பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் ஸ்வாட் பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் கபால் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை … Read more

பெருவில் தீ விபத்து 27 பேர் பலி| Fire in Peru kills 27

லிமா, பெருவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 27 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில், ரேக்யூபா என்ற இடத்தில் ஒரு தங்கச் சுரங்கம் இருக்கிறது. இங்கு, 100 அடிக்கும் கீழே, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியாற்றி வந்தனர். அப்போது திடீரென தீப்பற்றி, சுரங்கம் முழுதும் பரவியது. இதில், கடும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், உடல் கருகியும் 27 பேர் சம்பவ இடத்திலேயே … Read more

அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் தெலுங்கானா நீதிபதியின் மகள் உயிரிழப்பு

ஐதராபாத், டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள அலேன் நகரத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகளுடன் வணிக வளாகம் அமைந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று, பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். இந்தநிலையில் வணிக வளாகத்துக்கு மாலை 3.30 மணியளவில் காரில் வந்த மர்ம நபர், கடைகளின் வெளியே நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாறியாக சுடத் தொடங்கினார். துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும், அதே வளாகத்துக்கு மற்றொரு பாதுகாப்பு … Read more

அமெரிக்க துப்பாக்கி சூட்டில் தெலுங்கானா நீதிபதி மகள் பலி| Telangana judges daughter killed in US firing

டெக்சாஸ், அமெரிக்காவில், வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் பலியாகி உள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லால் நகரில், வணிக வளாகம் ஒன்றில், மொரிசியோ கார்சியா என்ற நபர், சமீபத்தில் பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், 5 வயது குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பதில் தாக்குதல் நடத்தியதில், மொரிசியோ … Read more

காங்கோவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 400-ஐ கடந்தது

கலிஹி, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது. மேலும், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. அதேவேளை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்பு … Read more

பாலஸ்தீன் பரிதாபம்: ரத்தம்.. உயிரிழப்பு.. ‘இப்ப உணவுக்கும் கட்’.. கைவிரித்த உலக நிறுவனம்.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் பாலஸ்தீன் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க முடியாது என உலக உணவு நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து பல துறைகளை மேம்படுத்த ஆய்வு ; வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலிஸ்தீனத்தின் கொஞ்ச நஞ்ச நிலப்பரப்பையும் இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாதவகையில் பல்வேறு வகைகளில் நவீனமாக மேம்பட்ட இஸ்ரேல், தனது அனைத்து சக்திகளையும் பாலிஸ்தீன மக்கள் மீது … Read more

பொது இடங்களில் மரண தண்டனை, கசையடி… தாலிபானை கண்டித்துள்ள ஐநா!

ஆப்கானிஸ்தானில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பிடித்த சிறிது நேரத்திலேயே தலிபான்கள் கசையடி கொடுத்து கொல்லுதல், கல் எறிந்து கொல்லுதல், பொது இடங்களில் தூக்கில் இடுதல் போன்ற கொடூரமான தண்டனையை வழங்கத் தொடங்கினர்.

சீனாவில் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 4,97,000 பேர் பாதிப்பு..!

சீனாவின்கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்ஸி பிராந்தியத்தில் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 4 லட்சத்து 97 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிராந்தியத்தின் 43 கவுன்டிகளில் 67 ஆயிரத்து 600 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் 520 மில்லியன் யுவான் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளபெருக்கின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 14 ஆயிரம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிராந்திய … Read more

இறந்தபின்பு மீண்டும் உயிர்பெற நம்பிக்கை.. தனது உடலை உறைநிலையில் வைப்பதற்காக பதிவு செய்த பீட்டர் தீல்

இறந்தபின்பு மீண்டும் உயிர்பெற வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையில், பிரபல பே பால் நிறுவனத்தின் தலைவரும் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவருமான பீட்டர் தீல் தனது உடலை உறைநிலையில் வைப்பதற்காக பதிவு செய்து வைத்துள்ளார். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வகையிலான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் உருவாகலாம் என்ற நம்பிக்கையில், அமெரிக்காவிலுள்ள அல்கார் என்ற அமைப்பு இறந்து போன மனித உடல்களையும் விலங்குகளின் உடல்களையும் கிரையோனிக்ஸ் என்ற முறையில் உறைநிலையில் பதப்படுத்தி பாதுகாத்து வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த … Read more