இந்திய வம்சாவளியினருக்கு பிரிட்டன் மன்னர் கவுரவ விருது| British Kings Honorary Award for Indians of Indian Origin
லண்டன்-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அலோக் சர்மா உட்பட 30 பேர், ‘நைட்’ எனப்படும் பிரிட்டன் மன்னரின் கவுரவ விருதுக்கு தேர்வாகியுள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், சிறந்த சேவையாற்றுவோருக்கு, அரச குடும்பத்தின் சார்பில் ‘நைட் ‘ எனப்படும் உயரிய கவுரவ விருது வழங்கப்படுகிறது. நேற்று, 2023ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருது, பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலில், 1,107 பேர் இடம்பெற்றுள்ளனர். … Read more