ரஷியாவிடம் இருந்து விரும்பிய அளவு எண்ணெய்யை இந்தியா வாங்கி கொள்ளலாம்; அமெரிக்கா

வாஷிங்டன், உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடர்ந்த போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. தூதரக பேச்சுவார்த்தை தோல்வி, பொருளாதார தடைகள் போன்றவைகளால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாத சூழலே நீடித்து வருகிறது. ரஷியாவின் வருவாயை குறைக்கும் நோக்கில் புதிய யுக்தியாக, ரஷியாவின் எண்ணெய் விலைக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு நாடுகள் தள்ளப்படும். அதனால், ரஷியாவை புறக்கணிக்க கூடிய சூழல் ஏற்படும். … Read more

நைஜீரியாவில் டேங்கர் வெடித்து 12 பேர் பலி| Dinamalar

அபுஜா: நைஜீரியாவில் ‘காஸ் டேங்கர்’ லாரி வெடித்து 12 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் கோகி மாகாணத்தில் உள்ள சாலையில் நேற்று முன் தினம் இரவு ஒரு காஸ் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அதன் பிரேக் செயலிழந்து முன்னால் சென்ற வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காஸ் டேங்கர் வெடித்து பயங்கர தீப்பிடித்தது. இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் இருந்த 12 பேர் அதே இடத்தில் உடல் கருகி … Read more

அவர்களிடம் தப்பி தவறி ஏதும் வாங்கி குடித்து விடாதீர்கள்; 'அந்த மாதிரி' பட்டியலில் 40 பிரிட்டன் எம்.பி.க்கள்

லண்டன், இங்கிலாந்து நாட்டில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதற்கு அடுத்து, நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களை தொழிலாளர் கட்சி கொண்டுள்ளது. இதில் தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி.யாக இருப்பவர் சார்லட் நிக்கோல்ஸ். இவர் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியின்போது, ‘அந்த மாதிரி’ நடக்க கூடியவர்களின் ரகசிய பட்டியல் உள்ளது. அந்த நபர்களுடன் தனியாக இருக்க வேண்டாம் என நான் எச்சரிக்கப்பட்டேன் என்று அவர் கூறியுள்ளார். அந்த நபர்கள், அதிகார துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியில் … Read more

9ஆவது குழந்தை வரப்போகுது… அதனால் இன்னொரு பொண்ணு வேணும் – அடம்பிடிக்கும் பிரபலம்

எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பது தற்போது தலைமுறையினருக்கு எளிதாகிவிட்டது. அதில், சில விஷயங்கள் இயல்புக்கு மாறாக இருக்கலாம் அல்லது மிகவும் வினோதமாகவும் இருக்கலாம். அந்த வகையில், அமெரிக்க கால்பந்து வீரர் மசாயா லெஜண்ட் ஆண்ட்ரூ என்பவரின் வினோதமான முடிவும் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.  ஆண்ட்ரூவுக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி, எட்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது மூவருக்கும் மற்றொரு குழந்தையும் பிறக்க உள்ளது. எனவே, இதனை சரிகட்ட மூன்றாவதாக திருமணம் செய்ய உள்ளதாக அவர் … Read more

ஈரான் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதிக்க 12 நாடுகள் கோரிக்கை

ஜெனீவா, ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக பேசியதாக கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் டெஹ்ரானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் அவர் பலியானதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் … Read more

பிரதமர் மோடியை சந்திக்க அதிபர் பைடன் ஆவலுடன் உள்ளார்; அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

வாஷிங்டன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் செய்தியாளர்களை சந்தித்துபேசும்போது, பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு சென்று அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்து பேசுவாரா? என நிருபர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சுல்லிவன், அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. அதனால், ஜி-20 மாநாட்டில் அதிபர் பைடன் நிச்சயம் கலந்து கொள்ளும் நோக்கத்துடன் உள்ளார். அதிபராக பைடன் பொறுப்பேற்று கொண்டதில் இருந்து வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி பல முறை … Read more

உலகக் கோப்பையில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும்: ஃபிபா முன்னாள் தலைவர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஃபிபா (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு) அமைப்பின் முன்னாள் தலைவர் செப் ப்ளேட்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செப் ப்ளேட்டர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “நடக்கவிருக்கும் உலககோப்பை தொடரிலிருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும். நான் ஃபிபா அமைப்பின் தலைவராக இருந்திருந்தால் நிச்சயம் தொடரிலிருந்து ஈரானை நீக்கி இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். ஈரானின் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து … Read more

டிவிட்டரில் இயேசு கிறிஸ்து; உடனே கிடைத்தது ‘ப்ளூ டிக்’!

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க். கடந்த மாதம் டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது முதல் தினமும் எலான் மஸ்க் குறித்து ஏதாவது ஒரு செய்தி வந்தபடியே தான் உள்ளது. டிவிட்டர் தனது வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில் பல்வேறு மாற்றங்கள் ட்விட்டர் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, டிவிட்டர் ஊழியர்கள் பாதிக்கும் மேல் வேலையை விட்டு, நீக்கப்பட்டு உள்ளனர். அதிகாரப்பூர்வ கணக்கான … Read more

தென் பசுபிக் தீவில் அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் பசுபிக் தீவுக்கூட்டத்தில் அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  நியூ தீவின் தலைநகர்அலோஃபிக்கு மேற்கே 241 கிலோ மீட்டர் தொலைவில் 7 புள்ளி 5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனிடையே, 7 புள்ளி 1 ஆக பதிவான மற்றொரு நிலநடுக்கம் டோங்கா தீவின் தென்கிழக்குப் பகுதியில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்க … Read more

பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி 12 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். கோகி மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி, சாலையின் குறுக்கே வந்த காரின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதி வெடித்து சிதறியது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. இந்த கோர விபத்தில் 12 பேர் உடல்கருகி உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். Source link