ஆஸ்கார் விருதுக்கு தேர்வான 'ஜாய்லேண்ட்' பாகிஸ்தான் திரைபடத்துக்கு தடை

இஸ்லாமாபாத் ஆஸ்கார் விருதுக்கு பாகிஸ்தான் சார்பில் ‘ஜாய்லேண்ட்’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஜாய்லேண்ட்’ படத்திற்கு ஆகஸ்ட் 17 அன்று பாகிஸ்தான் அரசால் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த் திரப்படம் குறித்து பாகிஸ்தானில் சர்ச்சைக்கள் கிளம்பின. சமீபத்தில் அதன் கதை குறித்து ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. இந்த திரைப்படத்தை தடை செய்ய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு கோரிக்கைகள் குவிந்தன. நவம்பர் 11 அன்று வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் “சமூக விழுமியங்கள் மற்றும் தார்மீக தரங்களுடன்” இந்த … Read more

ராணுவத்தை விமர்சிப்பியா? உன்னோட குடியுரிமை கேன்சல்! விளாடிமிர் புடின் அதிரடி

மாஸ்கோ:  ரஷ்ய ராணுவத்தை விமர்சிப்பவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்துள்ளார். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டேட் டுமாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மசோதாவின் திருத்தங்களின்படி, ‘ரஷ்ய ஆயுதப் படைகளைப் பற்றிய தவறான தகவல்களை வேண்டுமென்றே பகிரங்கமாகப் பரப்புவது’ ஒரு குற்றம் ஆகும். இந்த குற்றம் செய்யப்பட்டவர்களின் ரஷ்ய பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கு இதுவே போதுமான காரணமாக இருக்கும்.அதாவது, ஒருவரின் குடியுரிமை பறிக்கப்படும் என்பது இதன் பொருள்.   ரஷ்ய இராணுவம் தொடர்பான விஷயங்களை தவறாக சித்தரிப்பது, விமர்சிப்பது போன்ற செயல்களில் … Read more

துருக்கி குண்டுவெடிப்பு தாக்குதல்; சந்தேக நபர் கைது: துருக்கி உள்துறை மந்திரி

இஸ்தான்புல், துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடைகள் அதிகம் நிறைந்த இஸ்திக்லால் பகுதியில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 81 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கி நாட்டு உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது என்று இஸ்தான்புல் கவர்னர் அலி யெர்லிகாயா கூறினார். இந்த வீதியில் பல கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. இங்கு இதற்கு முன் 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் … Read more

18 ஆண்டுகள் விமான நிலையத்தில் வாழ்வு.. டெர்மினல் படத்திற்கு காரணமான மெஹ்ரான் உயிரிழப்பு

பாரிஸ்: பிரான்ஸ் விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக தங்கி இருந்த ஈரானின் மெஹ்ரான் கரீமி நஸ்செரி உயிரிழந்தார். ஈரானை சேர்ந்தவர் மெஹ்ரான் கரீமி நஸ்செரி அங்கு நடந்த அரசியல் புரட்சி காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறி 1988 ஆம் ஆண்டு அரசியல் அகதியாக பிரிட்டனில் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்திருந்தார். மெஹ்ரானி தாயார் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு குடியுரிமை வழங்க பிரிட்டன் அரசு மறுத்துவிட்டது. இந்த நிலையில் அகதிக்கான உரிய ஆவணம் இல்லாததால் 1988-ம் ஆண்டு பிரான்ஸில் உள்ள … Read more

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 சிரியா வீரர்கள் பலி; 3 பேர் காயம்

டமாஸ்கஸ், சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011-முதல் நடைபெற்று வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ விமானதளத்தை குறி வைத்து இஸ்ரேஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சனா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளின் நிலைகளை குறிவைத்து … Read more

எலான் மஸ்க் அடுத்தடுத்து அதிரடி? – இன்றும் ஆயிரக்கணக்காணோர் பணிநீக்கம்!

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் போன்ற அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, ட்விட்டரால் அங்கீகரிக்கப்படும் பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் (Blue Tick) நடைமுறை அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், அதற்கு எட்டு அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு, அந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எலான் மஸ்க் முடுக்கிவிட்டார். இதனால், கடந்த நவ.4ஆம் தேதி அன்று … Read more

மிக மலிவான விலையில் ஸ்பெயின் கிராமம்; விலையை கேட்டால் வியப்பில் மயக்கம் வரும்!

நிலம், பொன் போன்றவற்றில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று பலரும் கருதுவதால், நிலம், வீடு, நகை போன்றவற்றில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், பல சமயங்களில் பெரிய அளவிலான நிலத்தை வாங்கி, அதனை பிளாட் போட்டு விற்றோ, அல்லது பிளாட்கள் எனப்படும் பல மாடிக் கட்டிடங்களை கட்டி விற்றோ பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், ஸ்பெயினில் கிராமம் விற்கப்படுகிறது., விலையைக் கேட்டதும் அனைவருக்கும் ஆச்சர்யம் ஏற்படும். மிகவும் குறைவான விலையில் … Read more

படு ஸ்லோவாக இயங்கிய ட்விட்டர்: பயனாளர்களிடம் மன்னிப்பு கோரிய எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைவர் எலான் மஸ்க் பயனாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ட்விட்டர் சமூகவலைதளம் மிகவும் குறைந்த வேகத்தில் இயங்குவதாக புகார்கள் எழுந்த நிலையில் மஸ்க் மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னதாக எலான் மஸ்க் தான் அறிவித்த மிகவும் முக்கியமான மாற்றம் 8 டாலர் வெரிபிகேஷன் திட்டத்தை திரும்பப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். 8 டாலர் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில் பிரபலங்களின் பெயரில் போலியான கணக்குகள் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்தது இதனால் … Read more

தொடர் கனமழையால் வெள்ளக்காடான வலென்சியா நகரம்..!

தொடர் கனமழையால், ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை வலென்சியாவை தாக்கிய புயலால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோடு, சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தி மூழ்கின. மழை வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டனர். புயல் காரணமாக, வலென்சியாவில் விமானம் மற்றும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், சேவைகள் மீண்டும் தொடங்கின. Source link

உக்ரைனின் நோவா ககோவ்கா அணையில் குண்டு வெடிப்பு.. அணையை தகர்க்க திட்டமிடப்பட்டிருப்பதாக ரஷ்யா-உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு..!

உக்ரைனின் கெர்சான் நகரிலுள்ள நோவா ககோவ்கா அணையில் குண்டு வெடிக்கும் காட்சியை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. வெடிமருந்துகள் மூலம் அணையை தகர்க்க திட்டமிட்டிருந்ததாக, ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வந்தனர். கெர்சோன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அணைக்கு சேதம் ஏற்படலாம் என அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான Maxar தெரிவித்த நிலையில், மறுநாள் அணையில் குண்டு வெடித்துள்ளது. Source link