அமெரிக்காவில் போலீஸ் காரின் ஜன்னல் வழியாகத் தப்ப முயன்ற கைதி.. உடனடியாக மடக்கி பிடித்த போலீசார்..!

அமெரிக்காவில் போலீஸ் காரின் ஜன்னல் வழியாகத் தப்ப முயன்ற கைதியை போலீசார் உடனடியாகப் பிடித்தனர். கலிபோர்னியா மாநிலத்தில், ஒரு சிறைச்சாலையிலிருந்து மற்றொரு சிறைச்சாலைக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட  கைதி, போலீஸ் காரின் பின்பக்க கதவின் ஜன்னல் கண்ணாடியை காலால் எட்டி உதைத்து உடைத்து தப்ப முயன்றார். காரிலிருந்த போலீஸ் அதிகாரி, கைதி தப்பியோடிவிடாதபடி இருக்கப்பற்றிக்கொண்டார். Source link

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி குண்டு வெடிப்பில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழப்பு..!

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி குழந்தை ஒன்று பலியான நிலையில், 5 பேர் காயமடைந்தனர். ரஜோரியின் Dangri பகுதியில், இந்துக்களின் வீடுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நேற்று 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று அதே பகுதியில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி குழந்தை ஒன்று பலியானது. அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த மற்றொரு வெடிபொருள் அகற்றப்பட்டதாக தெரிவித்த போலீசார், பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மத்திய, … Read more

9/11 தாக்குதலுக்கு முன்பாக ஒசாமாவை கொல்லும் திட்டத்தை சொதப்பிய அமெரிக்கா!

உலகை உலுக்கிய செப்டம்பர் 11, 2001 (9/11) தாக்குதலின் சூத்திரதாரியாகவும், அல்கொய்தாவின் மூளையாகவும் இருந்த ஒசாமா பின்லேடனை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்தது. அமெரிக்காவின் இந்தத் தேடுதல் 2 மே 2011 அன்று பாகிஸ்தானின் அபோதாபாத்தில், அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் படையின் கைகளில் ஒசாமா கொல்லப்பட்டபோது முடிவுக்கு வந்தது. ஊடக அறிக்கையின்படி, 9/11 தாக்குதலுக்கு 9 மாதங்களுக்கு முன்பே பிரிட்டன் லேடனைக் கொல்லத் தயாராக இருந்ததாக இரகசிய ஆவணங்கள் மூலம் சமீபத்தில் தெரியவந்துள்ளது. அல்கைதா … Read more

அதிகாரத்தில் இருப்பதற்காகவே புதின் போரை நடத்துகிறார்: ஜெலன்ஸ்கி கடும் விமர்சனம்

கீவ்: ரஷ்ய அதிபர் புதின் தனது வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருப்பதற்காக போரை நடத்தி வருகிறார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் ஒருவருடத்தை நெருங்கவுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டுக்கு முந்தைய நாளில், உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷ்யா கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஒரே நாளில் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகள் உக்ரைனின் பல்வேறு இடங்களில் ஏவப்பட்டன. இந்தச் சூழலில் நாட்டு மக்களுக்கான புத்தாண்டு … Read more

2 ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்து.. 4 பேர் உயிரிழப்பு..!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில், 2 ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். கோல்டு கோஸ்டிலுள்ள sea world கேளிக்கை விடுதி அருகே, தரையிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், தரையிறங்க வந்துகொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதியது. ஒரு ஹெலிகாப்டரை அதன் விமானி சாதுர்யமாக மணற்பரப்பில் தரையிறக்கிய நிலையில், மற்றொரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். மூவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

ஆஸ்திரேலியா வரும் சீன பயணிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் – அமைச்சர் மார்க் பட்லர்

ஆஸ்திரேலியா வரும் சீன பயணிகள், வரும் 5ம் தேதி முதல் கோவிட் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று, ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகள் குறித்த விபரங்களை, சீனா முழுமையாக வெளியிடாததை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் மார்க் பட்லர் கூறினார். Source link

