இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வரும் நோரோ வைரஸ்… தொற்று பரவலால் மருத்துவமனைகள் விரைவில் நிரம்பும் அபாயம்
இங்கிலாந்தில் நோரோ வைரஸ் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் விரைவில் நிரம்பி விடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 371 பேர் இந்த வைரசின் தாக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர்கள், இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தை விட கிட்டத்தட்ட 8 விழுக்காடு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளனர். நோரோ வைரஸ் தாக்குதல் காரணமாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் ஆபத்தில் உள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். Source link