தற்கொலைப் படை தாக்குதல் சோமாலியாவில் 15 பேர் பலி| Dinamalar

மொகாதிசு : கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரான மொகாதிசுவில், ஜெனரல் தகபதன் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இங்கு, நேற்று முன் தினம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், ௧௫ அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு, மே மாதம் அதிபர் ஹசன் ஷேக் மொகமுத் தலைமையில், அல் குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் அமைப்பை எதிர்கொள்வது குறித்து, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து, கடந்த வாரம், மொகாதிசுவில் நடத்தப்பட்ட … Read more

சுட்ட இடத்துக்கு வரும் இம்ரான் கான்; பாகிஸ்தான் அரசு பரபரப்பு உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 3ம் தேதி பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்று இருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார். நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியதால் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டதாக, கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இம்ரான் கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான … Read more

சித்திரவதை செய்து உயிரைக் குடிக்கும் Gympie-Gympie செடியை ஆசையாய் வளர்க்கும் நபர்!

வாழ்க்கையில், போர் அடிப்பதாக இருந்தாலோ, அல்லது அலுப்பாக இருந்தாலோ, பெரும்பாலானோர் மனதிற்கு பிடித்த காரியங்களை செய்வார்கள். ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஒரு அதிசய நபர், தனக்கு வாழ்க்கை ரொம்ப போராக இருப்பதால், மிகவும் ஆபத்தான செடி ஒன்றை வளர்த்து வருகிறார். ரிஸ்க் என்பது இவருக்கு ரஸ்க் சாப்பிடுவதைப் போல உள்ளதாக தெரிகிறது. பல ஆபத்தான மற்றும் கொடிய தாவரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் Gympie-Gympie என்ற தாவரமானது உலகிலேயே மிகவும் ஆபத்தான தாவரமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், … Read more

Breaking News: ஏரியில் விழுந்த விமானம்; தண்ணீரில் மூழ்கிய பயணிகள்!

தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து கொண்டு இருந்தனர். இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக விக்டோரியா ஏரியில் விழுந்து ( Plane Crash ) விபத்துக்கு உள்ளானது. இன்று அதிகாலை நடந்து விபத்துக்கு அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் … Read more

டான்சானியாவில் ஏரியில் விழுந்து நொறுங்கிய விமானம்: 20 பயணிகள் மீட்பு; பலர் மாயம்

டான்சானியா: ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் பயணிகள் விமானம் ஒன்று விக்டோரியா ஏரியில் நொறுங்கி விழுந்தது. விமானத்தில் 49 பேர் பயணித்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான செய்தி அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர், உள்ளூர் மக்கள், மீனவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அது முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியது உறுதியானது. புக்கோபா விமானநிலையத்தின் ரன் வேயின் ஒரு பகுதி … Read more

தான்சானியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம்: மீட்பு பணி தீவிரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொடோமா: தான்சானியாவில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் மோசமான வானிலை காரணமாக, ஏரிக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்து இதுவரை 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.தான்சானியாவின் வான்ஜா என்ற நகரில் இருந்து புகோபா என்ற நகருக்கு 49 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டிருந்தது. புகோபா விமான நிலையம் அருகே தரையிறக்க வேண்டிய நேரத்தில் விமானம், மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்தில் இருந்து 100 மீட்டர் … Read more

பாடம் சொல்லி தராமலேயே ஆசிரியர்களுக்கு சம்பளம்; மாதம் ரூ.4 கோடி இழப்பு… இங்கல்ல பாகிஸ்தானில்

லாகூர், ஆசியாவில் மாணவ மாணவிகளுக்கு தரமிக்க கல்வி வழங்காத மோசம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. 2017-ம் ஆண்டில், பாலின சமத்துவத்தில் 2-வது மோசம் நிறைந்த நாடாக பாகிஸ்தான் தர வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது என தி நேசன் பத்திரிகை தெரிவித்து இருந்தது. அதிலும், பெண்கள் கல்வி கற்பதில் பல தடைகள் உள்ளன. 2010-ம் ஆண்டு ஐ.நா. அறிக்கை ஒன்றின்படி, பாலின அதிகாரமளித்தலில் 94 நாடுகளில் பாகிஸ்தான் 92-ம் இடம் வகித்தது. பாலினம் தொடர்புடைய வளர்ச்சி குறியீட்டில் … Read more

தேர்தல் பிரசாரம்… இந்தியாவை வம்புக்கு இழுத்த முன்னாள் பிரதமர்!

நேபாளத்தில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி) தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியபோது, ‘ நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட அண்டை நாடுகளுக்கு விட்டு தரமாட்டோம். எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இந்திய ஆக்கிரமிப்பு பகுதிகளான காலாபானி, … Read more

இந்திய அணி 186 ரன்கள் குவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன்: டி-20 உலக கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 186 ரன்கள் குவித்தது. ராகுல், சூர்யகுமார் அரைசதம் அடித்தனர். டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி மெல்போர்ன் நகரில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணிக்கு ராகுல், ரோகித் வழக்கம்போல் துவக்கம் தந்தனர். … Read more

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்தா, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனசியா குலுங்கியது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. தீவுக்கூட்டங்கள் நிறைந்த இந்தோனாசியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. தினத்தந்தி Related Tags : இந்தோனேசியா நிலநடுக்கம்