இந்தியாவுடனான உறவு மேம்பட விரும்புகிறோம் – சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் கீன் கேங் தகவல்

பெய்ஜிங்: இந்தியாவுடனான உறவு மேம்பட சீனா விரும்புகிறது என அதன் புதிய வெளியுறவு அமைச்சர் கீன் கேங் தெரிவித்துள்ளார். சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இருந்த வாங் இ-க்குப் பதில், புதிய வெளியுறவு அமைச்சராக கீன் கேங் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். இவர் அமெரிக்காவுக்கான சீன தூதராக இருந்தவர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 13வது தேசிய மாநாட்டில் இவரை புதிய வெளியுறவு அமைச்சராக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. வாங் இ தற்போது சீன கம்யூனிச கட்சியின் மத்திய குழு … Read more

மூன்று துறைமுகங்கள் அனுமதி மறுத்ததால் ஆஸ்திரேலியாவில் நிற்கும் கப்பல்.. பல நாட்களாக கரைக்குத் திரும்ப முடியாமல் பயணிகள் அவதி..!

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்து கரைக்கு வர முடியாமல் நூற்றுக்கணக்கான பயணிகள் ஒருவாரமாக சிக்கித் தவிக்கின்றனர். நியூசிலாந்து நாட்டின் வெலிங்டனில் இருந்து அடிலெய்டுக்கு புறப்பட்ட வைகிங் ஓரியன் கப்பலுக்கு மூன்று துறைமுகங்கள் அனுமதி மறுத்ததால் தெற்கு ஆஸ்திரேலிய கடல் பகுதியில் அவர்கள் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. கடல் நுண்ணுயிரிகள், தாவரங்கள், பாசிகள் அல்லது சிறிய விலங்குகள் இருப்பதை ஆஸ்திரேலியாவின் தேசிய கடல்சார் ஒருங்கிணைப்பு மையம் உறுதிப்படுத்தியதையடுத்து அதை சுத்தம் செய்யுமாறு வைக்கிங் ஓரியன் கப்பலின் ஏஜெண்டிடம் அதிகாரிகள் … Read more

மெக்சிகோ சிறைச்சாலை மீது கடத்தல் கும்பல் தாக்குதல்.. பாதுகாப்பு படையினர் 10 பேர், கைதிகள் 4 பேர் உயிரிழப்பு..!

மெக்சிகோவின் ஜூவாரஸ் நகரிலுள்ள சிறைச்சாலை மீது போதைப்பொருள் கடத்தல் கும்பல் நிகழ்த்திய கண்மூடித்தனமானத் தாக்குதலில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 10 பேர் வீரமரணம் அடைந்தனர். புத்தாண்டு தினமான நேற்று காலை 7 மணியளவில் எந்திர துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்களுடன் கறுப்பு உடையில் சிறைச்சாலைக்கு வந்த 14 பேர் கும்பல் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினர். இதில் பாதுகாப்பு படையினர் 10 பேரும், கைதிகள் 4 பேரும் உயிரிழந்தனர். இதனை சாதகமாகிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிய 24 கைதிகளைத் தேடும் பணிகள் … Read more

இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து இங்கிலாந்திற்கு வந்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த மக்கள்..!

2022 ஆம் ஆண்டில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து, ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து இங்கிலாந்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது, இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டு 17,000 ஆக இருந்தது. 45,756 பேர் சிறிய படகுகளில் ஆபத்தான கடல் பாதைகளைக் கடந்து வந்துள்ளனர். கடந்த மாதம், ஆங்கிலக் கால்வாயின் உறைபனி வெப்பநிலையில் புலம்பெயர்ந்தோர் நிரம்பிய சிறிய படகு கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். மீன்பிடி படகுகள் மூலம் சுமார் 43 பேர் குளிர்ந்த நீரில் … Read more