மேட்டுப்பாளையத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து ஆட்சியர் சமீரன் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரல்.!

மேட்டுப்பாளையம் அருகே மலைவாழ் மக்களின் குறைகளை கேட்கச் சென்ற கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன், அவர்களுடன் சேர்ந்து நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது. பில்லூர் வனப்பகுதியில் உள்ள மலைக்கிராம மக்களின் தேவைகளை, அவர்களது இடத்திற்கே சென்று கேட்டறியும் வகையில் கொடியூர் மலைக்கிராமத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. அதில், மலைவாழ் மக்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். இதனையடுத்து பழங்குடியின மக்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், பாரம்பரிய இசைக் … Read more

விருதுநகர் பாலியல் வழக்கு | குற்றம் நடந்த குடோனில் கைதானவர்களிடம் விசாரணை 

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரில் இருவரை குற்றம் நடந்த குடோனுக்கு அழைத்துவந்து சிபிசிஐடி போலீஸார் இன்று (மார்ச் 31) காலை விசாரணை மேற்கொண்டனர். விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், அவரது நண்பர்களான திமுக நிர்வாகி ஜூனத்அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகியோரும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹரிஹரன் உள்ளிட்ட … Read more

கேள்வி எழுப்பிய மீடியா; கேமராவை தள்ளிவிட்ட அமைச்சர்: ராஜ கண்ணப்பனை துரத்தும் சர்ச்சை

போக்குவரத்துத் துறையில் சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜனுக்கு எதிராக லஞ்ச புகாரில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டபோது செய்தியாளரின் கேமராவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தட்டிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக போக்குவரத்து துறையில் சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடந்தது. அந்த சோதனையில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம், வரவு செலவு கணக்கு டைரி பறிமுதல் செய்யப்பட்டது. … Read more

கூடுகிறது பா.ம.க. அவசர செயற்குழுக் கூட்டம்.! நாள் குறித்த ஜி.கே.மணி.!

சென்னையில் ஏப்ரல் 2 சனிக்கிழமை பா.ம.க. அவசர செயற்குழுக் கூட்டம் கூட உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் (02.04.2022) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சிவானந்தா சாலையில் பொதிகைத் தொலைக்காட்சி எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி … Read more

கோவையில் திறந்த வெளி விவசாய கிணற்றுக்குள் விழுந்த மான்குட்டியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்.!

கோவை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மான்குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சூலூர் அடுத்த பீடம்பள்ளி கிராமத்தில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி விவசாய கிணற்றுக்குள் நேற்று 2 வயதே உடைய காட்டு மான்குட்டி விழுந்திருந்ததை கண்ட அப்பகுதியினர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி மானை வலை வைத்து பத்திரமாக மீட்டு, அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மானுக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் ஏற்படாததையும், மான் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி … Read more

'சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பதா?' – மத்திய அரசுக்கு தினகரன் கண்டனம்

சென்னை: பெட்ரோல் விலை உயரும் நிலையில், சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பது நியாயமா? என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், சுங்கக் கட்டணங்களையும் நாளைமுதல் (ஏப்.1) உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 24 இடங்களில் சுங்கக் கட்டணம் அதிகரிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் … Read more

அமலாக்கப் பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு பின்னடைவு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

High Court dismisses special court order on Senthil Balaji case: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான குறியீடு செய்யப்படாத ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011 -15-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்துறையில், ஓட்டுநர் … Read more

தேனி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த பாஜக விவசாய அணியினர்.!

தேனி மாவட்ட ஆட்சியருடன் பாஜக விவசாய அணி நிர்வாகிகள் சந்தித்து, தேனி மாவட்டத்திற்கான வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தினர். தேனி மாவட்ட ஆட்சியர் திரு.முரளிதரன் IAS அவர்களைச் சந்தித்து, கிடப்பிலுள்ள பல்வேறு திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டுமென பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டார். முல்லைப்பெரியாறு அணை வாய்க்காலிலிருந்து ரூ.256  கோடி திட்டமதிப்பில், குள்ளப்பகவுண்டன்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை பொதுப்பணித்துறையால் மதிப்பீடு செய்யப்பட்ட திட்டத்தை நிறைவேற்றி, 21 குளம்,குட்டைகளை நீர்நிரப்ப மாவட்ட ஆட்சியர் … Read more