கொரியன் சீரிஸ் பார்த்ததால் கொடூரம்… 2 சிறுவர்களுக்கு தூக்கு தண்டனை!

K-Drama series என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது அல்லது விநியோகிப்பது வட கொரியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சேர்ந்து, வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் பல தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்ததாக கூறப்படுகிறது.  அவர்களை அதே நகரத்தில் உள்ள ஒரு விமானநிலையத்தில் உள்ளூர்வாசிகள் முன்னிலையில் அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் … Read more

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் பணி ஆஸ்திரேலியாவில் தொடக்கம்!

சிட்னி, ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது.கிறிஸ்துமஸ் மரம் போன்று 1 லட்சத்து 31 ஆயிரம் ஆண்டனாக்கள் தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் சர்வதேச தளங்கள் இணைந்து 16 நாடுகளின் ஒத்துழைப்போடு இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.இதன்மூலம் அடுத்த 50 ஆண்டுகளில் விண்வெளியில் இருந்து புதிய தகவல்கள் கண்டுபிடிப்புகளை வெளியுலகிற்கு கொண்டுவர முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். #BREAKING: The Australian arm of the world’s largest … Read more

4 மாசமா குளிக்கல… கப்பு தாங்கல – அறை தோழியை விரட்டியத்த பெண்!

காலையில் எழுந்தவுடன் பல் துலக்குதல் முதல் குளியல் வரை, பின்னர் மாலையில் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடன் கை, கால் கழுவுதல் என இதனை தங்களது அன்றாட வாழ்வாக வைத்துக்கொள்ள வேண்டும் என சிறுவயதில் வீட்டில் தொடங்கி பள்ளி வகுப்பு வரை அனைவரும் நமக்கு கற்பித்து வருகின்றனர்.  உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், தலைமுடியை சீராக வைத்தல் என சுகாதாரம் என்பது மிக அவசியமான ஒன்று. ஆனால், பலரும் நேரமின்மை, சோம்பல் காரணமாக உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் … Read more

அலுவலகத்திலேயே தூங்கும் ட்விட்டர் நிறுவன ஊழியர்கள்: எலான் மஸ்க் ஏற்பாடு

சான் பிரான்சிஸ்கோ: அண்மையில் ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் நீண்ட நேரம் வேலை செய்யவும், தேவைப்படும் நேரங்களில் அலுவலகத்தில் தங்க வேண்டும் எனவும் எலான் மஸ்க் மின்னஞ்சல் மூலம் சொல்லி இருந்தார். அதன் காரணமாக ட்விட்டர் ஊழியர்கள் சிலர் தாமாகவே முன்வந்து வேலையில் இருந்து விலகினர். ஆனாலும் மஸ்க் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதன் காரணமாக ட்விட்டர் தலைமையகத்தில் சில அறைகளை ஊழியர்கள் தூங்கும் வகையில் அவர் மாற்றி அமைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை … Read more

ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவை ஈரான் கலைத்ததை நம்ப மறுக்கும் அமெரிக்கா

தெஹ்ரான்: ஈரான் அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளதாக கூறப்படுவதை நம்ப முடியவில்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி … Read more

ஆப்கனில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகள்: இந்தியா கவலை

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் பின்னிப் பிணைந்து இயங்குவது கவலை அளிக்கும் விஷயம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற முதல் மாநாடு புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய அஜித் தோவல், “ஆப்கானிஸ்தானின் … Read more

மன உளைச்சலால் நீதிமன்றத்தில் வழக்கு| Dinamalar

டப்ளின்: அயர்லாந்தில் வேலையே கொடுக்காமல் ‘சும்மா’ வந்து செல்ல ஆண்டுக்கு ரூ.1.03 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும் இதனால் தனக்கு மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெர்மோட் அலஸ்டைர் மில்ஸ் என்பவர் ஐரிஷ் ரயில் நிறுவனத்தில் பைனான்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். 9 ஆண்டுகளாக இவர் காலை 10:00 மணிக்கு வேலைக்கு வந்துவிடுவார். செய்தித்தாள்களை படித்துவிட்டு சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டு வேலையே இல்லாததால் வீட்டிற்கு சென்றுவிடுவாராம். இதற்காக ஓராண்டுக்கு அவருக்கு ரூ.1.03 கோடி சம்பளம் … Read more

கரோனா வைரஸ் மனிதன் உருவாக்கியது – சீனாவின் வூஹான் ஆய்வக விஞ்ஞானி தகவல்

புதுடெல்லி: கரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வக விஞ்ஞானி தனது புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப். இவர் வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது ‘‘வூஹானைப் பற்றிய உண்மைகள் (தி ட்ரூத் அபவுட் வூஹான்)’’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில், கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதுதான். அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹப் கூறியதாவது: வெளிநாட்டு … Read more

கடலில் விமானம் விழுந்து 2 பேர் பலி| Dinamalar

வெனிஸ், அமெரிக்காவின் சிறிய ரக விமானம் ஒன்று, நேற்று முன்தினம் மெக்ஸிகோ வளைகுடா கடலில் விழுந்தது. இதில் பயணித்த சிறுமி மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். விமானத்தின் பைலட்டை தேடும் பணி நடக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்தில் இருந்து, அதே மாகாணத்தில் உள்ள வெனிஸ் நகருக்கு சென்ற சிறிய ரக விமானம், மெக்ஸிகோ வளைகுடாவை கடக்கும்போது பழுது ஏற்பட்டு கடலில் விழுந்து மூழ்கியது. இதில் பயணித்த சிறுமி மற்றும் ஒரு … Read more

மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா அமெரிக்க விஞ்ஞானி பகீர் தகவல்| Dinamalar

நியூயார்க் :’சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வுக் கூடத்தில், மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ்’ என, அங்கு பணியாற்றிய அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்கும் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசின் முதல் பாதிப்பு, சீனாவின் வூஹானில் தான் உறுதியானது. அரசு சாரா ஆய்வு அங்குள்ள வைராலஜி மையத்தில் இருந்து, இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. ஆனால், இதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவைச் … Read more