FIFA World Cup Final 2022: கால்பந்து உலகக் கோப்பை தோல்வியால் பிரான்சில் வெடித்த கலவரம்

France Vs Argentina: கால்பந்தாட்டத்தின் மன்னனாக அர்ஜென்டினா உருவெடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்த பிறகு, பிரான்சில் கலவரம் வெடித்தது.   ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண பிரான்சின் பல்வேறு நகரங்களில் உள்ள உணவகங்கள் … Read more

சைபீரியா பகுதியிலுள்ள எண்ணெய் – எரிவாயு வயலில் தீ விபத்து

ரஷ்யாவின் சைபீரியா பகுதியிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் சதுர மீட்டர் சுற்றளவுக்கு தீ பிடித்து எரிந்து வருகிறது. தீ விபத்தில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

இந்திய வம்சாவளி பெண் உடல் கருகி பரிதாப பலி| Dinamalar

நியூயார்க் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண், வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவில், நியூயார்க் லாங் ஐலேண்ட் பகுதியில், டிக்ஸ் ஹில்ஸ் என்ற இடத்தில் வசித்து வந்தவர், இந்திய வம்சாவளி பெண்ணான தன்யா பதிஜா, ௩௨. எம்.பி.ஏ., பட்டப் படிப்பு முடித்து தொழில்முனைவோராக இருந்த இவர், சமீபத்தில் அப்பகுதியில் கேக் கடை திறந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் தன் வீட்டில் இரவு துாங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியது. சம்பவ இடத்துக்கு … Read more

நான் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா?- எலான் மஸ்க் கருத்துக்கணிப்பு

நான் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா? என்று புதிதாக ஒரு கருத்துக் கணிப்பை முன்னெடுத்துள்ளார் அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க். ட்விட்டரில் கருத்து சுதந்திரம் தேவையா என்று எலான் மஸ்க் நடத்திய கருத்துக் கணிப்பு தான் அவரை இதுவரை இட்டுவந்துள்ளது. இந்நிலையில் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா? என்று புதிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்துள்ளார். இன்னும் சில மணி நேரங்கள் இந்த கருத்துக் கணிப்பு உயிர்ப்புடன் இருக்கும். இந்த செய்தியை பதிவு செய்த … Read more

கிறிஸ்துமஸ் விழாவில் செக் குடியரசில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் குழந்தைகள்

செக் குடியரசில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் அகதிகள் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நடைபெறும் கரோல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பிரேக் நகரில் பனிபடர்ந்த நகரங்களில் கிறிஸ்துமஸ் விழா களை கட்டியுள்ளது. அங்குள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் போரில் உடமைகளையும், பெற்றோரையும் இழந்து செக் குடியரசில் தஞ்சம் அடைந்துள்ள குழந்தைகள், கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட அங்குள்ள தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.     Source link

மாஸ்கோவில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள விமான மற்றும் தரைவழி போக்குவரத்து

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிலவும் கடும் பனி பொழிவால் விமான போக்குவரத்தும், தரைவழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் இருந்து புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 1989-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது 40 சென்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. வீடுகளின் கூரைகளில் படர்ந்துள்ள பனி துகள்களை அகற்றும் பணி நடைபெறுகிறது. பனிப்பொழிவு அதிகரித்து இருப்பதால் சாலைகளில் தேங்கியுள்ள பனித்துகள்களை அகற்றும் பணியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றது அர்ஜெண்டினா அணி..!

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜெண்டினா சாம்பியன் உலகக்கோப்பை கால்பந்து: 3வது முறையாக அர்ஜெண்டினா சாம்பியன் 2022 உலகக்கோப்பை கால்பந்துப்போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் 36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றது அர்ஜெண்டினா அணி 3ஆவது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை வென்றது அர்ஜெண்டினா இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜெண்டினா 1978, 1986ம் ஆண்டுகளில் ஏற்கெனவே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜெண்டினா இறுதி போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தியது அர்ஜெண்டினா … Read more

Mrs World: மிஸஸ் வோர்ல்ட் பட்டம் வென்றார் இந்தியா! மகுடம் சூடிய அழகி சர்கம் கெளஷல்

 லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற அழகிப்போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் மகுடம் வென்றுள்ளார். மிஸஸ் வோர்ல்ட் என்ற பட்டத்தை  21 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற பெண் என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார் திருமதி சர்கம் கெளஷல். திருமணமான பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் அழகிப்போட்டி லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது.          View this post on Instagram               … Read more

கரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு தகவல்களை மூடி மறைக்கிறது சீனா

பெய்ஜிங்: சீனாவில் உள்ள மயானங்களில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்துள்ள நிலையில், இது பற்றிய தகவல்களை சீன அரசு கடந்த 2 வாரங்களாக வெளியிடவில்லை. மக்கள் போராட்டம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பின்பற்றி வந்த கடுமையான கரோனாகட்டுப்பாடு விதிமுறைகளை சீனா சமீபத்தில் தளர்த்தியது. இதன் காரணமாக சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. கரோனாஉயிரிழப்புகளும் அங்கு அதிகரித்துள்ளன. கடந்த புதன்கிழமை மட்டும் கரோனாவால் உயிரிழந்த 30 பேரின் சடலங்கள் வந்ததாக பெய்ஜிங் மயான ஊழியர் … Read more

சாம்பியன் பட்டம் பெற்ற வெற்றி களிப்பில் அர்ஜென்டினா ரசிகர்கள் உற்சாகம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றதை அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கத்தாரில் இறுதி போட்டி தொடங்குவதற்கு முன்னரே பியூனஸ் அயர்சில் திரண்ட ரசிகர்கள் ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர். அர்ஜென்டினா வீரர்கள் அணியும் சீருடைகளுடனும், குறிப்பாக நடசத்திர ஈரர் மெஸ்ஸி அணியும் 10-ம் எண் கொண்ட டி ஷர்ட் அணிந்தும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். Source link