ரொனால்டோவிற்கு அவரது காதலி ஜார்ஜினா புதிய ரோல்ஸ் ராய்ஸ் பரிசாக வழங்கியுள்ளார்..!
போர்ச்சுகல் நாட்டு நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு, அவரது காதலி ஜார்ஜினா, விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை, கிறிஸ்துமஸ் பரிசாக அளித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளை நிற Rolls-Royce Dawn convertible காரை, ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் பரிசாக அளித்து ரொனால்டோவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவரது குழந்தைகளுக்கும் பரிசளித்த காட்சிகளை ஜார்ஜினா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Source link