ஜெர்மனியில் உள்ள மிகப் பெரிய மீன் அருங்காட்சியகத்தில் விபத்து: 1,500 மீன்கள் உயிரிழப்பு

பெர்லின்: ஜெர்மனியில் உள்ள உலகின் மிகப் பெரிய மீன் அருங்காட்சியகத்தில் இருந்த தொட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஏறத்தாழ 1,500 மீன்கள் உயிரிழந்தன. வண்ணமயமான, அரிதான மீன்கள் பல, உலகம் முழுவதிலும் உள்ள மீன் அருங்காட்சியகங்களில் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினில் உலகின் மிகப் பெரிய மீன் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, “அக்வாரியத்தில் இருந்த மிகப் பெரிய தொட்டி வெடித்தது. இதனால் … Read more

2,500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத புதிருக்கு தீர்வு கண்ட கேம்பிர்ட்ஜ் பல்கலைகழக இந்திய மாணவர்!

கேம்பிரிட்ஜ் பலகைகழகத்தின் இந்திய மாணவர் ரிஷி ராஜ்போபட் 2,500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத புதிரை, சமஸ்கிருத மொழியின் தந்தை என்று அழைக்கப்படும் பாணினி எழுதிய இலக்கண விதியை டிகோட் செய்து சாதித்துள்ளார். கிமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து பல சமஸ்கிருத அறிஞர்களால் தீர்க்க முடியாமல் போன இலக்கண புதிருக்கு இறுதியாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இந்திய  மாணவர் ரிஷி ராஜ்போபட்  தீர்வு கண்டுள்ளார். பி எச் டி மாணவரான அவரது ஆய்வறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. ரிஷி ராஜ்போபட், சமஸ்கிருந்த … Read more

சிம்பா சிங்கத்திற்கு சிறப்பு கேக் தயாரித்து 14வது பிறந்தநாள் கொண்டாடிய பூங்கா ஊழியர்கள்..!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கத்திற்கு, 14வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிம்பா என்றழைக்கப்படும் இந்த சிங்கம், கடந்த 2016ம் ஆண்டு Santa Catarina பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து இங்கு அழைத்து வரப்பட்டது. சிம்பா சிங்கத்தின் 14வது பிறந்தநாளை ஒட்டி பூங்கா ஊழியர்கள், இறைச்சி, ரத்தம் உள்ளிட்டவற்றால் ஆன கேக்கை தயாரித்து சிங்கத்திற்கு வழங்கினர். சிங்கம் அந்த கேக்கை உண்டு மகிழ்ந்ததை, பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். Source link

இறுதிப் போட்டிக்கு முன்பாக வீடியோவில் பேச கோரிக்கை வைத்த ஜெலன்ஸ்கி: நிராகரித்த ஃபிஃபா

கத்தார்: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக அமைதிச் செய்தியை உலக மக்களிடையே வீடியோ வடிவில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கத்தாரில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் மனித உரிமை அத்துமீறல் குறித்தும், உலக அமைதி குறித்தும் இறுதிப் போட்டிக்கு முன்பாக வீடியோவில் தோன்றி … Read more

கள்ள நோட்டுகளை அச்சடித்து ஆடம்பரமாய் வாழ்ந்த தந்தை -மகன்! அதிர்ச்சியில் போலீஸார்!

இங்கிலாந்தில் தந்தை மற்றும் மகன் இருவரும் லண்டன் அருகே உள்ள தங்கள் வீட்டில், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 கோடி மதிப்புள்ள போலி நோட்டுகள்ளை அச்சிட்டு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். போலிஸாரின் விசாரணையில் குற்றவாளிகள் இருவர் சாதுர்யமாக மேற்கொண்ட கள்ள நோட்டு அச்சடித்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீஸ் விசாரணையில், குற்றவாளிகள் நீண்ட நாட்களாக நாடு முழுவதும் சுற்றித் திரிந்து போலி நோட்டுகளை சப்ளை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இவர்கள் தங்களின் சொந்த வீட்டில் அச்சடித்த … Read more

ஹிஜாப் போராட்டமும்… ஈரானை உலுக்கும் தொடர் மரணங்களும்…!

தெஹ்ரான்: ஈரானில் தீவிரமடைந்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மனதை உலுக்கும் மரணங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இரு மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பேர் கடந்த வாரம் பொது … Read more

கூகுள் ஆண்டவரிடம் 2022ம் ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் இவர்களைப் பற்றித்தான்!

Year Ender 2022: 2023ஆம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகிக் கொண்டிருக்கிற்து. இந்த ஆண்டு கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட ஆசியர்கள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 100 பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். அதில், தென்கொரியாவின் ‘பிடிஎஸ்’ (BTS) இசைக்குழுவின் பாப் பாடகர்களான ‘வி’ என அழைக்கப்படும் கிம் டே-ஹியுங் மற்றும் ஜங்குக் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். மூன்றாவது இடத்தில இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி உள்ளார். இந்திய நடிகைகள் பலர் … Read more

விடை கண்டுபிடித்த இந்திய ஆராய்ச்சி மாணவர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: கிமு 5 ம் நூற்றாண்டில் இருந்து சமஸ்கிருத அறிஞர்களால் தீர்க்க முடியாமல் இருந்த 2,500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத இலக்கண புதிருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படிக்கும் இந்திய பிஎச்டி மாணவர் ஒருவர் விடை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். சமஸ்கிருத மொழியின் தந்தை என போற்றப்படும் பாணினி, அந்த மொழிக்கான இலக்கண நூலை எழுதியுள்ளார். அவர் எழுதிய இலக்கணம் தொடர்பான புதிர் ஒன்று மொழியியல் அறிஞர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. பிரிட்டன் … Read more

ஒரே நாளில் 70 ஏவுகணைகளை பொழிந்த ரஷ்யா | நிலைகுலைந்த உக்ரைன்; பிடிவாதம் காட்டும் ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து இது மிகப் பெரிய தாக்குதல் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் உக்ரைனின் 2வது மிக்பெரிய நகரமான கீவ் நகர் இருளில் மூழ்கியது. மத்திய கிர்வி ரீ பகுதியில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கேர்சானிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 12 பேர் இறந்திருக்கலாம் என்று கணிப்பதாக உக்ரைன் கூறியுள்ளது. … Read more

மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா… இருளில் மூழ்கிய உக்ரைன்!

Russia Ukraine War: உக்ரைனின் மத்திய க்ரிவி ரிஹ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.  தெற்கில் கெர்சனில் ஷெல் தாக்குதலில் மற்றொருவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (2022 டிசம்பர் 16, வெள்ளிக்கிழமை) உக்ரைன் மீது 70 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இது ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, நடைபெற்ற தாக்குதல்களில் மிகப்பெரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலை அடுத்து, உக்ரைனின் … Read more