King Charles III Video : மன்னர் 3ம் சார்லஸ் முடி சூட்டு விழாவில் பேய்… பகீர் கிளப்பும் வீடியோ!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடி சூட்டு விழாவில் மர்ம உருவம் ஒன்று நடந்து செல்லும் வீடியோ வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது. மன்னர் முடிசூட்டு விழாகடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செம்படர் மாதம் காலமானார். இதையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். ராணி இரண்டாம் … Read more

60 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வழித்தட திட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் செல்ல சீனாவும், பாகிஸ்தானும் ஒப்புதல்!

60 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வழித்தட திட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கும் எடுத்துச் செல்ல சீனாவும், பாகிஸ்தானும் ஒப்புதல் அளித்துள்ளன. சீன வெளியுறவு அமைச்சர் கின் காங், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இடையே இஸ்லாமாபாத்தில் நடந்த சந்திப்பின்போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. நிதி நெருக்கடியில் தவிக்கும் தலிபான் அரசாங்கம் இந்த திட்டத்தில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும், இதன் மூலம் உள்கட்டமைப்பு முதலீட்டைப் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டின் வளங்களின் மீது சீனா … Read more

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நமட்கி தேசிய பூங்கா முழுவதும் பனி படர்ந்து, வெண்போர்வை போர்த்தியது போல ரம்மியாக காட்சியளிக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பனிப்பொழிவுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில் வரும் 10ம் தேதி வரை உறைபனி நீட்டிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. Source link

உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு உதவி அடுத்த மாதம் முதல் நிறுத்தம்!

உலக உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் 2 லட்சம் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு உதவி அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாலஸ்தீனத்தில் உணவு உதவியை பெற்று வருவோரின் எண்ணிக்கையில் 60 சதவீதமாகும்.இதுகுறித்து பேசிய உலக உணவுத் திட்டத்தின் பாலஸ்தீன பகுதிக்கான அதிகாரி சமீர் அப்துல் ஜப்பார், கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாக வலி மிகுந்த முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்தாகத் தெரிவித்தார். வறுமை அதிகமாக இருக்கும் மேற்குக் கரை மற்றும் காஸா … Read more

அதிசக்திவாய்ந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வானிலேயே அழித்த உக்ரைன்

ரஷ்ய ராணுவம் ஏவிய அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை முதல் முறையாக வானிலேயே தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டின் விமானப்படை தளபதி மைகோலா ஒலேஸ்சுக் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கின்சல் வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்காவின் பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பு மூலம் வானிலேயே இடைமறித்து தகர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் உக்ரைன் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக அவர் கூறியுள்ளார். 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக … Read more

மனிதநேயம் காக்கும் சங்கம்! இன்று (மே.,8 ம் தேதி செஞ்சிலுவை சங்க தினம்)| Society to protect humanity! Today (May 8th is Red Cross Day)

ஒரு மனிதனிடம் நாடு, இனம், மொழி, மதம், ஜாதி, நிறம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உயிர் என்பது சமம். அப்படிப்பட்ட உயிர்களை காக்க உருவாக்கப்பட்ட இயக்கமே செஞ்சிலுவை சங்கம். ஒரு நாடு இன்னொரு நாடுடன் போர் செய்யும் போது அதில் ஏற்படும் இழப்புகளை மீட்க வேண்டும். முதலில் உயிர்களை மீட்டால் தான் அவர்களுக்கு தேவையான உடமைகளை தர முடியும். அந்த சேவை மனப்பான்மையை அடிப்டையாக கொண்ட அமைப்பு இது. தோன்றியது எப்படி: 1828 மே 8 … Read more

காலிஸ்தான் தலைவர் பரம்ஜித் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

லாகூர்: காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வார் என்கிற மாலிக் சர்தார் சிங், பாகிஸ்தானின் லாகூரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். காலிஸ்தான் கமாண்டோ படை கடந்த 1986-ல் உருவாக்கப்பட்டது. சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்கிற சுதந்திர நாட்டை ஆயுதப் போராட்டம் மூலம் உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதன் தலைவர் லாப் சிங், இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பிறகு 1990-களில் அதன் தலைமை பொறுப்பை பரம்ஜித் பஞ்ச்வார் ஏற்றார். பிறகு பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றார். இந்தியாவால் … Read more

அமெரிக்காவில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதிய கார்… விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

அமெரிக்காவில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய கோர விபத்தில், 7 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் காயமடைந்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில்லி நகரில் சாலையோரமாக உள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்கள் பலர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, சாலையில் அதிவேகத்தில் வந்த எஸ்.யு.வி ரக கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தற்கெட்டு ஓடி பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. கவனக்குறை வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரை கைதுசெய்து … Read more

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கு போட்டியிடும் விவேக் ராமசாமியை பாராட்டிய ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். குடியரசுக் கட்சியைச் சார்ந்த ட்ரம்ப் 2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். இந்திய வம்சாவளியினர் இந்த வேட்பாளர் தேர்தலுக்கு அக்கட்சியைச் சேர்ந்த முக்கியத்தலைவர்கள் … Read more

தென் அமெரிக்க நாடான பெருவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

தென் அமெரிக்க நாடான பெருவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். அரேக்யூபா நகரில் இயங்கிவந்த லா எஸ்பெரான்சா சுரங்கத்தில் சனிக்கிழமை காலையன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 300 அடி ஆழத்தில் பணியாற்றிய போது மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதால், தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தால், சுரங்கம் முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு, 2 பேரை தீயிலிருந்து … Read more