தேமுதிகவின் முக்கிய நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக் கொலை.. அதிர்ச்சியில் தேமுதிகவினர்.!!
தேமுதிகவின் முக்கிய நிர்வாகி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரும், கழக கேப்டன் மன்ற துணை செயலாளருமான பொன்னுசாமி, சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துகுரியது. இந்த சம்பவத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீரழிந்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பட்டபகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் யாராக … Read more