காதலர் தினத்தில்.. தாலிக்கயிறுடன் சுற்றியவர்கள் போலீசாரால் கைது.! திருச்சியில் குறிப்பிட்ட அமைப்பினர் அட்டகாசம்.!

திருச்சி மாவட்டத்தில் மிக முக்கிய அடையாள சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இதன் அடிவாரத்தில் இருக்கும் மாணிக்க விநாயகர் சன்னிதியும் தாயுமானவர் கோவிலும் மலைக்கோட்டையின் உச்சிப் பகுதியில் பிள்ளையார் கோவிலும் இருக்கிறது.  இத்தகைய நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மலைக்கோட்டைக்கு காதலர்கள் சாமி தரிசனம் செய்ய ஜோடி ஜோடியாக வந்துள்ளனர். அப்பொழுது வீர விவேகானந்தர் பேரவை மற்றும் அனுமன் சேனா அமைப்புகளைச் சேர்ந்த 3 பேர் அப்பகுதியில் இருந்து கொண்டு காதலர்களை தொந்தரவு செய்துள்ளனர். அவர்கள் கோவிலுக்குள் … Read more

மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியர்கள் பரிசீலிக்க விதிகளில் திருத்தம் <!– மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியர்கள் பர… –>

டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை ஆட்சியர்கள் பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுக்கடைக்கு எதிரான கிராம சபையின் தீர்மானம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இரு வேறு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, மூன்று நீதிபதிகள் அமர்வில் ஏற்கனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கிராம சபை தீர்மானம் பற்றிய விதிகளில் திருத்தம் செய்வது பற்றி நிலைப்பாட்டை தெரிவிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுவாரியான பிரதான மற்றும் வாக்காளர் துணைப்பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-02-2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வார்டுவாரியான … Read more

தமிழகத்தில் 2,000-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு – மாவட்ட வாரியாக முழு விபரம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட மொத்தம் 1,632 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், 1,634- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 37 … Read more

ஸ்டாலின் வீட்டு முன்பு திடீர் போராட்டம்: பா.ஜ.க மாணவர் பிரிவினர் கைது

ABVP members arrested for protest in front of CM house for thanjai girl suicide issue: தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதிக்கேட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லம் முன்பு போராடிய பாஜகவின் மாணவர் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும், கிறிஸ்தவ அமைப்புக்குச் சொந்தமான பள்ளியில் படித்து வந்தார். இந்தநிலையில், சில நாட்களுக்கு … Read more

#BREAKING || தமிழகத்தில் நாளை நடக்க இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு – பள்ளிக்கல்வி ஆணையர்.!

தமிழ்நாட்டில் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அதே சமயத்தில், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒரே பள்ளியில் முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்குத் தான் இட மாறுதலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முன்பாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டால்,  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு  விரும்பிய இடமாறுதல் கிடைக்காது … Read more

பாஜகவிற்கு டப்பிங் பேசும் பழனிசாமி யாரை மிரட்டுகிறார்? – 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: “‘2024 முதல் நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப் போகிறது’ என்று ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. பாஜகவிற்கு டப்பிங் பேசும் பழனிசாமி யாரை மிரட்டுகிறார்?” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆவேமாகப் பேசினார். மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாநகரத்துக்கு செய்யப்பட்ட சாதனைகளை விளக்கிய அவர், … Read more

தாமிரபரணி ஆற்றில் குப்பைகளை சுத்தம் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில், நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குப்பை கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார் பாஜக வேட்பாளரொருவர். திருநெல்வேலி மாநகராட்சி 30வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மேகநாதன் வாக்குகளை கேட்டு இன்று வழக்கப்போல பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் துண்டுப்பிரசுரம் கொடுத்து `மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வேன்’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்துக்கு இடையே தாமிரபரணி ஆற்றங்கரையில் … Read more

பாலியல் புகாரில் மீண்டும் சிக்கிய அதிமுக வி.ஐ.பி: கை நழுவும் நாகர்கோவில் மாநகராட்சி

நாகர்கோவில் மாநகராட்சியில் அதிமுக- பாஜக கூட்டணியாக போட்டியிடுவதன் மூலம் எளிதாக வெற்றிப்பெறலாம் என தொண்டர்கள் எண்ணிய நிலையில், இரு கட்சிகளும் தற்போது தனித்து போட்டியிடுகின்றன. அதன் காரணமாக, திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் அதிமுகவின் மேயர் வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீஜா அறிவிக்கப்பட்டுள்ளார். நாஞ்சில் முருகேசன் தனது மகளுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இவர் அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2016 … Read more

வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை நியமிக்க விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்! மாநகராட்சி அறிவிப்பு.!

சென்னை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்களில் வேட்பாளர்களுக்கான முகவர்களை நியமணம் செய்வதற்கான படிவங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022யை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்களுக்கான முகவர்களை நியமிக்க படிவங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இன்று (14.02.2022) முதல் … Read more