ரஷ்யாவில் இருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாஸ்கோவிலிருந்து கோவா வந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்குத் திருப்பிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அசூர் ஏர் நிறுவனத்தின் AZV2463 விமானம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவாவிற்கு புறப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நள்ளிரவு 12.30 மணிக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதனையடுத்து, இந்திய வான்வெளிக்குள் விமானம் நுழைவதற்கு முன்பு இன்று அதிகாலை உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

நிலவில் கால்வைத்த 3ஆவது மனிதர்… 93 வயதில் செய்த காரியத்தை பாருங்க – இளமை ஊஞ்சலாடுது!

1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு பயணத்து, அதில் கால் பதித்த முதல் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் பஸ் ஆல்ட்ரின். இவர் தனது 93ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், அன்று தனது நீண்டகால காதலியை மணந்தார்.  ட்விட்டரில், ஆல்ட்ரின் தனது மனைவி டாக்டர் அன்கா ஃபௌருடன் இருக்கும் புகைப்படங்களை இன்று வெளியிட்டார். அதில், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறிய விழாவில் அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.  மேலும் … Read more

நியூசிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் கிறிஸ் ஹிப்கின்ஸ்

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனின் ராஜினாமா அறிவிப்பை அடுத்து, அடுத்த பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு செய்யப்பட இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டென் பதவியை ராஜினமா செய்யப் போவதாக கடந்த வியாழக்கிழமை திடீரென அறிவித்தார். நியூசிலாந்தை தலைமை ஏற்று நடத்த இனியும் தன்னால் முடியாது என்றும் தனது சக்தி தீர்ந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஜெசிந்தாவின் அறிவிப்பை அடுத்து ஆளும் தொழிலாளர் கட்சியின் அடுத்த பிரதமர் … Read more

சீட் பெல்ட் அணியாததால் பிரதமருக்கு அபராதம்; கடைமை மீறா காவல்துறை..!

பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் (42) சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததற்கு அந்நாட்டு காவல்துறை அபராதம் விதித்து மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. பிரதமர் ரிஷி சுனக் கடந்த வியாழன் அன்று வடமேற்கு இங்கிலாந்தில் கார் பயணம் மேற்கொண்டார். அப்போது, பிரிட்டனின் 100க்கும் மேற்பட்ட நல திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தனது அரசாங்கத்தின் புதிய லெவலிங் அப் ஃபண்ட் அறிவிப்புகளை விளக்கி வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டார். பிரதமரின் வீடியோவை … Read more

ஆஸ்திரேலியாவில் குடியிருப்பு பகுதிக்கு தவழ்ந்து வந்த கடல்நாயை கண்டு வியப்படைந்த மக்கள்!

ஆஸ்திரேலியாவில் கடல் நாய் ஒன்று, குடியிருப்பு பகுதிக்கு வந்ததைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். கடலோர நகரமான பாயிண்ட் லான்ஸ்டேலில், கடல் நாய் ஒன்று தரையில் தவழ்ந்தபடி வந்துள்ளது. அங்குள்ள சேவை மையத்தை நோக்கி கடல் நாய் தவழ்ந்து சென்று கொண்டிருந்ததைக் காண, மக்கள் திரண்டனர். கடல் நாயின் பாதுகாப்புக்காக அங்கு சென்ற போலீசார், அது மீண்டும் பத்திரமாக கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தனர். Source link

சீட் பெல்ட் அணியவில்லை… பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதித்த காவல் துறை!

வீடியோ எடுப்பதற்காக சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதித்து பிரிட்டன் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வடமேற்கு இங்கிலாந்தில் வாகனம் ஓட்டும்போது வீடியோ எடுக்க தனது சீட் பெல்ட்டை கழற்றியதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளார். அதே நேரத்தில், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் போலீஸ் படை வெள்ளிக்கிழமை கூறியது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 100 பிரிட்டிஷ் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படலாம் என்று … Read more

ஆஸ்திரேலியாவில் சுறாக்கள் தாக்கியதில் இறந்து மிதந்து கொண்டிருந்த டால்பின் கரையில் இருந்து வெளியேற்றம்..!

ஆஸ்திரேலியாவில் சுறாக்கள் தாக்கியதில் டால்பின் உயிரிழந்தது. சிட்னியில் உள்ள மேன்லி கடற்கரைக்கு அருகே டால்பினை சுறாக்கள் தாக்கியுள்ளன. பின்னர் கரை ஒதுங்கி மிதந்துகொண்டிருந்த டால்பினை அங்கிருந்த நீச்சல் வீரர்கள் கரையில் இருந்து வெளியேற்றினர். இன்று காலை இரண்டரை மீட்டர் உயரமுள்ள 3 சுறாக்களை பார்த்ததாக நீச்சல் வீரர்கள் கூறியதால், மேன்லி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன.  Source link

’எதிரி’ விவகாரம்: ஈரான் – தென்கொரியா மோதல்

தெஹ்ரான்: தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஈரானை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் “எதிரி” என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக தென்கொரியாவை சேர்ந்த பாதுகாப்புப் படையினர் அமீரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தென்கொரிய பாதுகாப்புப் படையினரிடம் நிகழ்வு ஒன்றில், தென்கொரிய அதிபர் யூன் சு- யோல் பேசும்போது, ”ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிரி ஈரான். மிகவும் அச்சுறுத்தல் கொண்ட நாடு ஈரான். எங்களின் எதிரி வடகொரியா.” என்று தெரிவித்தார். இந்த நிலையில் … Read more

நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்குப் பதிலாக தற்போது அமைச்சராக உள்ள கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் உள்ள தொழிலாளர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெசிந்த ஆர்டெர்னுக்குப் பதிலாக தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், புதிய பிரதமராகவும் ஹிப்கின்ஸ் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ் ஹிப்கின்ஸின் வேட்புமனுவை அங்கீகரிக்கவும், கட்சி தலைவராக உறுதி செய்வதற்கான கூட்டம் நாளை கூட உள்ளது. ஹிப்கின்ஸ் தற்போது காவல்துறை, கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். Source link