ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புபோராட்டத்தில் 31 பேர் பலி| Dinamalar

பாரிஸ் :ஈரானில், ‘ஹிஜாப்’ அணிவதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் நடத்தி வரும் போராட்டத்தில், 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள, மேற்காசிய நாடான ஈரானில், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தையும், தலை முடியையும் மறைக்கும் துணி மற்றும் தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் கறுப்பு அங்கியை அணிவது கட்டாயமாகும். தீவிரம் அவ்வாறு அணியாதவர்களை கண்காணிப்பதற்காகவே ஒழுக்க கண்காணிப்பு காவலர்கள் உள்ளனர். இவர்கள் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு அபராதம், … Read more

மியான்மரில் சிக்கிய32 இந்தியர்கள் மீட்பு| Dinamalar

புதுடில்லி:தாய்லாந்தில் வேலைக்காக சென்று மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள 90 இந்தியர்களில், 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாங்கி தருவதாக சமூக வலைதளத்தில் போலி விளம்பரங்கள் வந்தன. இதை நம்பி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்ற 80 – 90 பேர், தாய்லாந்து எல்லையில் உள்ள மியான்மர் நாட்டின் மியாவாடி என்ற இடத்தில் சிக்கினர். இந்தப் பகுதி உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், … Read more

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி :அமெரிக்க குற்றச்சாட்டிற்கு வட கொரியா மறுப்பு| Dinamalar

பியாங்யங்: ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்கள வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ச்சியாக அணு ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களை பெருமளவு விநியோகிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனை வடகொரியா மறுத்துள்ளது. இது குறித்து வடகொரியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களை விநியோகிக்கும் திட்டமும் இல்லை. ஏற்றுமதி செய்யும் திட்டமில்லை. அமெரிக்கா வீண் வதந்தியை பரப்புகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 1991-ம் ஆண்டு முதல் ரஷ்யா – … Read more

விண்வெளிக்கு பெண் வீராங்கனையை அனுப்ப சவுதி அரசு அனுமதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரியாத்: முதல்முறையாக விண்வெளி திட்டத்தை துவக்கி பெண் வீராங்கனையை அனுப்ப சவுதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதியில்லாமல் இருந்தது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அந்நாட்டில் பெண் ஆர்வலர்களும், கார் ஓட்ட அனுமதி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு பெண்கள் கார் ஓட்ட சவுதி அரசு அனுமதி அளித்து … Read more

உறவால் இரவில் அலறல் – பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம்

இங்கிலாந்தின் ரெக்ஸ்ஹாம் என்ற பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டின் மோர்கன் என்ற பெண். 41 வயதான மோர்கன் கணவரை பிரிந்து, தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டிலிருந்து இரவு நேரங்களில் அதிகமாக சத்தம் வருகிறது என்றும், அதை காதுக்கொடுத்தக் கூட கேட்க முடியவில்லை என அக்கம்பக்கத்தினர் தொடர்ந்து புகார் கூறி வந்துள்ளனர்.  இதுதொடர்பாக, மோர்கனை 2020ஆம் ஆண்டில் அக்கம் பக்கத்தினர் எச்சரித்துள்ளனர். சத்தமாகப் பாட்டுக் கேட்டதாக முதலில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சத்தத்தைக் குறைத்துக் கொள்ளும்படி … Read more

நெப்டியூன் கிரகத்தின் ஃபோட்டோவை வெளியிட்ட நாசா… எப்படியிருக்குன்னு பாருங்க!

கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்களுடன் இணைந்து, விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் எனும் தொலைநோக்கியை உருவாக்கியது நாசா. கடந்த ஆண்டு டிசம்பரில் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மிக நவீன தொழிற்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, சில மாதங்களுக்கு முன் படம்பிடித்து அனுப்பிய பிரபஞ்சத்தின் ஆரம்ப கால புகைப்படங்கள் விண்வெளி ஆர்வலர்களை மட்டுமின்றி, அனைத்து … Read more

உக்ரைன் போரால் நாட்டை விட்டு வெளியேறிய 1.4 கோடி பேர்: ஐநா கவலை

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக உக்ரைனில் ஒரு கோடியே 40 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்தில் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸ் நிகழ்த்திய உரை விவரம்: உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிடுவதாக தெரியவில்லை. இந்த போர் காரணமாக கடந்த 7 மாதங்களாக சொல்லொண்ணா துயரங்களையும் பேரழிவுகளையும் உக்ரைன் மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த போரின் தற்போதைய நிலை … Read more

ஜேம்ஸ் வெப்பின் புதிய வைரல்: நெப்டியூன் படத்தை வெளியிட்ட நாசா

நியூயார்க்: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட நெப்டியூன் கோளின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசா வெளியிட்ட படத்தில், நெப்டியூன் கோளின் வண்ணமயமான வளையங்களும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நெப்டியூனின் 14 துணைக்கோள்களும் அதில் இடம்பெற்றுள்ளன. நெப்டியூனை சுற்றி வரும் நிலவுகளில் ட்ரைடான் நிலவும் ஒன்று. மிகப் பெரிய அளவையுடைய ட்ரைடான் நெப்டியூனின் வளைவுப் பாதையில் சுற்றி வரும் காட்சியும் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியில் பதிவுச் செய்யதுள்ளது. தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா..! – ஆதரவு கரம் நீட்டும் அமெரிக்கா..!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுபினராக இந்தியா அங்கம் வகிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. உலக தலைவர்கள் பங்கேற்பில் ஐ.நா.சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோபைடன் “ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாக ஆதரித்து வரும் நாடுகளுக்காக நிரந்தர இடங்களும் இதில் அடங்கும் என்றார். ஜோ … Read more

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரை ஐநா கண்டிக்கிறது: செ்ால்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: ஐ.நா. பொதுச்சபையில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிக்கின்றன என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை பிரிக்கவும், பலவீனப்படுத்தி அழிக்கவும் முயற்சிக்கின்றன. அந்நாடுகள் கடந்த 1991ல் ரஷ்யாவை பிரித்ததாகவும், தற்போதும் அதேபோன்று பிரிக்க நேரம் வந்துவிட்டதாக பேசுகின்றனர். ரஷ்யாவை பல நாடுகளாக பிரிக்க வேண்டும் என்கின்றனர்.உக்ரைன், அந்நிய கூலிப்படையினர், நாட்டவர்கள், நேட்டோ பயிற்சி பெற்ற வெளிநாட்டு ராணுவ … Read more