முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. ஐவர் கைது..!

முன்விரோதம் காரணமாக கொலை செய்த ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (25). இரண்டு நாட்களுக்கு முன் இவர் வீட்டு மாடியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொலை செய்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கொலையில் ஈடுபட்ட மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (23), சுரேந்தர் (20), சதஷ் (20), சுதாகர் (20), ரைசுல் இஸ்லாமுல் அன்சாரி (21), ஆகியோரை காவல்துறையினர் கைது … Read more

பேருந்தில் பெண்கள் மீது கைவைத்தால் இனி இந்த குத்து தான்.. காமுகனை பதம் பார்த்த வீரப்பெண்.!

அரசு பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்து உறங்குவது போல் நடித்து பாலியல் சேட்டையில் ஈடுபட்ட நபரை ஊக்கால் குத்தி பிடித்த பெண் வழக்கறிஞர், வீடியோ ஆதாரத்துடன் போலீசில் ஒப்படைத்தார். வேலூர் மாவட்டம் காவிரிபாக்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது தாயாருடன் சென்னையிலிருந்து வேலூர் செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட தொடங்கியதிலிருந்து பெண் வழக்கறிஞர் அமர்ந்திருந்த பின் … Read more

பாதுகாப்புப் படையினருக்கு பலம் கூட்டும் முக்கிய போர் தளவாடம்: டிஆர்டிஓ உருவாக்கியுள்ள முனை திரும்பி சுடும் ஆயுதம்

சிறுவயதில் ஓடிப் பிடித்து விளையாடும்போது, அறைக்குள் ஒளிந்திருக்கும் நண்பனை கதவு, ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து கண்டுபிடித்திருப்போம். ஒளிந்திருப்பது ஆயுதம் தாங்கிய எதிரியாக இருந் தால் என்ன செய்வது? அதிலும் அறைக்குள் பதுங்கியபடி தாக்குதல் தொடுக்கும் எதிரியை மேற்கொள்வது எப்படி? எதிரியின் பார்வையில் படாமல், குறிபார்த்து பதிலடி தருவது சாத்தியமா? குறிப்பாக இரவில் இப்படிப்பட்ட சூழலை எப்படி சமாளிப்பது? நேரடியாக அறைக்குள் நுழைவது மிக ஆபத்தானது. இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையை பாதுகாப்புப் படையினரும், தீவிரவாத எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள … Read more

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் … Read more

தமிழச்சி தங்கபாண்டியன் செல்போன் அபேஸ்: டெல்லி தி.மு.க விழாவில் கைவரிசை

 MP Thamizhachi Thangapandian’s Mobile phone theft in Delhi DMK office function: டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதனை திமுக தலைவரும் முதல் அமைச்சருமான மு.க ஸ்டாலின், இன்று திறந்து வைத்தார்.  தொடர்ந்து, திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் … Read more

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை கைது.!

தமிழக மீனவர்கள் இந்திய இலங்கை கடல் எல்லைப் பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கைது செய்த சில நாட்களில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது விசைப்படகுகள் மற்றும் விடுவிக்கப்படுவதில்லை இதனால் தமிழக மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை … Read more

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவு எடுக்கலாம் – பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவுகளை எடுக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளிகளே மாணவர்களுக்கான பாடத் திட்டம், வினாத்தாள் வடிவமைப்பு உள்ளிட்டவைகளை முடிவு செய்து தேர்வு நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்: அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

அதிமுக கொறடாவும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘கவுன்சிலர், தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவினர் வென்றதை திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காவல்துறையை பயன்படுத்தி, அதிமுகவினர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து, துன்புறுத்தும் நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இச்சம்பவத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட ஒவ்வொரு காவல்துறையினர் மீதும் தனிப்பட்ட முறையில் நீதி கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என … Read more

மதுரை: ஓடும் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்

மதுரையில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி ஈஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடுமையான பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு ஆம்புலன்ஸில் விரைந்து வந்த மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பு, ஈஸ்வரியை பரிசோதனை செய்தார். இதைத் தொடர்ந்து ஈஸ்வரியை … Read more