ஆப்கனில் பெண் கல்விக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்: ஐநா

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐநா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசும்போது, “கல்வி பயில்வதைத் தடுக்கும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. குறிப்பாக ஆப்கனிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி பயில்வதற்கு விதிக்கப்பட்டுள்ள மூர்க்கத்தனமான தடையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி தினத்தின் கருப்பொருள், ‘கல்விக்கு … Read more

கொலம்பியாவில் தொடரும் கொக்கைன் ஹைட்ரோகுளோரைடு கடத்தல்… கப்பலில் இருந்து 4 டன் கொக்கைன் பறிமுதல்

கொலம்பியாவில் கப்பலில் கடத்தி செல்லப்பட்ட 4 டன் கொக்கைன் ஹைட்ரோகுளோரைடை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜனவரி 1-ம் தேதி முதல் தற்போது வரை கடந்த 25 நாட்களில் கடத்தி செல்லப்பட்ட 10 டன் கொக்கைன் ஹைட்ரோகுளோரைடை கொலம்பிய கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  Source link

ஜப்பான்-தென்கொரியா இடையே கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்… கடலில் தத்தளித்த 13 பேர் கடும் குளிருக்கு மத்தியில் மீட்பு

தென்மேற்கு ஜப்பானில் சரக்குக்கப்பல் மூழ்கிய விபத்தில் கடலில் தத்தளித்த 13 பேரை, கடும் குளிருக்கு மத்தியில் தென்கொரியா மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையினர் மீட்டனர். ஜப்பானின் நாகசாகி மற்றும் தென்கொரியாவின் ஜெஜு தீவுக்கு இடையே நேற்று இரவு சரக்குக் கப்பல் மூழ்கியது. மொத்தம் இருந்த 22 ஊழியர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 9 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   Source link

உசேன் போல்ட் முதலீடு; ரூ.98 கோடி அவுட் | Usain Bolt investment; 98 crores out

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: உலக தடகள வீரர் உசேன் போல்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தில் ரூ.98 கோடி மாயமானது. சமீபத்தில் வெளியான ‘துணிவு’ படத்தில் வாடிக்கையாளர் முதலீடு பணத்தை வங்கி நிர்வாகம் வேறொன்றில் முதலீடு செய்து மோசடி செய்வது போல காட்சி இருக்கும். சினிமாவுக்காக மட்டுமே இது அமைக்கப்பட்டிருந்தாலும் நிஜத்திலும் இதேபோன்ற மோசடி அரங்கேறியுள்ளது. சாதாரண மனிதருக்கல்ல. உலக தடகள ஜாம்பவான் ஜமைக்காவின் உசேன் போல்ட்டிடம் இம்மோசடி நடந்துள்ளது. உசேன் … Read more

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற ஹைதி அகதிகள் 396 பேரை திருப்பி ஹைதிக்கு அனுப்பி வைக்க அமெரிக்கா திட்டம்..!

கரீபியன் தீவு நாடான ஹைதியில் இருந்து அமெரிக்கா நோக்கி 396 அகதிகளை ஏற்றிச் சென்ற படகை அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். ஹைதி நாட்டில் வறுமையும் – வன்முறையும் அதிகரித்ததால் வாழ்வாதாரத்தை தேடி ஏராளமானோர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் தஞ்சமடைய ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு, ஹைதியில் இருந்து பஹாமாஸ் வழியாக அகதிகளுடன் சென்ற படகினை, கண்ட கடலோர காவல்படை ரோந்து போலீசார் அதிவேக படகில் சென்று மடக்கி பிடித்தனர். Source link

''2019ல் பாகிஸ்தானும் இந்தியாவும் அணுஆயுத போருக்கு தயாராகின'': அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர்

வாஷிங்டன்: பாகிஸ்தானும் இந்தியாவும் கடந்த 2019ம் ஆண்டு அணுஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக 2018 முதல் 2021 வரை இருந்தவர் மைக் பாம்பியோ. தனது அனுபவங்கள் தொடர்பாக இவர் எழுதி சமீபத்தில் வெளியான Never Give an Inch: Fighting for the America I Love எனும் புத்தகத்தில், கடந்த 2019ம் … Read more

வாஷிங்டன் : பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். யக்கிமா நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நுழைந்த ஆயுதமேந்திய மர்மநபர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அலறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர். தகவலறிந்த போலீசார், துப்பாக்கிக்சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அப்பகுதியினை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர்.  Source link