கூந்தலை வெட்டி பெண்கள் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தெஹ்ரான்: ஈரானில் 22 வயது இளம்பெண், சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி அந்நாட்டு போலீசார் அடித்து கைது செய்தனர். போலீசாரின் தாக்குதலில் அப்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்களது கூந்தலை வெட்டியும் போராட்டம் நடத்தினர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது 1979ம் … Read more

பிரிட்டன் மகாராணியின் இறுதிச்சடங்கு பாரம்பரியங்கள்: பல நூற்றாண்டு சம்பிரதாயம்

லண்டன்: இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சவப்பெட்டியை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்லும் சடங்கு ஊர்வலங்கள், பின்னர் வின்ட்சரில் அவர் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு எடுத்து செல்வது என ராணியின் பயணம், பிரிட்டிஷ் முடியாட்சியின் பண்டைய மரபுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது. காலங்கள் மாறினாலும் தங்கள் மரபை மாற்றாமல் அரச குடும்பம் பல நூற்றாண்டு பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுகிறது. பிரிட்டனின் ராயல் நேவி பணியாளர்கள், வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரை பீரங்கி வண்டியில் வைக்கப்பட்ட … Read more

அமெரிக்காவில் பிரதமரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

வாஷிங்டன் : அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் ௭௨வது பிறந்த தினத்தை கொண்டாடினர். பிரதமர் மோடியின் 72வது பிறந்த நாள் நேற்று முன்தினம் நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பிரதமரின் பிறந்த நாளை கொண்டாடினர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்கர்களும் பங்கேற்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ”இந்தியா, உலகின் தலைமையாக மாறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசு அடித்தளமிட்டது. அவரது … Read more

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை.!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கச்சா எண்ணெய்யை கடனுக்கு வழங்கும்படி பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் வளைகுடா நாடுகளிடம் பாகிஸ்தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பாகிஸ்தானுக்கு கடனுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்து வந்தன. உஸ்பெகிஸ்தான் ஷாங்காய் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை மூன்று முறை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கச்சா … Read more

சீனாவில் பஸ் கவிழ்ந்து 27 பேர் பரிதாப பலி| Dinamalar

பீஜிங் : சீனாவில் பஸ் கவிழ்ந்த விபத்தில், 27 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். நம் அண்டை நாடான சீனாவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இங்குள்ள குயுஜு மாகாணத்தில் ௪௭ பயணிகளை ஏற்றிக்கொண்டு, நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று வேகமாகச் சென்றது.அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். 14 … Read more

புதிய விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்: விண்வெளியில் சீன வீரர்கள் நடை பயணம்

பீஜிங், சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. அதன்படி ஷென் டாங், கை சுஹி ஆகிய 2 விண்வெளி வீரர்களும், லியு யாங் என்கிற வீராங்கனையும் கடந்த 5 மாதங்களாக விண்வெளியில் தங்கியிருந்து, ‘தியான்ஹே’ என பெயரிடப்பட்டுள்ள புதிய விண்வெளி நிலையத்தை அமைக்கும் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு … Read more

ஜப்பானை மிரட்டும் நான்மடோல் புயல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ : ஜப்பானில் சக்தி வாய்ந்த புயல் கரையை கடப்பதால் கடலோரத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.கிழக்காசிய நாடான ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கியூஷூ தீவில் உள்ள ககோஷிமா நகரை நேற்று சக்தி வாய்ந்த ‘நான்மடோல்’ புயல் கரையை கடந்து, வடக்கு நோக்கி நகர்வதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மணிக்கு 162 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும், இந்தப் புயல் … Read more

சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு – புதிதாக 1,189 பேருக்கு பாதிப்பு உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 718 பேருக்கும், … Read more

உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்-பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். ராணி உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளிலும் உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பு காரணமாக, 8ம் தேதி இரவு காலமானார்.ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து அவரது உடல், 14ம் தேதி … Read more

அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் லாங்மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதியது. அதை தொடர்ந்து 2 விமானங்களும் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் செஸ்னா 172 ரக விமானத்தில் பயணம் செய்த 2 … Read more