‘6 பேர்ல ஒருத்தருக்கு குழந்தை பிறக்காது..’ – WHO ஆய்வறிக்கை தந்த அதிர்ச்சி.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் உலக சுகாதார அமைப்பு உலகளவில் ஆறு பெரியவர்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது மலட்டுத்தன்மையை அனுபவித்திருக்கிறார்கள், என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த திங்களன்று ஒரு அறிக்கையில் கூறியது, இந்த நோய் பற்றிய நிலையான தரவுகளை தீவிரமாக சேகரிக்க நாடுகளை வலியுறுத்து அமைப்பு வலியுறுத்தியது. 1990 முதல் 2021 வரை நடத்தப்பட்ட ஆய்வுகளை பகுப்பாய்வு செய்யப்பட்டு, உலகெங்கிலும் உள்ள பெரியவர்களில் சுமார் 17.5% பேர் … Read more

உணவு, தண்ணீரின்றி மால்டா கடற்பகுதியில் தவித்த புலம்பெயர்ந்தவர்கள் பத்திரமாக மீட்பு..!

மால்டா சர்வதேச கடற்பகுதியில், நடுக்கடலில் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 11 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். சிரியா, பாகிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர், ஏப்ரல் 1ம் தேதி கிழக்கு லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி படகில் புறப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக உணவு, தண்ணீரின்றி  நடுக்கடலில் தவித்துள்ளனர். கடற்பகுதி சீற்றத்துடன் காணப்பட்டதால் தனியார் தொண்டு நிறுவனத்தினர் Geo Barents கப்பல் மூலம் 8 பெண்கள், 30 குழந்தைகள் உட்பட 440 … Read more

3ம் உலகப்போர் எப்போ.? – கைதுக்கு பின் தேதி குறித்த டொனால்ட் டிரம்ப்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ஜோ பிடனின் நிர்வாகம் மூன்றாம் உலகப் போருக்கு அழைத்து செல்வதாக டொனால் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். டிரம்ப் சர்ச்சை ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நீதிமன்றத்தின் பிடிகள் இறுகியுள்ளன. அவர் கைது செய்யப்பட்டாலும் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் கிரிமினல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்ட முதல் … Read more

“ரஷ்ய அதிபர் புதினும் இருண்ட பாதாளத்தில் தனது நாட்களைக் கழிப்பார்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

மாஸ்கோ: “ரஷ்ய அதிபர் புதினும் வரும் காலங்களில் இருண்ட பாதாளத்தில் தனது நாட்களைக் கழிப்பார் என நம்புகிறேன்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார் ரஷ்ய போரால் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பார்வையிட்டு வரும் ஜெலன்ஸ்கி, யாகித்னே என்ற கிராமத்தை பார்வையிட்டார். அப்போது அவர் பேசும்போது, “இக்கிராமத்தில் ரஷ்யா படையெடுக்கும்போது இங்கிருந்த கிராம மக்கள் பள்ளிக்கூடம் ஒன்றில் அடித்தளத்தில் பதுங்கினர். 200 சதுர மீட்டர் கொண்ட அந்த இடத்தில் சுமார் 367 பேர் ஒரு மாதத்திற்கு தங்கி … Read more

ஐ.நா அமைப்பில் பணிபுரிய ஆப்கன் பெண்களுக்கு தலிபான்கள் தடை

காபூல்: ஆப்கானிஸ்தான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் வெளியிட்ட தகவலில், “ஐ. நா. அமைப்பில் ஆப்கன் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் எழுத்துபூர்வமாக அறிவிக்காமல், வாய்மொழியாக அறிவித்துள்ளனர். தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத் துறை சார்ந்த இங்குள்ள உயிர் … Read more

அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்கா

வாஷிங்டன்: அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி, அம்மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை சீனா எப்போதும் ஜாங்னான் என்று குறிப்பிட்டு வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தை உரிமை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக அங்குள்ள 11 இடங்களுக்கு சீனா கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பெயர்களை சூட்டியது. சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் வெளியிட்ட இந்தப் பட்டியலில் 2 நிலப் பகுதிகள், … Read more

ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்த பின்லாந்து..!

ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்த பின்லாந்து, ரஷ்ய எல்லையில் 200 கிலோமீட்டர் தொலைவிற்கு வேலி அமைக்க உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் தொலைவிற்கு, மீக நீண்ட நில எல்லையை பின்லாந்து பகிர்ந்துவருகிறது. ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்களை கண்காணிப்பதற்காக மின்சார சென்சார்கள் பொருத்தப்பட்டு, 10 அடி உயரத்திற்கு அமைக்கப்படும் இந்த வேலியை 4 ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க பின்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. Source link

தாயின் உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த நபர்!

தாய் இறந்த உடல்: ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலை நீண்ட நேரம் வெளியில் வைக்க முடியாது. அதிகபட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள், அதன் பிறகு இறந்த உடலை வைக்க வேண்டும் என்றால், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்க வேண்டும். அதையும் தாண்டு மாதக்கணக்கில் அல்லது வருடக் கணக்கில் வைக்க வேண்டூம் என்றால், அது பதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில், நினைத்து பார்க்கவே முடியாத ஒரு அதிர்ச்சியான செயலை ஒரு நபர்  செய்துள்ளார். இந்த … Read more

அல் அக்ஸா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேல் போலீசார் தாக்குதல்..!

ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமலான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் போலீசார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பலர் காயமடைந்ததாக பாலஸ்தீனத்திலுள்ள செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ள நிலையில், மசூதிக்குள் இருந்தவர்களை இஸ்ரேல் போலீசார் தாக்கிய வீடியோக்களும் வெளியாகியுள்ளன. மசூதிக்குள் நடந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், முகமூடி அணிந்த கிளர்ச்சியாளர்கள் பட்டாசுகள், கற்களுடன் மசூதிக்குள் புகுந்ததால், தாங்களும் உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், தங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் … Read more