COP 27: பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் Coca-Cola & PepsiCo!

எகிப்தில் இந்த ஆண்டு COP27 காலநிலை உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. கிரக வெப்பமயமாதல் உமிழ்வைக் குறைப்பதற்கும், காலநிலை தாக்கங்களால் நாசமடைந்து வரும் நாடுகளுக்கு நிதியுதவியை அதிகரிப்பதற்கும் ஆன ஒரு ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட 200 நாடுகள் ஈடுபட உள்ளன. Coca-Cola நிறுவனம் COP27 உச்சிமாநாட்டின் ஸ்பான்சர்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் அந்த நிறுவனம் தான் அதிக பிளாஸ்டிக் மாசுபாட்டை பரப்புகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘பிரேக் ஃப்ரீ ப்ளாஸ்டிக்’ என்ற உலகளாவிய பிராண்ட் தணிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோகோ … Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் 80 சதவீத மீத்தேன் வெளியேற்றத்திற்கு காரணம் 15 நிறுவனங்களே

15 இறைச்சி மற்றும் பால் நிறுவனங்களின் மீத்தேன் வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்திய ஆராய்ச்சியில், ஐந்து பெரிய இறைச்சி நிறுவனங்கள் மற்றும் பத்து பெரிய பால் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மீத்தேன் உமிழ்வுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு மீத்தேன் தடயத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது. “இது என் மனதை உலுக்குகிறது” என்று ஐஏடிபியின் ஐரோப்பிய அலுவலகத்தின் இயக்குநர் ஷெஃபாலி ஷர்மா கூறுகிறார். காலநிலை … Read more

மீண்டும் ஊரடங்கு? பீதியில் மக்கள்; முதல்ல இருந்து ஆடும் கொரோனா!

சீனா நாட்டின் ஊகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரையில் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் கொரோனா தொற்றுக்கு இரையாகி உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் சிறு, குறு மற்றும் பெரிய தொழில் வரை பாதிக்கப்பட்டு உலக நாடுகள் பலவும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன. பல்வேறு அலைகளாக உருமாற்றம் அடைந்த கொரோனோ தொற்று உலகத்தையே ஒரு ஆட்டு … Read more

நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பொருளாதார பயங்கரவாதம்: COP27 இல் ஈரான்

‘பொருளாதார பயங்கரவாதம்’ நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று ஈரானிய துணை அதிபர் செவ்வாயன்று (நவம்பர் 15) ஷர்ம் எல்-ஷேக்கில் COP 27 இல் ஆற்றிய உரையின் போது கூறினார். ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசத் தடைகள் பற்றிக் குறிப்பிடுகையில், பசுமையான பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்தக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை அணுகுவதற்கு தடையாக இருப்பதாக அலி சலாஜெகே கூறினார். ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகள் பற்றி குறிப்பிட்ட ஈரானிய துணை அதிபர், பசுமையான … Read more

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா தீவிர நடவடிக்கை: மத்திய அமைச்சர்| Dinamalar

புதுடில்லி: பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த இந்தியா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறியுள்ளார். எகிப்தில் நடக்கும் ஐ.நா.,வின் பருவநிலை மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசியதாவது: இந்தியாவில் 130 கோடி பேர் வசிக்கின்றனர். இதுவரை உலகின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வில் இந்தியாவின் பங்களிப்பு 4 சதவீதத்திற்கும் கீழ் தான் உள்ளது. தனிநபர் உமிழ்வில், உலக சராசரியில் 3 ல் ஒரு பங்கு என்ற … Read more

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு கொரோனா தொற்று உறுதி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு (வயது 71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர் அங்கிருந்து, தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க லண்டனுக்கு சென்று அங்கிருந்து பாகிஸ்தான் திரும்பிய மறுநாள் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி மரியம் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக பிரதமருக்கு கொரோனா … Read more

இந்தியாவை போல பாக்., உடனும் அமெரிக்கா கண்ணியமான உறவு: இம்ரான் கான் விருப்பம்| Dinamalar

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு கண்ணியமான உறவு இருப்பதை போல், பாகிஸ்தானுடனும் அமெரிக்காவுக்கு கண்ணியமிக்க உறவு இருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது தான் ரஷ்யாவுக்கு சென்றதால், பாகிஸ்தான் மீது அமெரிக்கா கோபத்தில் உள்ளதாக குற்றம் சாட்டினார். பின்னர் நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியடைந்து பிரதமர் பதவியில் … Read more

சொத்தின் பெரும் பங்கை வாழ்நாளிலேயே தொண்டு பணிகளுக்கு அளிக்க ஜெப் பெசோஸ் திட்டம்

வாஷிங்டன், போர்ப்ஸ் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் பெரும் பணக்காரர்களின் வரிசையில் ரூ.10 லட்சத்து 10 ஆயிரம் கோடி சொத்துகளுடன் 4-வது இடம் பிடித்துள்ளவர் ஜெப் பெசோஸ். உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து வந்த ஜெப் பெசோஸ் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில் அதில் இருந்து விலகினார். எனினும், தனது சொத்துகளின் பெரும் பகுதியை தொண்டு சார்ந்த பணிகளுக்கு செலவிட்டு வருகிறார். அவரது மனிதநேயம் சார்ந்த … Read more

சொத்தின் பெரும் பங்கை வாழ்நாளிலேயே தொண்டு பணிகளுக்கு அளிக்க ஜெப் பெசோஸ் திட்டம்

வாஷிங்டன், போர்ப்ஸ் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் பெரும் பணக்காரர்களின் வரிசையில் ரூ.10 லட்சத்து 10 ஆயிரம் கோடி சொத்துகளுடன் 4-வது இடம் பிடித்துள்ளவர் ஜெப் பெசோஸ். உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து வந்த ஜெப் பெசோஸ் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில் அதில் இருந்து விலகினார். எனினும், தனது சொத்துகளின் பெரும் பகுதியை தொண்டு சார்ந்த பணிகளுக்கு செலவிட்டு வருகிறார். அவரது மனிதநேயம் சார்ந்த … Read more

வரலாற்றில் மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள சோமாலியா

மோகாதிஷு: 2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும் மோசமாகலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், டிசம்பருக்குள் சோமாலியாவில் 3 லட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. வரலாற்றில் பண்டைய எகிப்து உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்றுமதி செய்து செல்வ வளமிக்க நாடாகவே சோமாலியா இருந்திருக்கிறது. ரோமானியா அரசுகளுக்கு முந்தைய வரலாற்றை சோமாலியா … Read more