பாகிஸ்தானில் கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத வகையில் பணவீக்கம் 27.55 சதவீதம் அதிகரிப்பு..!

கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவாக பாகிஸ்தானின் பணவீக்கம் 27 புள்ளி 55 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது. நெருக்கடியான நேரத்தில் கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க IMF பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு வந்துள்ளனர். நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து, வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துள்ளன. செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை காரணமாக துறைமுகங்களில் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. பாகிஸ்தானின் நாணய மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளதால், பெட்ரோல் மற்றும் எண்ணெய் விலையை … Read more

ஜெர்மனி: தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த மாடல் அழகி: காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

பெர்லின், ஜெர்மனியை சேர்ந்த 23 வயதான மாடல் அழகி ஷஹ்ரபான் கே. ஈராக் வம்சாவளியான இவர் இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்புகளை வழங்கி பிரபலமாக விளங்கி வந்தார். திருமாணமாகி விவாகரத்து பெற்ற இவர் ஷேகிர் கே (வயது24) என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஷஹ்ரபான் தனது பெற்றோரிடம் தான் தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. … Read more

பிரதமர் மோடி ஜூன் – ஜூலை மாதத்தில் அமெரிக்கா பயணம்.. அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் அளிக்கும் விருந்தில் பங்கேற்பு..!

வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார். அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசுமுறைப் பயணமாகச் செல்லும் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் ஜோ பைடனும் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவார். 2009 இல் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விருந்தளித்தார். ஜோபைடன் அதிபரான பின் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் மட்டுமே அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இதுவரை அமெரிக்க அதிபர்களை … Read more

பெஷாவர் மசூதி தற்கொலை படை தாக்குதல் சம்பவம்: 17 பேர் கைது| Peshawar Mosque Suicide Squad Attack: 17 Arrested

பெஷாவர் : பாகிஸ்தான் மசூதியில் தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 101 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில், சந்தேகத்துக்கு உரிய ௧௭ பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் போலீஸ் குடியிருப்புப் பகுதியில் உள்ள மசூதியில் ஜன., ௩௦ம் தேதி நடைபெற்ற மதிய வேளை தொழுகையின் போது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மசூதியின் கூரை பெயர்ந்து விழுந்து பலத்த சேதமடைந்தது. இத்தாக்குதலில், 97 போலீஸ் … Read more

பிரேசிலில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பலி

சாவ் பாலோ, பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 54 இருந்தனர். இந்த பஸ் அங்கு பரானா என்ற நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது. பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் மரண ஓலமிட்டனர். டிரைவர் பஸ்சை … Read more

தைவானில் டாக்டரை காயப்படுத்திய கிளியின் உரிமையாளருக்கு சிறை: ரூ.74 லட்சம் அபராதம்

தைபே, தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் கிளி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஹூவாங் கிளியுடன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். அப்போது அங்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் என்பவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹூவாங்கின் கிளி திடீரென பறந்து சென்று, டாக்டர் லினின் முதுகில் கால்களை வைத்து நின்று இறக்கையை பலமுறை அசைத்தது. இதில் டாக்டர் லின் திடுக்கிட்டு கீழே விழுந்தார். இதில் அவரது … Read more

Green Comet: 50000 ஆண்டுகள் காத்திருக்க அவசியம் என்ன? இன்றே பச்சை வால்மீனை பாருங்கள்

Green Comet 2023:  இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான, அரிய பச்சை வால்மீன் பூமியைக் கடந்து செல்லும், இதை வெற்றுக் கண்களால் இந்தியாவில் பார்க்க முடியும். தொலைநோக்கி மூலம் நட்சத்திரத்தை நன்றாகப் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகளும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். ஜனவரி 30 அன்று இந்தியாவில் தெரியத் தொடங்கிய இந்த நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியைக் கடந்து சென்றதாம்! Comet C/2022 E3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரம், பிப்ரவரி 2 ஆம் தேதி … Read more

மியான்மரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்; ராணுவ அரசு அறிவிப்பு.!

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2021 பிப்ரவரி 1ம் தேதி நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து மியான்மர் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், சர்வதேச தனிமைப்படுத்தல் மற்றும் மேற்கத்திய தலைமையிலான தடைகளை எதிர்கொண்டது. மியான்மரில் ராணுவம் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து மியான்மர் குழப்பத்தில் உள்ளது. ஆங் சாங் சூகி மற்றும் மற்ற அதிகாரிகளையும் காவலில் ராணுவம் … Read more

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் கவுதம் அதானி..!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்திற்கு இறங்கிய கவுதம் அதானி ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் அந்தஸ்தையும்  இழந்துள்ளார். சில நாட்கள் முன்பு வரை உலக பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, படிப்படியாக குறைந்து உலக பணக்காரர்கள் வரிசையில் 11-வது இடத்தில் இருந்தநிலையில், அதானியின் சொத்து மதிப்பு இன்று மேலும் குறைந்து 15-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். உலக பணக்காரர்கள் வரிசையில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ள முகேஷ் … Read more

FBI சோதனைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் "முழு ஆதரவு"! ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வீட்டில் FBI சோதனை நடத்தி வருகிறது. டெலாவேரில் உள்ள அவரது வீட்டில் தற்போது சோதனை நடத்தி வரும் எஃப்.பி.ஐ, இதற்கு முன்னதாக, ஜோ பிடனின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள பிடனின் வில்மிங்டன் குடியிருப்பு மற்றும் திங்க் டேங்க் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த சோதனைகளின்போது வகைப்படுத்தப்பட்ட அடையாளங்களுடன் கூடிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (Federal Bureau of Investigation), அமெரிக்க ஜோ பிடனின் டெலாவேரில் உள்ள … Read more