சீனாவில் ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு

பீஜிங்: சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்டியிருக்க இன்னொருபுறம் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், அவரின் கூற்றின்படி ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரையிலான காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாககவும் சர்வதேச ஊடகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கணக்கு கேட்கும் உலக சுகாதார நிறுவனம்: ஜனவரி … Read more

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. நடன அரங்கில் இந்த … Read more

ஸ்வீடன் நாட்டில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்து ஸ்வீடன் தேசியக்கொடியை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்..!

ஸ்வீடன் நாட்டில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்து துருக்கியில் நடைபெற்ற போராட்டத்தில் ஸ்வீடன் தேசியக்கொடி எரிக்கப்பட்டது. ஆப்ரிக்க நாடுகளிலிருந்து ஸ்வீடனில் தஞ்சமடையவரும் இஸ்லாமியர்களை கண்டித்து, அந்நாட்சின் தீவிர வலதுசாரி கட்சி தலைவர் ஒருவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டது. இதனை கண்டித்து துருக்கியின் இஸ்தான்புல், அங்காரா நகரங்களிலுள்ள ஸ்வீடன் தூதரகத்தின்முன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நேட்டோ அமைப்பில் சேர்வது தொடர்பாக துருக்கி வரயிருந்த ஸ்வீடன் வெளியுறவுத்துறை அமைச்சரின் சுற்றுப்பயணத்தையும் துருக்கி அரசு ரத்து செய்துள்ளது. Source link

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு… அமெரிக்காவில் 10க்கும் மேற்பட்டோர் பலி

Shooting In California: அமெரிக்காவின் காலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் நகரில் சீன புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு ஒருவர் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  அமெரிக்க நேரப்படி, நேற்றிரவு 10 மணியளவில், மான்டேரி பார்க்கிலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் சீன புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. அந்த நேரத்தில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.  மேலும் படிக்க | தாலிபான்களுக்கு … Read more

நன்கொடையாக உக்ரைனுக்கு தேடுதல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டரை வழங்கிய பிரிட்டன்…!

பிரிட்டன் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தேடுதல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டரை நன்கொடையாக வழங்கியதற்காக பிரிட்டனுக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் (Oleksii Reznikov) நன்றி தெரிவித்துள்ளார். கருங்கடலுக்கு அருகே பறக்கும் ஹெலிகாப்டரின் வீடியோவை பகிர்ந்துள்ள ஒலெக்ஸி, இது உக்ரைன் கடற்படைக்கு வலுசேர்க்கும் என தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், உக்ரைனுக்கு ஹெலிகாப்டர்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.  Source link

பிரான்ஸ் தொலைக்காட்சியில் அஜித்தின் துணிவு திரைப்படம் குறித்து கலந்துரையாடல்..!

பிரான்ஸில் திரையிடப்பட்ட அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு, பிரெஞ்ச் திரைப்படங்களைவிட அதிக வரவேற்பு இருப்பதாக, அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் விவாதிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடலில், நடிகர் அஜித்துக்கு பாரீஸில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக பேசப்பட்டுள்ளது. இவ்வளவு நாட்கள் துணிவு திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடுவது மிகப்பெரிய காரியம் என்றும் அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது. பிரான்ஸ் தொலைக்காட்சியில் பேசப்பட்ட இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். Source link

தாலிபான்களுக்கு பயந்து துணிக்கடை பெண் பொம்மைகளும் ‘மாஸ்க்’ அணிந்துள்ள அவல நிலை!

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி வந்ததில் இருந்து பெண்களின் நிலை மோசமாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களை ஒடுக்கும் வகையில் பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பொது இடங்களுக்குச் செல்வதற்கும், வேலை செய்வதற்கும், படிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தாலிபான்களின் பயம் மிகவும் அதிகமாக இருப்பதால், கடைகளில் உள்ள பெண் பொம்மைகளின் முகங்கள் கூட மறைக்கப்படுகின்றன. சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்களில், துணிக்கடையில் இருக்கும் பெண் பொம்மைகளின் முகமும் தலையும் மறைக்கப்பட்டிருப்பதைக் … Read more

முடிவெடுக்க தயங்கும் மேற்குலக நாடுகளால் எங்கள் மக்கள் கொல்லப்படுகிறார்கள் – உக்ரைன்

கீவ்: மேற்குலக நாடுகளின் முடிவெடுக்காத நிலையால் மக்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரேனிய ஜனாதிபதி ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறும்போது, ” நீங்கள் ஆயுதங்கள் வழங்கி உக்ரைனுக்கு உதவலாம். ரஷ்யாவை தோல்வி அடைய செய்வதை தவிர்த்து இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேறு வழியில்லை. மேற்குலக நாடுகளின் முடிவெடுக்காத தன்மையால் உக்ரைனியர்கள் நாளும் கொல்லப்படுகிறார்கள். தாமதமாகும் ஒவ்வொரு நாளும் உயிர்கள் பறிபோகின்றன. விரைவாக யோசியுங்கள்” என்று தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று சுமார் 50 நாடுகள் உக்ரைனுக்கு … Read more