுணர், விரிவுரையாளர், நீரிழிவு கல்வியாளர் மற்றும் நியூட்ரின் நிறுவனர் லக்ஷிதா ஜெயின் கூறியுள்ளார். மேலும் … Read more

பல்லவ, சோழ, பாண்டியர் வரலாறுகள் எங்கே? அது நடந்தால் தான், உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.!

சோழர், பாண்டியர், பல்லவர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன்? – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி.! நேற்று டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோழர், பாண்டியர், பல்லவர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய விவரம் பின்வருமாறு, “நம் நாட்டில் பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆனால், முகலாயர்கள் … Read more

சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அண்ணன், தங்கை: இன்சுலின் வாங்கக்கூட காசில்லை என பெற்றோர் வேதனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையத்தில் வசித்து வருபவர் ரமேஷ். பனியன் நிறுவன தொழிலாளி. மனைவி வித்யஜோதி. இவர்களது மகன் மோகித் (7), மகள் விதர்சனா (4). சிறுவயதிலேயே அண்ணன், தங்கை இருவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பெற்றோர் கூறியதாவது: இரவு நேரங்களில் மோகித் அதிக அளவில் சிறுநீர் கழித்ததால், சந்தேகமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தோம். அதில் ரகம் 1 எனப்படும் சர்க்கரை … Read more

கைவிட்ட மருமகன்… பேரக்குழந்தைகளை காக்க வீடின்றி போராடும் மாற்றுத்திறனாளி தாத்தா – பாட்டி

கடலூரில் மகளை இழந்து, மதுவுக்கு அடிமையான மருமகனால் வேதனையுற்று வயதான தம்பதியரொருவர், தங்கள் பேரக் குழந்தைகளை காப்பாற்ற தவித்து வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டுசாலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் வசிப்பவர் மாற்றுத்திறனாளியான செல்வராஜ். இவரது மனைவி சரோஜா. வயதானவர்களான இவர்கள் இருவரும் தங்களின் மகள் வழி பேரன்கள் இருவரை வைத்துக்கொண்டு தவித்து வருகிறார்கள். செல்வராஜின் மகள், கணவனின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மனைவி மறைவுக்குப் … Read more